PDA

View Full Version : இதுதான் உலகம்



M.Jagadeesan
25-01-2012, 03:04 AM
நிமிர்ந்து நடந்தபோது திமிர் பிடித்தவன் என்றார்கள்
குனிந்து நடந்தபோது வேஷம் போடுகிறான் என்றார்கள்
நேருக்குநேர் பார்த்தபோது வெட்கம் இல்லாதவன் என்றார்கள்
ஓரக் கண்ணால் பார்த்தபோது திருடன் என்றார்கள்
உண்மை பேசியபோது பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள்
பொய் பேசியபோது அண்டப் புளுகன் என்றார்கள்
உதவி செய்தபோது காக்காய் பிடிக்கிறான் என்றார்கள்
உதறித் தள்ளியபோது இரக்கம் இல்லாதவன் என்றார்கள்
அஹிம்சை பேசியபோது கோழை என்றார்கள்
ஆயுதம் ஏந்தியபோது முரடன் என்றார்கள்
வேட்டி கட்டியபோது பழைய பஞ்சாங்கம் என்றார்கள்
பரட்டைத் தலையுடன் கிழிந்த ஆடை அணிந்து
நண்பர்களுடன் அரட்டை அடித்தபோது
நாகரிகமானவன் என்றார்கள்.

கீதம்
26-01-2012, 12:27 AM
கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போது, 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா' என்னும் கா.மு.செரிப் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. ஆனால் கடைசிவரி மனக்கருத்தைப் புரட்டிப்போட்டுவிட்டது. இன்றைய காலத்தின் கோலத்தைச் சொன்னது ரசிக்கும்படி இருந்தது. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
26-01-2012, 12:31 AM
நன்றி கீதம்.

அக்னி
26-01-2012, 12:28 PM
என்ன செய்வது...

நாகரிகம் இல்லாதிருப்பதே
நாகரிகம் என்றாகிவிட்ட
நாகரிக காலத்திலல்லவா வாழ்கின்றோம்...

கீதம் அக்கா சொன்னதுபோல, எதைச் செய்தாலும் குற்றம் சொல்லும் சுற்றத்தை கவிதை மிகவும் சாடி நிற்கின்றது.

ரசிப்போடு சிந்திக்கவும் வைத்த கவிதை.

பாராட்டுக்கள்...

M.Jagadeesan
26-01-2012, 12:56 PM
அக்னி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

vasikaran.g
30-01-2012, 03:09 AM
அதுதான் உலகம் ..

M.Jagadeesan
30-01-2012, 03:26 AM
வசீகரனின் பின்னூட்டத்திற்கு நன்றி

தாமரை
30-01-2012, 09:27 AM
பரட்டைத் தலையுடன் கிழிந்த ஆடை அணிந்து
நண்பர்களுடன் அரட்டை அடித்தபோது
நாகரிகமானவன் என்றார்கள்.

உலகம் எப்படி இருக்கிறது என்பதை அது யாரைப் புகழ்கிறது யாரை நம்புகிறது என்பதைக் கொண்டே சொல்லிவிடலாம் போல இருக்கிறதே...

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 03:27 PM
இதுதான் உண்மை நிலை...கூடவே கிழிந்த ஜீன்ஸ் பாண்ட்ஸ் ம் அணிந்திருந்தால் நாகரீகத்தின் உச்சக்கட்டத்துக்கே போய்விட்ட நினைப்பு. கவிதை அருமை.:)