PDA

View Full Version : பில்கேட்ஸின் மறுபக்கம் 3. Mosaic பிரவுஸரை மொட்ட



lavanya
20-12-2003, 09:06 PM
3. Mosaic பிரவுஸரை மொட்டையடித்த கதை

இணைய பயன்பாட்டுக்காக முதன் முதலில் வந்த மேய்ச்சல் மென்பொருள் (Browser
Software) நெட்ஸ்கேப் நிறுவனத்துக்காக மார்க் ஆண்டர்சன் கண்டறிந்த மொசைக்
என்னும் மென்பொருள் ஆகும். இதை முதலில் 'நல்லபடியாக' அல்லது 'மரியாதையாக'
விலைக்கு கேட்டு பார்த்தார் பில்கேட்ஸ். 'உனக்கும் பெப்பே..உங்கப்பனுக்கும் பெப்பே'
என்று சொல்லிவிட்டது நெட்ஸ்கேப். பார்த்தார் பில்கேட்ஸ்....அவரின் சித்தாந்தமே...
'எதிராளி ஒரு புதிய கருத்தமைவு கண்டிபிடித்தால் அதை பணத்தால் அடித்து
வாங்கி தான் வெளியிடுவது' அல்லது தானே அப்படிப்பட்ட ஒரு மென்பொருளை
உருவாக்கி இலவசமாக வெளியிட்டு எதிராளி மூஞ்சில் மட்டுமல்லாது வயிற்றிலும்
அடிப்பது' என்பதுதான்...அப்போது அவர் தன் விண்டோஸ் பயன்பாட்டுக்காக
உருவாக்கியதுதான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் .

அதற்கு பின் அதைவிட தரமாய் மார்க் ஆண்டர்சன் நெட்ஸ்கேப் நேவிகேட்டரை
உருவாக்கி வெளியிட்டார்.ம்..ஹம் ....விண்டோஸ் வாங்கினாலே பிரவுஸர் ப்ரீயாமே என்று
'சேலை வாங்கினால் சேலை ப்ரீ ' என்ற சித்தாந்தமுள்ள மக்கள் நெட்ஸ்கேப்
நேவிகேட்டரை புறந்தள்ளி விட்டனர். சொல்லப் போனால் நெட்ஸ்கேப் நேவிகேட்டரின்
பயன்பாடுகளில் 50 சதவீதம் கூட விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரில் கிடையாது.
குறிப்பாக ஒரு இணையத்தளத்தை அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள நெட்ஸ்கேப்
நேவிகேட்டரில் வழியுண்டு.

நெட்ஸ்கேப் நேவிகேட்டர் தன் வியாபாரத்தை பெருக்க என்னன்னவோ வழி செய்து
பார்த்தது. தன் தயாரிப்பை Mozilla என்று கூட பெயர் மாற்றம் செய்து பார்த்தது. கடைசியில்
கிடைத்த இடம் ரெண்டாவதுதான்

இளசு
20-12-2003, 10:39 PM
நெட்ஸ்கேப் பற்றிய சிறப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும் லாவ்.
IE - இலவசம் என்றவுடன் முண்டியடித்து போன திருவாளர்
பொதுஜனம் அல்லவா இதற்கு முழுமுதற் காரணம்..

நாடி பிடித்து இடம் பார்த்து அடித்தது மட்டுமே பில்லின் கைவரிசை.

பல லட்சம் ஈட்டுவோர் கூட ஓசி பபே விருந்தில் சோறே இல்லாமல்
மீன், சிக்கனால் மட்டும் பிளேட்டை நிரப்பும் விநோதம்
என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.
சிலர் சிக்கன் எலும்புகள் உள்ள தட்டைத் "தொலைத்து"விட்டு
புதுத்தட்டோடு கியூவில் மீண்டும் நிற்பார்கள்.

தாம் நினைத்தால் ஒரு விஸ்கி கடையையே வாங்கலாம் என்பவருக்குக் கூட
ஒரு பாட்டில் ஓசியாய் வரும்போது என்ன ஓர் ஆனந்தம்...

