PDA

View Full Version : யாருக்காக ஊளையிட்டது?



M.Jagadeesan
25-01-2012, 01:58 AM
ஒருநாள் இரவின் ஜாமத்தில்
தெருநாய் ஒன்று ஊளையிட
பேயும் அஞ்சி நடுங்கியதே!
ஊரார் ஒடி ஒளிந்தனரே!

நாயின் ஊளைச் சத்தத்தால்
நடக்கும் மரணம் என்பார்கள்
ஊரார் அஞ்சி நடுங்கினரே!
யாரோ இறப்பர் என்றனரே!

ஈளை நோயின் தாக்கத்தால்
நாளை எண்ணும் ஒருகிழவன்
அடுத்த வீட்டில் இருந்தனனே!
அவனே உயிர்ப்பலி என்றனரே!

மறுநாள் காலை எழுந்தவுடன்
தெருநாய் இறந்து கிடந்ததுவே!
யாரோ ஒருவன் வழிப்போக்கன்
காரை ஏற்றிக் கொன்றனனே!

நாயின் ஊளைச் சத்தத்தால்
நடக்கும் மரணம் என்பார்கள்
தனக்குத் தானே மரணத்தை
நாயும் தேடிக் கொண்டதுவே!

கீதம்
26-01-2012, 12:22 AM
மூடநம்பிக்கை சாடும் பாடலும் கருவும் மிக நன்று. பல்லியின் வரிசையில் பலியான தெருநாய். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
26-01-2012, 12:25 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி.