PDA

View Full Version : பேய் வீடு



M.Jagadeesan
19-01-2012, 07:47 AM
அடுத்தவன் வாழப் பொறுக்காது அவனைக்
கெடுக்க நினைக்கும் பொறாமைப்பேய் ஒருபுறம்

அகிலமே கிடைத்தாலும் அடங்காத ஆசையினால்
அலைகடலும் பெறத்துடிக்கும் ஆசைப்பேய் புறம்

கட்டிய மனைவி கால்கடுக்கக் காத்திருக்க
கொட்டிக் கூத்தாடும் காமப்பேய் ஒருபுறம்

கொள்ளை கொள்ளையாய் ஊதியம் பெற்றாலும்
சில்லறைக்கு அலைகின்ற லஞ்சப்பேய் ஒருபுறம்

அரித்துண்ணும் கரையான்போல் இந்தியத் திருநாட்டை
எரித்தழிக்க என்னும் ஊழல்பேய் ஒருபுறம்

ஆணவத்தின் உச்சியிலே அதிகார போதையிலே
ஈனச்செயல் புரிகின்ற பதவிப்பேய் ஒருபுறம்

எத்தனை பேய்களடா! எத்தனை பேய்களடா!
இத்தனை பேய்களும் உள்ளதடா உன்மனதில்.

கீதம்
19-01-2012, 09:55 AM
இத்தனைப் பேய்களை உள்ளத்தில் குடிவைத்து நடமாடும் பேய்வீடுகளாய் நாமிருக்கையில் பேய்கள் குடியிருப்பதாய் பாழடைந்த வீடுகளையும், புளியமரங்களையும் கண்டு பயம் எதற்கு? பயப்படுவதுபோல் பிதற்றல் எதற்கு? நன்றாகச் சொன்னீர்கள். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
19-01-2012, 10:05 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.