PDA

View Full Version : போலியோ.. இல்லா இந்தியா...!



govindh
14-01-2012, 11:00 AM
போகியில்...
ஒழிந்தது போலியோ...!

பொங்கல் பரிசாக -
போலியோ.. இல்லா இந்தியா...!

மக்கள் ஒன்றுபட்டால்
நின்று வெல்லலாம்...
மற்றுமொரு உதாரணம்...!

மக்கள் சக்தி
மகத்தான சக்தி...!

மலர்ந்து மகிழ வேண்டும்....
தொடர்ந்து வெல்ல வேண்டும்...!

அரசியல் தூய்மையாக
ஒளிர வேண்டும்...!

ஆன்மீகம் தொடர்ச்சியாக*
மிளிர வேண்டும்...!

ஊதியவாதிகள்
ஓயாமல் உழைக்க வேண்டும்....!

ஊழல்வாதிகள்
பிழைக்காமல் திருந்த வேண்டும்...!

அதிகார முறைமை
சீர்பட வேண்டும்...!

அன்பு பொங்க வேண்டும்...!
அகிம்சை தங்க வேண்டும்...!

உண்மை வெல்ல வேண்டும்...!
அண்மையில் எல்லாம்...
நிகழ வேண்டும்...!

உலக சமாதானம்
மலர வேண்டும்....!

பொங்கலோ.....பொங்கல்....!

M.Jagadeesan
14-01-2012, 01:54 PM
தங்களுடைய கனவுகள் எல்லாம் நனவாகட்டும்.பாராட்டுக்கள் கோவிந்த்.

govindh
14-01-2012, 11:08 PM
மிக்க நன்றி ஐயா...!

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-03-2012, 05:45 AM
கானா விலிருந்தே கற்கவிதை தந்துள்ளீர்
போனாலும் போகட்டும் போ[லியோ]
:)