PDA

View Full Version : பிரிண்ட் இட் க்ரீன் பாப் அப் விண்டோ



தங்கவேல்
13-01-2012, 03:23 AM
http://www.tamilmantram.com/vb/photogal/images/1640/large/1_popup_screen.jpg



சமீப காலமாக விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாறிய பிறகு, இண்டர்னெட் எக்ஸ்புளோரர் வழி, இணையத்தில் உலாவும் போது பிரிண்ட்-இட் க்ரீன் என்ற பாப் அப் விண்டோ வந்து விடுகிறது. படம் இணைத்துள்ளேன். ஏதும் வைரஸ்ஸா என்று தெரியவில்லை. கேன்சல் செய்தால் தான் போகின்றது. இதை டீ ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்.

அன்புரசிகன்
15-01-2012, 11:34 PM
please disable this service என்பதை தெரிந்துவிட்டு பார்த்தீர்களா???

Internet option இல் Delete இல் Preserve Favourites website data மற்றும் ActiveX Filtering and Tracking Protection data ஐயும் தெரிவுசெய்து அழியுங்கள். பின்னும் பிரச்சனை தொடர்ந்தால் Internet Option>Advance> Reset...

Reset செய்தால் அனைத்து ம் நீக்கப்பட்டுவிடும். பின்பும் தொடர்கிறது என்றால் அநேகமாக அது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு மென்பொருளில் தான் இருக்கும். அதை பார்த்து நீக்குங்கள்.

எனது எண்ணப்படி இது ஒரு tool bar ஆக இருக்கும்.

சில மென்பொருட்க்கள் நிறுவும் போது இவையும் தாமாக வரும்... நீங்கள் தான் நிறுவும் போது அவற்றின் தெரிவுகளை நீக்க வேண்டும். உதாரணமாக கூகிள் யாகூ ask.com போன்றவற்றின் toolbar களை நிறுவும் கட்டளை பல மென்பொருட்க்களுடன் வரும்...

அப்படி என்றால் அந்த tool bar ஐ நீக்குங்கள். அல்லது view>Toolbars> இல் சென்று பார்த்து தெரிவை நீக்குங்கள்.


எந்த மென்பொருள் நிறுவிய பின்னர் இந்த பிரச்சனை வந்தது???

தங்கவேல்
19-01-2012, 02:02 AM
அன்பு, நீங்கள் சொல்லியபடி ரீஸ்டோர் செய்தேன். தற்போது அந்த விண்டோ வரவில்லை. எனக்கு ஆன்லைன் வீடியோ கேப்சர் டூல்ஸ் வேண்டும். நல்ல சாஃப்ட்வேர் ஒன்றினை எழுதவும்.

அன்புரசிகன்
19-01-2012, 03:59 AM
CAM STUDIO சிறந்த திறந்த நிரல் மென்பொருள்...


http://camstudio.org/