PDA

View Full Version : ஹைக்கூ



inban
05-02-2012, 04:18 AM
துளிர்த்த வியர்வை
நழுவி விழுந்தது
புனிதமானது சமுத்திரம்

பென்ஸ்
06-02-2012, 05:26 PM
காதலியின் ஒரு துளி வியர்வையால்
இந்த சமுத்திரமே இனிப்பாக ஆனதா..
அடடே...

inban
06-02-2012, 10:57 PM
இங்கு காதல் எங்கிருந்து வந்ததாம்
நான் உழைப்பை சொன்னேனாக்கும் :lachen001:
நன்றி சார்

aren
07-02-2012, 10:50 AM
வியர்வையினால் கிடைத்த உழைப்பால் கடலில் இருக்கும் உப்பு நீரும் புனிதமாக மாறுகிறதோ. நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

ஆதவா
07-02-2012, 11:58 AM
இங்கு காதல் எங்கிருந்து வந்ததாம்
நான் உழைப்பை சொன்னேனாக்கும் :lachen001:
நன்றி சார்

கவிதை இவ்விரண்டுக்கும் பொருந்தும்... அதுமட்டுமல்ல, வேறு சிலவுக்கும்!!!
கவிதை இதைத்தான் உணர்த்துகிறது என்று கவிஞன் முடிவு கொள்வானேயானால் தீர்க்கமான தலைப்பு இருக்கவேண்டும்.

ஹைக்கூ வடிவம் நன்றாக இருக்கிறது, கவிதை "உழைப்பு" என்ற தலைப்பைக் காட்டிலும் காதல் என்ற தலைப்புக்கு கனக்கச்சிதமாகவே பொருந்துகிறது!!

வாழ்த்துகள் இன்பன்!

சிரிக்கும் பொம்மைகள் ஏளனத்தையும் காட்டிக் கொடுக்கலாம், - கவனம் தேவை!

inban
07-02-2012, 01:05 PM
உண்மைதான் கவனத்தோடு இருக்க முயல்கிறேன்

மற்றபடி நீங்கள் குறிப்பிடும் வேறு சிலவெல்லாம்
எதுவும் எனக்குத் தெரியாது

நீண்டநாளைக்கு பிறகான
உங்களின் விமர்சனத்துக்கு நன்றி

அமரன்
07-02-2012, 09:40 PM
கவிதை இவ்விரண்டுக்கும் பொருந்தும்... அதுமட்டுமல்ல, வேறு சிலவுக்கும்!!!
கவிதை இதைத்தான் உணர்த்துகிறது என்று கவிஞன் முடிவு கொள்வானேயானால் தீர்க்கமான தலைப்பு இருக்கவேண்டும்.

ஹைக்கூ வடிவம் நன்றாக இருக்கிறது, கவிதை "உழைப்பு" என்ற தலைப்பைக் காட்டிலும் காதல் என்ற தலைப்புக்கு கனக்கச்சிதமாகவே பொருந்துகிறது!!

வாழ்த்துகள் இன்பன்!

சிரிக்கும் பொம்மைகள் ஏளனத்தையும் காட்டிக் கொடுக்கலாம், - கவனம் தேவை!

உம்ம கண்ணாடியை மாற்றும்...:icon_b:

அமரன்
07-02-2012, 09:42 PM
’உழைப்பின்’ உச்சம் சொல்லும் கவிதை..
பெருங்கடல் சிறுதுளியாகி உச்சியில் வீழ்ந்தாற்போல்...

inban
08-02-2012, 12:25 AM
’உழைப்பின்’ உச்சம் சொல்லும் கவிதை..
பெருங்கடல் சிறுதுளியாகி உச்சியில் வீழ்ந்தாற்போல்...

நன்றி சார்

வெற்றி
08-02-2012, 02:59 AM
மீனவனை பெருமை கொள்ள வைக்கும் கவிதை

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 11:52 AM
கடல் நீர் உப்பாக மாறியது வியர்வைத்துளிகளால் மட்டுமா...மனிதனுடைய மலம் மற்றும் கழிவுகளாலும் தான். இப்போது அணுசக்தி கழிவுகள் வேறு....என்னமாய் மாறப்போகிறதோ:sprachlos020:
கவிதை நன்று இன்பன் :)

vasikaran.g
02-04-2012, 03:40 AM
நன்று இன்பன் ..