PDA

View Full Version : தமிழர் திருநாள்



M.Jagadeesan
13-01-2012, 02:21 AM
முல்லைப் பெரியாறு பிரச்சினை ஓய்ந்து
எல்லையில் மகிழ்ச்சி பொங்கச் செய்வோம்.

கூடாங் குளத்தில் அணுமின் உலைகள்
ஓடாது இருக்கும் நிலையை மாற்றி
பாடாய்ப் படுத்தும் "பவர்கட் "அதனை
ஓடோட விரட்ட ஒருவழி செய்வோம்.

ஜல்லிக் கட்டில் காளையை அடக்கி
மைவிழி மாதர் காதலைப் பெறுவோம்

வீடு தோறும் குறளின் விளக்கம்
வீதி தோறும் தமிழின் முழக்கம்
நாடு தோறும் நன்மை செழிக்க
பாடுக பொங்கல் பொங்குக என்றே!

meera
13-01-2012, 03:00 AM
ஐயா, உங்கள் கவிதையில் காண்பது போல் அனைத்தும் நலமாய் நடக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திரு நாள் வாழ்த்துகள்.:icon_b:

M.Jagadeesan
13-01-2012, 03:32 AM
மீரா அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.