PDA

View Full Version : உனக்குத்தெரியுமா?



ஷேக் முஹைதீன்
30-01-2012, 07:43 AM
உன் இதயக் காகிதத்தில்
நான் என்னை எழுதிவிட்டவன்!
என்னை கிழிப்பதாய் நீ
உன்னையே கிழித்துக் கொள்கிறாய்..


என் காதல் கண்ணாடியை
உடைத்துவிட்டதாய் பெருமை படாதே..
உற்றுப்பார்..
சிதறியிறுப்பது நீதான்!


அமுதம் பருகும் ஆசையோடு உன்
அருகினில் வந்தேன்
உன் உதட்டுக்கோப்பையில் நீ
ஊற்றிவைத்திருப்பது திராவகம்!


ஒருவேளை நீ என்னை
கனவு காண்கிறாய் என
நான் கனவு காண்கிறேனோ?..


பிடிக்கவில்லை என எப்படி
சொல்லிவிட்டாய்?
இதயத்தின் ஆழத்தில் கொள்ளியிட்டாய்!


ஏற்கனவே நான் உன்னை
மனதால் மணம் முடித்தவன்
அதனால்தான் வார்த்தைகளால்
விவகாரத்து செய்தாயோ?


காதல்சபையில் உன்னைபாடிய
இந்தபுலவனுக்கு பரிசாய்தந்தது
கல்யாண பத்திரிக்கையா?


பொற்காசுகளுக்கு பாடும்
புலவர்களுக்கு மத்தியில்
ஒரு பொற்ச்சிலைக்காக பாடிய
புலவன் நான் மகளே!


உனக்குத்தெரியுமா?
என் கவிதை பட்டாசுகளுக்கு
நீதான் நெருப்பு!


உன் கருவிழிபபரத்திற்கு நான்
கயிறாக இருக்கிறேன்..
நீயோ கயிறை சுற்றவைத்த
பம்பரம்!


உன் வெறுப்பு பார்வை அலைகளால்
என்னைவிரட்டினாலும்
முத்தான காதலை உன்னுள்
மூடியே வைத்திருக்கிறாயோ?


நீ என்னிடம் சிரித்த
ராத்திரிகளை சிவராத்திரிகளாகவும்
அழுத பொழுதுகளை அமாவாசையாகவும்
அனுஸ்டித்தவனை போய்
நாத்தீகன் என்கிறாய்!


தன்னை நிராகரித்தவர்களுக்கும்
சேர்த்தே ஒளி தரும் நிலவு!


நான் நிலவு!
mbsheik143.blogspot.com