PDA

View Full Version : தோல்வியடையும் போராட்டங்கள்



Nivas.T
14-01-2012, 03:39 PM
இனம் புரியாத உணர்வொன்று
இழுத்துச் செல்கிறது
இடம் பொருள் ஏவல் அறியாமல்

அறிந்துகொள்ள எத்தனித்த எல்லாக்கணமும்
எதுகையாகவே சுட்டி காட்டி
எல்லா செயல்களும் முற்றுப் பெறுகிறது

இது எவரும் அறியாத என் அந்தரங்கம் என்றாலும்
என்னுள் இருக்கும் இன்னொருவன்
உறுத்திக் கொண்டிருக்கிறான் இது தவறென்று

ஆனால் உறுத்தல்கள் அனைத்தும்
உறைந்து நிர்ப்பது தோல்வியில் மட்டுமே :frown:

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-03-2012, 01:17 PM
காதல் தோல்வியாக இருந்தாலும் கலங்காதீர்கள் நிவாஸ் அவர்களே. காலம் வரும். காத்திருங்கள்.:)