PDA

View Full Version : பில்கேட்ஸின் மறுபக்கம் 1. Dos - ஐ கிராஸ் செய்த Boss!



lavanya
20-12-2003, 09:09 PM
[b]வில்லியம் ஹென்றி பில்கேட்ஸ் - மறு பக்கம்

[u]1. Dos - ஐ கிராஸ் செய்த Boss!

இளம் வயதிலேயே நிறைய சாதித்தவர்,பெரும் செல்வந்தர்,மைக்ரோ சா�ப்டின்
அதிபதி விண்ணை அளக்கும் விண்டோஸிலிருந்து டாட்நெட் தொழில்நுட்பம்
வரை தடம் பதித்தவர் இவரை பற்றி 'ஒர் சாமானியன் சரித்திரமான கதை '
என்று ஒரு பதிவு தந்திருந்தேன்.

இவர் இப்படி முன்னேறியதுக்கு இன்னும் சில
காரணங்கள் உண்டு.அதை அங்கே தருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகிவிடும்
என்பதால் அதை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்.

நம் மன்றம் நடுநிலைமையானது...அதை கருத்தில் கொண்டு இதை இங்கே
தர அனுமதி தந்த பப்பி அவர்களுக்கு நன்றி.
1. Dos - ஐ கிராஸ் செய்த பாஸ்

MS DOS என்பது பில்கேட்ஸை செல்வந்தராக்கிய முதல் மென்பொருள். ஆனால் அவர் சொந்தமாகவே தயாரித்த மென்பொருள் அல்ல. இதன் ஒரிஜினல் மூலம் QDOS (Quick and
Dirty Operating System) என்பதன் வழித்தோன்றலே....அப்போது ஏற்பட்ட ஐபிஎம் நிறுவன
ஒப்பந்தத்துக்காக அதில் தன் இயக்கத் தொகுப்புடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக
அந்த QDOS ன் உரிம பதிப்பை அதிக விலை கொடுத்து வாங்கி அதை மென்மேலும்
வலுப்படுத்தி பில்கேட்ஸ் தன்னுடையதாக்கி கொண்டார்.




1. ஐ.பி.எம்முடன் என்ன பிரச்னையோ தெரியவில்லை. நடுவில் கொஞ்ச நாள் கோபித்துக்
கொண்டு பில்கேட்ஸ் இண்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு விண்டோஸ�ம்
இண்டெல்லும் இணைந்து இனி உலகை ஆளும் .விண்டெல் என்று புதிய தொழில்நுட்பம்
ஒன்று வரும் என ஒரு அறிக்கை விட்டார். இண்டெல் புத்திசாலி.தற்காத்துக் கொள்ளும்

2. ஆரக்கிள் நிறுவனதுடன் என்ன பிரச்னையோ தெரியவில்லை. தன்னுடைய எஸ்கியூஎல்
சர்வர் 2000 - ஐ தீவிரமாய் தயாரித்து வெளியிட்டார்.ஆரக்கிள் கடுப்பாகி போர்லாண்டு
நிறுவனத்துடன் சேர இப்போது ஜாவா டெவலப்பர் என ஆரக்கிள் தரவு தளத்திற்கு
முன்னணி புல மென்பொருளை வெளிக்கொண்டு வெளிக்கொண்டு வந்தது...

3. போர்லாண்ட் டெல்பி விசுவல் பேஸிக்குக்கு எதிராக கொண்டு வந்திருக்கும் டெல்பி
என்ற மென்பொருள் ஒரு 100 சதவீத பொருள் சார்ந்த மொழியாக (Object
Oriented Language) கருதப்படுகிறது. ஆனால் இதையும் மைக்ரோசா�ப்ட் எவ்வவிட
வில்லை.இது போலவே போர்லாண்டு சி++ இன்னும் ஏனையவைகளை சொல்லி
கொண்டே போகலாம்.

