PDA

View Full Version : பில்கேட்ஸின் மறுபக்கம் - 5 (டி- பேஸை கார்பேஜ்



lavanya
20-12-2003, 09:03 PM
5. டி- பேஸை கார்பேஜ்க்கு அனுப்பிய கதை
நான்காம் தலைமுறை மொழிகளில் தகவல் தள பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட
சின்ன மென்பொருள் டி-பேஸ். எளிமையும்,சுலபமான நிரலமைப்பும் இதன் பலம்.அதிக
பந்தா,அலம்பல் ஏதுமின்றி வெய்ன் ராட்டிப் (Wain Ratiff) என்பவரால் கண்டுபிடிக்கப்
பட்டு வெளியிடப்பட்ட இந்த மென்பொருள் அனேகம் பேரால் விரும்பி பயன்படுத்தப்பட்டது.
பிற்பாடு இதன் பலம் சற்று மெருகேற்றப்பட்டு டிபேஸ் - II , டிபேஸ் - III , டிபேஸ் - IV
என வரிசையாக பதிக்கப் பெற்றது. இதில் நிறைய முக்கியத்துவம் வாய்ந்தததாக டிபேஸ் IV
ஐ சொல்லலாம். இதை பில்கேட்ஸ் உரிமை பெற்று பாக்ஸ்பேஸ் என கொஞ்சம் கூடுதல்
மேக்கப் போட்டு சந்தைக்கு அனுப்பி வைத்தார். அது அவ்வளவாக சந்தைகளில் கவனிக்கப்
பட வில்லை. பிற்பாடு அதில் நிறைய சிறப்பம்சங்கள் சேர்த்து பாக்ஸ்புரோ என பில்கேட்ஸ்
பில்டப் செய்ததில் அமோக வியாபாரம். ஒரு நேரத்தில் பாக்ஸ்புரோ ஓஹோ என
சந்தைகளில் பேசப்பட்டதை எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அதை பின்பு தனது விண்டோஸ் பதிப்பில் மைக்ரோசாப்ட் விண்டோஸ்க்கான
பாக்ஸ்புரோ ( Microsoft Foxpro for Windows ver 2.6) அறிமுகப்படுத்தினார். அது
கொஞ்சம் போல் போனது.பின்பு அதை தனது மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டூடியோவின்
ஒரு அங்கமாகவே சேர்த்து கொண்டார்.ஆனால் அந்த தொகுப்பில் உள்ள இந்த
பாக்ஸ்புரோவை அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.

இப்போது சமீபத்தில் வரைகலை பயன்பாட்டு இடைமுக டிபேஸ்
(D-Base for Gui Application) என்று நிறைய விளம்பரம் பார்த்தேன். கொஞ்சம் சிரிப்பு
வந்தது...ஏனெனில் இதுவும் எத்தனை நாளைக்கோ...?

இளசு
20-12-2003, 10:40 PM
லாவ்,
மொத்தத்தில் "வாழ்க்கை " என்ற படத்தில்
ஆரம்பத்தில் தொழிலில் வெல்லும் நம்பியாரும்
பின்னர் அவர் முதுகெலும்பை நொறுக்கி
தாம் உயரும் சிவாஜியும் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது:

"ஒருத்தரோட அழுகை - அடுத்தவரின் சிரிப்பு
ஒருத்தரோட நஷ்டம் - அடுத்தவரின் லாபம்
ஒருத்தரோட தோல்வி - அடுத்தவரின் வெற்றி..
இதுக்குப்பேர்தான் வாழ்க்கை..."

ஆமாம் லாவ், பில்லு நல்லவரா கெட்டவரா
குழப்பிட்டேயேப்பா...
:D

முத்து
21-12-2003, 12:16 AM
வியாபாரத்தில் பொதுதர்மம் பார்ப்பவர்கள் இருக்கிறார்களா என்ன .. ?
நாம் தேடித்தான் பார்க்கவேண்டும் ...
டி-பேஸ் III ப்ள்ஸ் என்று எங்கோ படித்த ஞாபகம் ..
MS-அக்ஸஸ்க்கும் பாக்ஸ்ப்ரோவுக்அகும் ஏதாவது தொடர்புண்டா என்ன .. ?

மன்மதன்
21-12-2003, 01:11 PM
இன்றளவும் பாக்ஸ்ப்ரோ உபயோகத்தில் உள்ளது..ஆனாலும் விசுவல் பேசிக் வந்த பிறகு யாரும் விசுவல் பாக்ஸ்ப்ரோ பக்கம் போவதாக தெரியவில்லை.

நன்றி லாவ். பயனுள்ள கட்டுரைகள்.

poornima
29-01-2009, 08:10 AM
டாட் நெட் வரை வளர்ந்திருக்கும் தொழில்நுட்பத்தில் கூட ஃபாக்ஸ்புரோவுக்கு இடமிருந்தும் போணியாக வில்லை :-)

பாரதி
30-01-2009, 04:06 PM
தன்னுடைய நேரத்தை ஒதுக்கி, பயனுள்ள கட்டுரைகளை ஒருங்குறியாக்கி எங்கள் பார்வைக்கு தரும் பூர்ணிமா அவர்களுக்கு மிக்க நன்றி.

தென்னாட்டு சிங்கம்
30-01-2009, 04:52 PM
பயனுள்ள தகவல் தந்து, தந்துகொண்டிருக்கும் லாவண்யாவுக்கு நன்றிகள்..

anna
01-02-2009, 06:34 AM
என்னதான் வந்தாலும் பாக்ஸ்புரோவில் உள்ள திருப்தி மற்றும் நம்பகம் மற்றதில் இல்லை. உபயோகிப்பாளர்களுக்கு அதிக அளவு கிளாஸ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல விண்டோஸில் செய்யும் அனைத்தையும் பாக்ஸ்புரோவிலும் செய்ய முடியும்.