PDA

View Full Version : தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...



matheen
21-01-2012, 03:55 PM
தமிழை தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன் தமிழுக்கு செய்யும் நன்றி...
அதனை தானும் நிறைவேற்றியவன் என்றவனாய் தன் வலைத்தளத்தில் முழங்கி இருக்கிறான் ஒரு தமிழன்

தமிழை தட்டச்சு செய்வது இன்று நம்மில் சில பேருக்கு பெரும் பாடாகிப் போய் விடுகிறது.
ஆனால் இந்த தளத்தில் நாம் போன்களில் எழுதுவது போன்று தங்கிலீஸ் முறையிலும் எழுதலாம்

வேறு விதங்களிலும் எழுதலாம்,
Tamil 99 Keyboard
Tamil Phonetic
Bamini Keyboard
Vaanavil Keyboard
Modular Keyboard
Tamil Typewritter

இதனை ஒவ்வொரு முறையும் இணையத்துக்கு சென்று பயன்படுத்த வேண்டியது இல்லை.

ஒரு முறை சென்று இப்பக்கத்தை சேமித்தால் போதும்
வெரும் 247 kb மட்டுமே தேவைப்படும்.

தமிழை முழங்கச் செய்த தமிழனுக்கு நன்றி செய்ய ஒரு முறை பரிசீலித்துப்பாருங்கள்.


www.higopi.com/ucedit/Tamil.html (http://www.higopi.com/ucedit/Tamil.html)

கலைவேந்தன்
31-03-2012, 03:45 PM
தமிழைத் தழைக்கச் செய்யுமுன் தலைப்பை தழைக்கச்செய்யுங்கள் தோழரே..

ஹை கோபி எப்போதோ வந்துவிட்டது நண்பரே..

பால்ராஜ்
02-04-2012, 06:01 AM
தமிழையே தமிள் ஆக்கிவிடுகிறோம்...
தளைப்பது என்ன புதியதா என்ன?

muthirkanni
10-04-2012, 03:05 PM
தமிழைத் தழைக்கச் செய்யுமுன் தலைப்பை தழைக்கச்செய்யுங்கள் தோழரே...

தோழர் மதீன்,

தோழர். கலைவேந்தன் அவர்கள் சுட்டிக்காட்டியும் இன்னமும் சரி செய்யவில்லையே.
உங்கள் சேவை மதிப்பிற்கும் நன்றிக்கும் உரியதுதான். ஆனால், தமிழைத் தழைக்கவும்
வைக்க வேண்டுமல்லவா.

அன்பின் வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ளவும்.

எதிர்பார்ப்புகளுடனும், அன்புடனும்
முதிர்கன்னி

சிவா.ஜி
10-04-2012, 08:08 PM
நல்ல தகவல்...சிறு குறையுடன் இருப்பது உறுத்தலில்லையா நண்பரே....மாற்றிவிடுங்கள். மிக்க நன்றி.

shibly591
13-04-2012, 04:00 PM
பயனுள்ள தகவல்..நன்றிகள்

ராஜா
15-04-2012, 07:03 AM
ஒருவிதத்தில் மதீன் சொல்வது சரியே..!

:)

எனினும் அவர் கூறியது அப்பொருளில் அல்ல என்பதை மிகுதிப் பதிவு உணர்த்துகிறது..

பயனருக்காகக் காத்திராமல், பொறுப்பாளர் எவரேனும் பிழையைத் திருத்தியமைக்கலாமே..

முகப்பில் கண்களை உறுத்துவதாக உள்ளது..