4. சன் மைக்ரோ சிஸ்டத்தின் ஜாவாவை ஓரம் கட்ட மைரோசா�ப்ட் சி ஷார்ப் என்ற
மொழியை தயாரித்து வெளியிட்டது.ஆனால் சுதாரிப்பான மக்கள் இதை அவ்வளவாக
வரவேற்கவில்லை.இன்னும் ஜாவா அதன் தனித்தன்மையை இழக்க வில்லை.

இளசு
20-12-2003, 10:36 PM
லாவ்...
உங்கள் முனைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது..
மன்றத்தின் மீது உங்கள் பற்று கண்டு
நிஜத்தில் பூரிக்கிறேன்.
இந்த மாதம் லாவ் மாதமென்றே ஆகிவிட்டது.
நேற்று பப்பி அவர்கள் பில்லின் மறுபக்கம் பற்றிக்
கேட்க, நீங்கள் மறுநாள் தருவதாய்ச் சொல்ல
இன்று தந்தே விட்டீர்கள்.

சாதனை முகம் சொல்ல ஒரு பதிவு..
மறுபக்கம் சொல்ல பஞ்ச முகப்பதிவு...!!!!!


எனக்குக் கணினித்துறையில் பரிச்சயம் இல்லை.
Basic மொழி பற்றி கொஞ்சம் வகுப்பு போய்
பேஸிக்காய் இதுக்கான மூளை நமக்கில்லை என
பேசிக்காமல் நழுவிவிட்டவன் நான்.

அடுத்தவரை அழித்து முன்னேறுவது ஒரு வகை.
அடுத்தவரை விட அதிகமாய் வளர்ந்து முன்னேறுவது ஒரு வகை.

தற்காலத்தில் முதல் வகையே பிரதானம்..
மறு கோட்டை அழித்துவிட்டால்
நம் கோடே பெரியது.

யுத்த தர்மம் போல் வியாபார தர்மம் என்று ஒன்று இருக்கலாம்.
அதற்குள் இவரின் செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியுமா?
எனக்குத் தெரியவில்லை. விளக்குங்கள்.

ஒருவர் பலரை அழித்து தொடர்ந்து வெற்றி வில்லனாய் பரிமளித்தால்
அது இவரின் வேட்டை மனப்பான்மையால் மட்டுமா?
தோற்றவர்கள் தோற்றதன் காரணம் -
நேர்மை, Ethics - தந்த பலவீனம் மட்டுமா?
தெரியவில்லை.

பில்லின் வெற்றிக்கான அணுகுமுறை மற்றவர் கையாளத்தயங்கும் அளவு
அசிங்கமானதா?
விளக்கினால் புரிந்துகொள்வேன். நன்றி..

முத்து
21-12-2003, 12:01 AM
லாவண்யா அவர்களே ...
மிக அருமை ..
இதுவரை உங்களின் திரைவிமர்சனங்களை மட்டுமே
ரசித்துக்கொண்டிருந்தோம் ...
இன்று ...
லாவண்யாவின் எல்லைக் கோடு மிக நீண்டுவிட்டது ..
பார்த்தது , ரசித்தது , கேட்டது என இதுவரை
நாங்கள் கேள்விப்படாதது அத்தனையும்
அமர்க்களமாய்க் கொடுக்கிறீர்கள் ...
நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் ...

நிலா
21-12-2003, 12:15 AM
என்ன விமர்சனம் எழுதுவது என நினைத்தபடியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அடுத்த பதிவுக்குப்போகிறேன்!

வாழ்த்துகள்!

இளந்தமிழ்ச்செல்வன்
21-12-2003, 09:12 AM
லாவண்யா உங்களது நேர்மையையும், மன்றத்தின் மீதுள்ள அன்பையும், மதிகும் பண்பையும் பாராட்டுகிறேன்.

நல்ல தகவல் மற்றும் உங்கள் சிரத்தையும்.

poornima
18-01-2009, 08:59 AM
லாவ் குறிப்பிட்ட அந்த 'ஒரு சாமானியன் சரித்திரமான கதை'யும் விரைவில் ஒருங்குறி ஆக்கப்படும்.