PDA

View Full Version : பில்கேட்ஸின் மறுபக்கம் 2. பேஸிக்(BASIC)கை washout ஆக்கிய கதை



lavanya
20-12-2003, 09:07 PM
2. பேஸிக்(BASIC)கை washout ஆக்கிய கதை

1964 - ல் John Kemney மற்றும் Tom Kurz என்ற இரண்டு Dartmouth கல்லூரி
பேராசியர்களால் உருவாக்கப்பட்டது பேஸிக் மொழி. போர்ட்டான் போன்று கடினமாக
இல்லாமல் எல்லோர்க்கும் ஏற்ற மொழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்
இது உருவாக்கப்பட்டது. ஐபிஎம் PC முதலில் வெளியான போது பேஸிக்கின் சிறிய
பதிப்பு ஒன்றை கம்ப்யூட்டரின் ரோம் (ROM) சிப்பில் பதிவு செய்து வெளியிட்டது.
கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் முதலில் திரையில் பேஸிக் வரும்.பின்பு ஐபிஎம்
கம்பெனி PC டாஸை வெளியிட்டபோது பேஸிக்கை BASICA என பெயரிட்டு
முதன் முதலில் டிஸ்க்கில் வெளியிட்டது.

அதற்கு பிறகு ஐபிஎம் நிறுவனத்துடன் MS DOSக்காக ஒப்பந்தம் ஏற்படுத்தி
கொண்ட பில்கேட்ஸ் தன் இயக்க தொகுப்பு வரும்போது இன்னொரு மென்பொருள்
வருவதா என கருதி பேஸிக்கை வாங்கி கொஞ்சம் இத்யாதிகள் மராமத்து வேலை
செய்து GW BASIC ( Graphics With Basic) என்று வெளியீடு செய்தார்

இதற்கிடையில் Borland Company பேஸிக்கை Turbo Basic என புதிய
முறையில் உருவாக்கி பெயரிட்டு சந்தைக்கு அனுப்பியது. பில்கேட்ஸின் பேஸிக்
முன்னால் அதாவது எதிராளியை வளரவிடுவது இல்லை என்ற பேஸிக்குக்கு முன்னால்
அதனால் தாக்கு பிடிக்க முடியவில்லை.இம்முறை Spectra Publishing என்ற நிறுவனம்
போர்லாண்ட் பேஸிக்கை நிறைய மாற்றங்கள் செய்து Power Basic என்று பெயரிட்டு
வெளியிட்டது...

எல்லாவற்றையும் ஓரங்கட்டி அதெயெல்லாம் வீட்டுகு அனுப்ப முடிவு
செய்து பில்கேட்ஸ் MS DOS 5.0 க்கு மேற்பட்ட பதிப்புகளில் QBASIC என்ற
மிகவும் அட்வான்ஸான பேஸிக் புரோக்ராமை இணைத்து வெளியிட்டார். அதற்கு
பிறகு பேஸிக் பற்றி யாரும் மூச்சு விட முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக
விசுவல் பேசிக் என்ற தற்போதைய மென்பொருள் அவருக்கு நிரந்தர முகவரி அமைத்து
தந்திருக்கிறது.

இளசு
20-12-2003, 10:38 PM
பல ஆண்டுகளுக்கு முன் பேசிக் பாடத்தால் கைகழுவப்பட்டவன் நான் என்பதால் ஜாவா மன்னிக்கவும் ஜகா வாங்கிக்கொள்கிறேன் லாவ்..
:D

முத்து
21-12-2003, 12:04 AM
நான் பன்னிரண்டாவது வகுப்பு படித்த சமயத்தில்
பேசிக் கொன்ஞ்சம் படித்தேன் ...
அவ்வளவுதான் எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு ...
இந்த செய்தி நான் கேள்விப்படது ...
நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் ...

நிலா
21-12-2003, 12:18 AM
நான் பன்னிரண்டாவது வகுப்பு படித்த சமயத்தில்
பேசிக் கொன்ஞ்சம் படித்தேன்


மிச்ச நேரமெல்லாம் கடலையிலேயே போயிருச்சா?

லாவ் நன்றி!வாழ்த்துகள்!

இளசு
21-12-2003, 08:17 AM
என்ன முத்து, நிலா கேட்பது உண்மையா?

ஆமாம், "கடலை"ன்னா என்ன?
:D

இளந்தமிழ்ச்செல்வன்
21-12-2003, 08:31 AM
முத்துவின் நிலைதான் எனக்கும். அற்புதம் லாவ் - தகவல்கள்

poornima
18-01-2009, 09:10 AM
ஒரு கணிப்பொறியின் கதை என்ற சுஜாதாவின் கணிப்பொறி அறிமுகம் பற்றிய
படைப்பு ஒன்றில் ஒரு மின் தூக்கி இயங்குவதற்கான மொத்த நிரல் வரைவு மூலமும் BASIC மொழியிலிருந்து எடுத்து கையாண்டிருப்பார்..