PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜனவரி:18 அவரொரு அகராதி!



innamburan
19-01-2012, 04:24 PM
அன்றொரு நாள்: ஜனவரி:18
அவரொரு அகராதி!
‘நின்மலனைச் சண்முகனை நித்தியமுத் துக்குமார
சின்மயனை நெஞ்சே தினந்தினமும் – பன்மலர்க
டூவித் திருமாவைத் தொல்பதிசென் றேத்துதிநீ
பாவங்க ணீங்கும் படி.’
~ சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை

தற்காலம் தமிழ் மக்களுக்கு தமிழிலக்கியத்தில் ஆர்வம் குறைந்து விட்டதோ என்று கவலைப்படும் தருணத்தில், யாழ்மண்ணில் கலங்கரை விளக்குகளாகத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை நினைத்தால், மனது பெருமிதம் கொள்கிறது. ஜனவரி 18, 1854லில் ஜனித்த சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் பன்மொழி ~தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதம். இவருடைய செய்யுளும், உரை நடையும், மொழிபெயர்ப்பும், புத்துரை ஆற்றலும், இலக்கண விளக்கங்களும் சிறப்பாகப் போற்றத்தக்கவை. இதற்கெல்லாம் மேலாக,இவருடைய இலக்கியச்சொல்லகராதியை புகழவேண்டும். இவர் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையின் பேரகராதிக்கும் துணைநின்றவர். 1878 ம் ஆண்டில் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் விருப்பத்திற்கிணங்கி, ஏழாலை சைவபிரகாச தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். இரு ஆண்டுகளின் பின் அக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார்.
யாழ்ப்பாணம் பண்டிதர் இரத்தினேஸ்வர ஐயர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் மருதையனார், மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, வவுனியா பண்டிதர் இராசையனார் என்போர் காவிய பாடசாலையிற் புலவரிடம் பாடங் கேட்டோரிற் சிலர் எனலாம். புலவரிடம் நேரே தொடர்புகொண்டு பாடங்கேட்டோருள் வித்தகம் கந்தையாபிள்ளை, மகாவித்துவான் சி. கணேசையர் என்போர் குறிப்பிடக் கூடியவர்கள்.
சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறாக இலக்கியசொல் அகராதி,நீதிநெறி விளக்கம் போன்றவையும்,சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.
இவரது ஆக்கங்கள்
மொழிபெயர்ப்பு: (சம்ஸ்க்ருதத்திலிருந்து)
மேகதூதக் காரிகை
இராமோ தந்தம்
சாணக்கிய நீதி வெண்பா
சிசுபாலவதம்.
இயற்றியவை:
தமிழ்ப்புலவர் சரிதம்
வினைப்பகுபத விளக்கம்

இதோபதேசம்
இலக்கியச் சொல்லகராதி
சிவதோத்திரக் கவித் திரட்டு
இரகுவமிச சரிதாமிர்தம்
ஏகவிருத்த பாரதாதி
மாவைப் பதிகம்
இலக்கண சந்திரிகை
கலையசைச் சிலேடை வெண்பா - அரும்பதவுரை
கம்பராமாயணம் - பாலகாண்டம் - அரும்பதவுரை
நீதிநெறி விளக்கம் - புத்துரை
யாப்பருங்கலக் காரிகை - புத்துரை

அந்த நூல்களில் எவை மின்னாக்கம் செய்ய்ப்பட்டுள்ளவை என்று அறிய அவா.
1892 இல் சின்னாச்சியம்மையாரை திருமணம் செய்து மூன்று மகவுகளை பெற்றுக்கொண்ட புலவர் அவர்கள் 1922.03.22 இல் இறைவனடி சேர்ந்தார்.
இன்னம்பூரான்
18 01 2012
http://wapedia.mobi/thumb/25d7510/en/fixed/470/313/Pulavar_stat.jpg?format=jpg
http://wapedia.mobi/thumb/25d7510/en/fixed/470/313/Pulavar_stat.jpg?format=jpg
உசாத்துணை:
http://www.thejaffna.com/jaffna/eminence/குமாரசுவாமிப்-புலவர்/