PDA

View Full Version : அகவை எழுபது ..!



vasikaran.g
17-01-2012, 10:20 AM
என் தந்தையாரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு (16 -12 -2011 ) அன்று என் பெற்றோரை பற்றி எழுதிய கவிதை உங்கள் பார்வைக்காக இதோ ..

அப்பாவுக்கு ..!
அகவை எழுபது !
மகவை ஈன்ற பொழுதிலிருந்து
கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்கையில்
உண்மை வலியது
என்பது ஓங்கி ஒலிக்குது .!!

அனுபவ சுவைகளை
அனுபவித்த ரேகைகள்
முகத்தில் தெரியுது !
உவகை புரியுது !!

நிதானம் பேசுது !
நீதி நேர்மை - நீ
கடைபிடித்த வாய்மை
வெளியில் பேசுவது
வளியில் கேட்குது !!

திருமண மாகி
இருமனமும் ஒருமனமாகி
ஆகிறது அகவை
நாற்பத்து ஆறு !

நீங்கள் வாழ்வாங்கு வாழ
ஆயுட்காரகனே வந்து
பிணி களைந்து
பணிவிடை செய்து
சிவனிடம் கேட்பாரு !
அவன் மகனிடம்
காணிக்கை இல்லாமல்
கோரிக்கை வைப்பாரு !!

ஆனை முகத்தானிடம்
பேருவகை அளிக்க
பெருமையோடு பரிந்துரைப்பாரு.!
மகிழ்ச்சியை மட்டுமே
பகிர்ந தளிப்பாரு.!!

வீழ்த்த மனமில்லாமல்
எருமை வாகனரே
வாழ்த்த வருவாரு !
வளமை தருவாரு !!

மங்கள இசையில்
வெண்கல குரலில்
கண்கள் ஒளிர
எங்கள் உணர்வில்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துப் பண்கள் பாடி
ஒரு மாமாங்கம்
பூஜை செய்வாரு .!
நீங்க பல்லாண்டு பல்லாண்டு
வாழ்வாங்கு வாழ
வகை வகையாய்
வாழ்த்திப் போவாரு !!

நன்றிகளுடன்

வசிகரன்.க

M.Jagadeesan
17-01-2012, 12:07 PM
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தங்களுடைய தந்தையின் மீது கொண்ட பாசத்தைத் தங்களுடைய கவிதையில் காண்கிறேன். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து உங்களுக்கு வழிகாட்டட்டும். கவிதை நன்று.

ஜானகி
18-01-2012, 12:34 AM
" மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான்கொல் எனும் சொல்.. "

vasikaran.g
18-01-2012, 02:58 AM
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தங்களுடைய தந்தையின் மீது கொண்ட பாசத்தைத் தங்களுடைய கவிதையில் காண்கிறேன். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து உங்களுக்கு வழிகாட்டட்டும். கவிதை நன்று.
நன்றி ஜெகதீசன் ..

vasikaran.g
18-01-2012, 02:59 AM
" மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான்கொல் எனும் சொல்.. "
நன்றி ஜானகி அவர்களே ..

கீதம்
18-01-2012, 04:17 AM
அகவை எழுபதைப் போற்றிடும்
அழகுக் கவிதை இயற்றிடும்
மகவைப் பெற்றதால் மகிழ்ந்திடும்
மனங்குளிர்ந்தே வாழ்த்திடும்!

தங்கள் பெற்றோருக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.

sarcharan
18-01-2012, 07:53 AM
கவிதை உங்கள் தந்தையாருக்கு மட்டுமல்ல, எல்லோருடைய தந்தையாருக்கும் பொருந்தும் ஒன்று.
பாராட்டுக்கள் வசீகரன்!!

சொ.ஞானசம்பந்தன்
19-01-2012, 09:15 AM
தந்தையார்மீது நீங்கள் கொண்டுள்ள பாசத்தைக் கவிதை நன்றாய் வெளிப்படுத்துகிறது . பாராட்டுகிறேன் . அவர் பன்னெடுங்காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .

vasikaran.g
24-01-2012, 11:40 AM
அகவை எழுபதைப் போற்றிடும்
அழகுக் கவிதை இயற்றிடும்
மகவைப் பெற்றதால் மகிழ்ந்திடும்
மனங்குளிர்ந்தே வாழ்த்திடும்!

தங்கள் பெற்றோருக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.
மிக்க நன்றி சம்பந்தன் அவர்களே ..

vasikaran.g
24-01-2012, 11:41 AM
கவிதை உங்கள் தந்தையாருக்கு மட்டுமல்ல, எல்லோருடைய தந்தையாருக்கும் பொருந்தும் ஒன்று.
பாராட்டுக்கள் வசீகரன்!!
மிக்க நன்றி sarcharan அவர்களே ..

சிவா.ஜி
24-01-2012, 01:12 PM
தந்தைக்கு மகனின் கவிதை...நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் தந்தை நலமோடு நெடுங்காலம் வாழ பிரார்த்தனைகள்.

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் வசீகரன்.

vasikaran.g
28-01-2012, 09:37 AM
நன்றி சிவா.g ..