இலவசம் - பொய்யாய் வந்தாலும் - மனிதன் அடையும் மகிழ்ச்சி
யட்சனும் தருமனும் சேர்ந்தாலும் விளக்க இயாலாத கருமம்..

எம் ஆர். ராதா/ விவேக் பாணியில் சொல்வதென்றால்...
"நம்மாளா.. ஓசியில் பெட்ரோல் கிடைக்கும்போது
கேன் இல்லன்னா, குடிச்சிட்டு போய் வீட்டில்
வாந்தி எடுத்து வச்சுக்குவானே....."

உலகளாவிய இவ்வுண்மைக்கு "தள்ளுபடி" விற்பனையின்போது
டிசம்பர் குளிரில் காலை மூன்று மணிக்கே கியூவில் நடுங்கியபடி
நிற்கும் "வளர்ந்த நாட்டு" மக்களும், IEன் அகில உலக வெற்றியும்
சாட்சி.

முத்து
21-12-2003, 12:09 AM
இலவசம் என்று சொல்வதற்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான்
செய்கிறது ...
என்றாலும் பில்லின் சித்தாந்தம் தனித்துவமானது ..
மொசில்லா என்பது நேவிகேட்டர் தயாரித்த கம்பெனியுடையது
என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்..
நன்றி மற்றும் பாராட்டுக்கள் ..
இன்னும் தொடருங்கள் லாவண்யா அவர்களே ...

நிலா
21-12-2003, 12:19 AM
லாவ் சத்தியமா எப்படி சொல்லி என் பாராட்டுதலை புரிய வைக்கனு தெரியல!
தலை உங்கள் கருத்துகள் அருமை!

இளந்தமிழ்ச்செல்வன்
21-12-2003, 08:41 AM
லாவ் கலக்குறீங்க. உங்களால் கணணியில் பில்கேட்ஸின் தத்துவத்தையும், பராகிகிரமத்தையும் தெரிந்து கொண்டேன். நன்றி.

மன்மதன்
21-12-2003, 12:57 PM
லாவ் சொல்வது ரொம்பவும் சரி..



3. Mosaic பிரவுஸரை மொட்டையடித்த கதை

சொல்லப் போனால் நெட்ஸ்கேப் நேவிகேட்டரின்
பயன்பாடுகளில் 50 சதவீதம் கூட விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரில் கிடையாது.
குறிப்பாக ஒரு இணையத்தளத்தை அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள நெட்ஸ்கேப்
நேவிகேட்டரில் வழியுண்டு.



இதை இரண்டு ப்ரவ்சரையும் உபயோகப்படுத்திபார்த்தவர்களால்தான் உணர முடியும்.. அதிலும் குறிப்பாக இந்த அவசர உலகத்தில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் அதிகம். என்னதான் ஒரு இணையத்தளத்தை அப்படியே பதிவிறக்கம் செய்துகொள்ள நெட்ஸ்கேப் நேவிகேட்டரில் வழியுருந்தாலும் 99% பேருக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை. பட்டனை சொடுக்கியவுடன் மானிட்டரில் தொபுக்கடீர் என விழும் அந்த வேகம்தான் முக்கியம்.

puppy
22-12-2003, 07:46 PM
நெட்ஸ்கேப் 4.x வரைதான் நெட்ஸ்கேப் பிரவுஸர் என அழைக்கபட்டது....பெரிய மாற்றங்கள் செய்து நெட்ஸ்கேப் 7க்கு வந்த பெயரே மோஸில்லா என்பது ஆகும்.....லாவண்யா பாராட்டுக்கள்

poornima
29-01-2009, 07:13 AM
இப்போது IE 7.0 அனேக கணிணிகளில்.. 8.0 பீட்டா பதிப்பு கூட சோதனையோட்டத்தில் இருக்கிறது..

மொஸில்லா ..? அது அப்படியே தான் இருக்கிறது :-)