PDA

View Full Version : рокро┐ро▓рпНроХрпЗроЯрпНро╕ро┐ройрпН рооро▒рпБрокроХрпНроХроорпН - (4. роЖрокрпНрокро┐ро│рпИ родрпЖро▒ро┐роХрпНроХ



lavanya
20-12-2003, 09:04 PM
4. ஆப்பிளை தெறிக்க வைத்த கதை

உலகின் முதன் முதலில் பயனாளர் வரைகலை இடைமுக (Graphical User Interface)
தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஆப்பிள் நிறுவனத்தார். அவர்கள் தனக்கென
வைத்து கொண்ட தொழிநுட்ப இயக்க தொகுப்பு MAC என்பதாகும். இந்த வரைகலை
இடைமுக தொடர்பை ஏற்படுத்தி கணிணிக்கும் மனிதனுக்குமான உறவை இவர்கள்
இன்னும் சுமூகமாக்க முயற்சி செய்தார்கள்...

அப்போது மைக்ரோஸா╖ப்ட் கொஞ்சம் மோசமாயிருந்த காலம். தன்னுடைய
OS/2 கொஞ்சம் எதிர்பார்த்த அளவு போகவில்லை....ஆப்பிள் நன்கு வளர்ந்து கொண்டிருந்த
நேரம் அது.பார்த்தார் பில்கேட்ஸ்... விண்டோஸ் 1.0 என்று அதை ஆப்பிள் மேக் இயக்கத்
தொகுப்பு போலவே ஒன்றை வெளியிட்டார். அது எதிர்பார்த்த அளவு போகவில்லை.அடுத்தடுத்த பதிப்புகளும் கொஞ்சம் 'ஈ'என இளிக்க ஆப்பிள் மேக்கின் ஒரு பதிப்பை
வாங்கி அப்படி இப்படி எல்லாம் ஜிகினா வேலை செய்து விண்டோஸ் 3.0 வை வெளியிட்டார்
அன்றைய தினம்தான் ஆப்பிள் மேக்குக்கு போதாத காலம்.

தனது காப்பிரைட்ஸ் உரிமையை மதிக்க வில்லை என்று ஆப்பிள் மேக் வழக்கு போட
இந்த மாதிரி வழக்குகள் இன்னும் தன்னை பெரிய ஆளாக மாற்றும் என இந்திய அரசியல்
வாதிகள் போல் அஞ்சா நெஞ்சமுடன் அடுத்தடுத்து விண்டோஸ் 3.1 கொஞ்சம் நிறைய
மாற்றங்களுடன் வெளியிட்டார். விண்டோஸ் 3.11 பிணைய கணிணிகளை இணைக்கும் பயன்பாடுகளில் நிறைய பயன்பட்டது. விண்டோஸ் 4.0 வை கொஞ்சம் வித்தியாசமாக
காட்டவேண்டுமே என்று எண்ணி அதற்கு முதலில் சிகாகோ என பெயர் வைத்தார்.
சிக்கலாகி விடுமோ என கருதி மெம்பிஸ் என பெயர் சூட்டினார். அதுவும் பொருந்துமோ
பொருந்தாதோ என யோசித்து மெம்பிஸ் பொழைப்பை நெம்பி விட்டால் என கருதி
அந்த வருடத்தின் பெயரையே விண்டோஸ் 95 என சூட்டி வெளியிட்டார். முடிந்தது
ஆப்பிளின் கதை. அன்றைக்கு பலமிழந்து போனதுதான் ஆப்பிள்.இன்றுவரை எழ
முடியவில்லை.


அதில் நல்ல இலாபம் பார்த்த பில்கேட்ஸ் அடுத்ததை கொண்டு வர முயற்சி செய்து
கொஞ்சம் சோம்பல் பட்டு விண்டோஸ் 95 ஐ கொஞ்சம் கொஞ்சம் மாற்றி மூன்று பதிவுகளாய்
வெளியிட்டார். 1. விண்டோஸ் 95. 2. விண்டோஸ் 95 இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு
(இதை விண்டோஸ் 97 என்றும் கூறுவார்கள்) .3. விண்டோஸ் பிளஸ் (இதில் டெஸ்க்டாப்
மற்றும் ஐகான் ,ஸ்கிரீன் வசதிகளில் நிறைய ஜிகினா வேலைப்பாடு இருக்கும்)....

மூன்றும் வெவ்வேறு கோணத்தில் வெற்றி பெற விண்டோஸ் 98 ம் மூன்று பதிப்புகளாக
வந்தது. 1.விண்டோஸ் 98 2.விண்டோஸ் 98 SE ( இரண்டாம் பதிப்பாம்) . 3. விண்டோஸ் 98 ME
(மில்லேனியம் பதிப்பாம்) . என்னடா வேற்றுமை என்றால் வீர்சிங்கை கேளுங்கள்
என்கின்றனர் பில்கேட்ஸ் தரப்பு. ஒற்றுமை என்ன என்றால் மூன்றுமே கிராஸ் ஆகினால்
ஹி...ஹி.... ரீ - இன்ஸ்டால்தான் என்கிறார்கள்.

роЗро│роЪрпБ
20-12-2003, 10:39 PM
பில் கடித்த ஆப்பிள்???? :wink:

роорпБродрпНродрпБ
21-12-2003, 12:12 AM
வல்லான் வைத்ததே சட்டம் ....
இன்று அவர் வல்லான் ஆகிவிட்டார் ..
மற்றவர்கள் பாடு கொஞ்சம் கஷ்டம்தான் ..

puppy
22-12-2003, 07:41 PM
os/2 IBMக்கு சொந்தமானது......லாவண்யா.......

poornima
29-01-2009, 07:58 AM
os/2 IBMроХрпНроХрпБ роЪрпКроирпНродрооро╛ройродрпБ......ро▓ро╛ро╡рогрпНропро╛.......

роЖройро╛ро▓рпН роРрокро┐роОроорпН роХрогро┐рогро┐роХро│рпБроХрпНроХрпБродро╛ройрпЗ роорпБродро▓ро┐ро▓рпН роиро┐ро░ро▓рпНро╡ро░рпИро╡рпБ родропро╛ро░ро┐родрпНродрпБ ро╡ро┐ро▒рпНро▒ро╛ро░рпН рокро┐ро▓рпНроХрпЗроЯрпНро╕рпН..роОройро╡рпЗродро╛ройрпН роЕроирпНрод роЪрпЖропрпНродро┐ роЗрокрпНрокроЯро┐ ро╡роирпНродро┐ро░рпБроХрпНроХро┐ро▒родрпБ