PDA

View Full Version : கடைசி வார்த்தைமன்மதன்
21-12-2003, 03:27 PM
ஒரு நாள் இரவில் மூன்று நண்பர்கள் பாரில் தண்ணி அடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியவுடன் தன்னை மறந்த நிலையில் பாரை விட்டு வெளியே வந்தனர்.
அடுத்த நாள் அவர்கள் கண்விழித்து பார்த்தபோது அவர்கள் ஜெயிலில் இருந்தார்கள் . அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களால் முந்தின இரவு என்ன நடந்தது என்று ஞாபகபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.

அன்றே அவர்களுக்கு எலெக்ட்ரிகல் நாற்காலியில் உட்காரவைத்து மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்தது.

முதலில் ஒருத்தனை உட்கார வைத்து 'உன் கடைசி வார்த்தை என்ன?' என்று கேட்டார்கள்.
அவன் 'நான் செயின்ட் பீட்டர் காலேஜ் மாணவன். எனக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொன்னான்.' அவனுக்கு மின்சாரன் எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை.
கடவுள் இவனுக்கு மரணம் கொடுக்க விரும்பவில்லை என்று அவனை விடுதலை செய்தார்கள்.
அடுத்து வந்தவனிடம் இதே கெள்வி , அதற்கு அவன் ' நான் வேளான்மை கல்லூரி மாணவன், வாரமிருமுறை கோவில் செல்வேன். எனக்கு கடவுள் பக்தி அதிகம்'. என்று கூறினான்.
அவனுக்கு எதும் ஆகவில்லை. அவனையும் கடவுள் தண்டிக்கவிரும்பவில்லை என கருதி அவனையும் விடுதலை செய்தார்கள்.
மூன்றாமவன் வந்தான். அவனிடமும் அதே கேள்வி.
அதற்கு அவன் ' நான் கவர்மென்ட் காலேஜ் மாணவன். எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் துறையை சேர்ந்தவன். இந்த இரண்டு வயரையும் கன்னெக்ட் பண்ணாமல் நீங்கள் இந்த நாற்காலிக்கு மின்சாரம் பாய்ச்சவே முடியாது'

---- கடவுள் அவனது பாவத்தை மன்னிப்பாராக.

இக்பால்
21-12-2003, 06:41 PM
:)

pgk53
22-12-2003, 01:47 AM
நல்ல ஜோக் நண்பரே

poo
22-12-2003, 01:21 PM
புரியலயே.... சரி.. வேணாம் விடுங்க!!

இக்பால்
22-12-2003, 06:19 PM
மன்மதன்...பூ தம்பியை விட்டு விடலாமா?!!!

Nanban
24-12-2003, 09:31 AM
புரியலயே.... சரி.. வேணாம் விடுங்க!!

புரியலைன்னா, இக்பால் மாதிரி emoticons ஒன்றை எடுத்துவுட்ற வேண்டியது தானே.......!!!

(இப்போ, மீண்டும் இக்பால் :evil: , அடிக்க வரப்போகிறார். .....)

மன்மதன்
24-12-2003, 01:59 PM
பூ-வுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லணும்..
முதல் இரண்டு பேர் . தப்பித்து விட்டார்கள்.
மூன்றாமவன் எலெக்ட்ரிக் துறையை சார்ந்தவன்.அதுவே அவன் சாவுக்கு முடிவாகி விட்டது.
வயர் இரண்டையும் இணைத்து அவனுக்கு மரணதண்டனை வழங்கிவிட்டனர்.

இளசு
25-12-2003, 01:10 AM
இனி இன்ஜினியரிங் குறிப்பாய் எலக்ட்ரிகல் பிரிவு ஆட்களிடம் நட்பு இல்லை... :lol:


பாராட்டுகள் மன்மதன்..

அறிஞர்
25-12-2003, 07:21 AM
ஆளை...பார்த்துதான்.. கேள்வி கேட்கனும் போல்....

aren
26-12-2003, 08:56 AM
விடுதலையான இரண்டு பேரும் என்ன ஆனார்கள். ஓடிவிட்டிருப்பார்கள் என்று நினைக்க்றேன். பாவம் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்தவர்களுடன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

அமரன்
30-05-2008, 05:10 PM
நுணலும் தன் வாயால் கெடும்.


இனி இன்ஜினியரிங் குறிப்பாய் எலக்ட்ரிகல் பிரிவு ஆட்களிடம் நட்பு இல்லை... :lol: ..

நம்ம மன்றத்துல, எனக்குத் தெரிந்து ஒரு எலக்ரிகல் இஞ்சினியர் இருக்கார். :)

மலர்
30-05-2008, 05:14 PM
அய்யோ பாவம்......:mad: :mad:
வாயை வச்சிட்டு கம்முன்னு சும்மா இருந்திருக்கலாம்.....:frown: :frown:

மன்மதன்
31-05-2008, 10:12 AM
அய்யோ பாவம்......:mad: :mad:
வாயை வச்சிட்டு கம்முன்னு சும்மா இருந்திருக்கலாம்.....:frown: :frown:


அவன் மலரின் நண்பனாக இருந்திருப்பான்.. ஓட்ட வாயி..:lachen001:

பூமகள்
31-05-2008, 12:24 PM
இடம் பொருள் ஏவல் தெரிஞ்சி பேசனும்னு சும்மாவா சொன்னாரு நம்ம
பெரியண்ணா??!!

அதி மேதாவித்தனம் கூடாதுன்னு புரிஞ்சுக்கும் முன்பே... போய்ச் சேர்ந்துட்டாரே...!!

சிரிப்பில் இடம் பெற்றாலும் கருத்து "ஹாக்" அ(க)டிச்சிட்டது...!!

நம்ம மன்றத்துல, எனக்குத் தெரிந்து ஒரு எலக்ரிகல் இஞ்சினியர் இருக்கார். :)
எனக்கும் தெரியுமே...!! ;) :D:D