PDA

View Full Version : மனப்புண்சிரிப்பு



அக்னி
25-01-2012, 12:17 PM
காயங்களை
மனதுக்குள் புதைத்தது நான்..,
காயம்செய்து
மனதையே புதைத்தது நானல்ல...

என் மனம் என்ன விதையா,
புதைத்தால் துளிர்க்கவும்,
துளிர்த்துச் சிரிக்கவும்?

மனம் புன்சிரிக்கவில்லை,
மனப்புண் சிரிக்கின்றது.

மா ரணம் மரணத்தில்
முடியாது..,
மரணத்தோடுதான்
முடியும்...

காரணம்,
புதைக்கப்பட்டது
என் மனம்தானே அன்றி,
நானல்லவே...

கீதம்
26-01-2012, 12:11 AM
நாண் இன்றி எய்யப்பட்ட
நாவம்பு தைத்த காயத்தை
நான் என்று அறியாத
காயத்திலேயே புதைத்தாய்!

புதைத்தவை யாவும்
ஒருநாள் புதையலாகும்!
மண்டையோடுகளும்
மனித சரித்திரம் பேசும்!

அக்னித்தணலில்
அழகாய் வார்க்கப்பட்டு
பிரதாபிக்கும் வரிகளில்
பட்டமனம் பிரதிபலிக்கும்.

அக்னி
26-01-2012, 12:39 PM
மண்டையோடுகள் சரித்திரம் பேசாவிட்டாலும்,
மண்டையோடான சரித்திரம் சொன்னாலே போதும்...

புதையலைப் புதைத்துப் புதையல் தோண்டுவது
பெருமையும் அல்ல.., புதுமையும் அல்ல...

அருமையாகச் சொன்ன அக்காவுக்கு நன்றி.