PDA

View Full Version : அவளிடம் சொல்லுங்கள்



lavanya
07-04-2003, 12:15 PM
அடுத்த முறையாவது
அவளை நனைய சொல்லுங்கள்
குடையை கண்டுபிடித்தவனை
கோபத்தோடு தேடுகிறது
மழை.....


...

discreteplague
07-04-2003, 12:52 PM
ஹ்ம்ம் இந்த கவிக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை. இருப்பினும் இதனுள் ஏதோ ஓர் அர்த்தம் மட்டும் அடங்கி இருக்கிறது என்று எனக்கு தெரிகிறது.

விஷ்ணு

rambal
07-04-2003, 01:20 PM
*உடலெங்கும் ரணம்!
உன் பார்வைக்கணைகள்
தாக்கியதால்...


*நீ ஒரு கண்ணாடியைத்தானே
உடைத்துப்போட்டாய்?
எங்கிருந்து வந்தன ஆயிரம்
நிலவுகள்?


பாராட்டுக்கள் லாவண்யா அவர்களே...

poo
07-04-2003, 01:33 PM
மழைக்கெதிராய் மனப் போராட்டம்...
இன்னொரு வில்லன் - என்னவளுக்கு
என்னதான் கவசம் போடுவது?!!


பாராட்டுக்கள் லாவண்யா.

karikaalan
07-04-2003, 01:39 PM
கவிதை மழை! இனிமையாக இருக்கிறது.

===கரிகாலன்

இளசு
07-04-2003, 06:21 PM
எனக்குப் போட்டி வர்ணனா?
அவன் ஜெயித்தால்....
எனக்கு(ம்) வெற்றியே!

சுகமான கவிதை தந்த தோழிக்கு நன்றியும் பாராட்டும்....

chezhian
07-04-2003, 08:04 PM
நல்ல கவிதை...
அருமை லாவண்யாஜி.

anushajasmin
07-04-2003, 11:50 PM
இனிமையான கவிதை. தொடருங்கள் சகோதரி....

மன்மதன்
23-11-2004, 03:10 PM
அழகான கவிதை..
அன்புடன்
மன்மதன்

அக்னி
01-06-2007, 12:38 AM
அடுத்த முறையாவது
அவளை நனைய சொல்லுங்கள்
குடையை கண்டுபிடித்தவனை
கோபத்தோடு தேடுகிறது
மழை.....

ஓர் பெண்ணை மழையில் நனைய விடாமல்,
குடையைக் கண்டுபிடிப்பானோ ஓர் ஆண்மகன்...
மழையே..,
நீ தேட வேண்டியது ஓர் ஆணையல்ல...
ஓர் பெண்ணையே....

விகடன்
07-06-2007, 08:36 PM
முயற்சிகளை சிதறடிக்கும் சக்திமேல் கொண்ட கோபத்தை உவமதித்திருக்கிறீர்கள்.
எதற்கும் உவமகிக்க முடியும்.

வாழ்த்துக்கள்.