PDA

View Full Version : பா - 1

ஆதி
12-01-2012, 07:22 AM
சத்தமாய் கூவி விரைகிற வாகனங்கள்
எத்திரையு மற்ற நடைபாதை யில்தனது
பத்தினி யோடுச்ச மாயுற்றி ருக்கிறான்
நிச்சலன* மான* கலவு

தாமரை
12-01-2012, 08:43 AM
சத்தமாய் கூவி விரைகிற வாகனங்கள்
எத்திரையு மற்ற நடைபாதை யில்தனது
பத்தினி யோடுச்ச மாயுற்றி ருக்கிறான்
எச்சங்கட மற்று கலவு

எச்சங்கட மற்றக் கலவினில்
எச்சங் கடவே களவு
எச்சங் கடமற வக்களவும்
எச்சங் கடந்தேக் கலவு

:D:D:D:D:D:D

கீதம்
12-01-2012, 10:50 AM
எச்சங்கட மற்றக் கலவினில்
எச்சங் கடவே களவு

:icon_b::icon_b: நான் நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க.

எச்சங் கடமற வக்களவும்
எச்சங் கடந்தேக் கலவு

:icon_p: இது புரியவில்லை.

கீதம்
12-01-2012, 10:52 AM
சத்தமாய் கூவி விரைகிற வாகனங்கள்
எத்திரையு மற்ற நடைபாதை யில்தனது
பத்தினி யோடுச்ச மாயுற்றி ருக்கிறான்
எச்சங்கட மற்று கலவு

போக்கிட மற்றுத் தெருவோரம் துஞ்சிடும்
சாக்கடை அள்ளும் சகமானுட னுச்சமதை
பாக்கிட மாக்கியும் பாரறிய வல்லெழுத்
தாக்கிடப் போகா துறவு.

திருத்தப்பட்டது கீழே...

போக்கிட மற்றுத் தெருவோரம் துஞ்சிடும்
சாக்கடை அள்ளும் சகமனித னுச்சமதை
பாக்கிட மாக்கியும் பாரறிய வல்லெழுத்
தாக்கிடப் போகா துறவு.

தாமரை
12-01-2012, 10:56 AM
போக்கிட மற்றுத் தெருவோரம் துஞ்சிடும்
சாக்கடை அள்ளும் சகமானுட னுச்சமதை
பாக்கிட மாக்கியும் பாரறிய வல்லெழுத்
தாக்கிடப் போகா துறவு.

மானுடமா? அவர் அதைப் பத்தியா எழுதி இருக்காரு?

ஆதன் எப்படி மனுஷங்களைப் பற்றி எழுதுவாரு?

அக்னி
12-01-2012, 11:14 AM
நாய்க்கெதுக்குப் போர்த்தேங்காய் என்று பேசாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்..,
கலவையல்ல, கவிதையை... :rolleyes:

தாமரை
12-01-2012, 11:22 AM
எச்சங்கட மற்றக் கலவினில்
எச்சங் கடவே களவு.

:icon_b::icon_b: நான் நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க.

நீங்க நான் சொன்னதை நினைக்கலை.. நான் அதை மட்டும் சொன்னதா நினைச்சிகிட்டீங்க அவ்வளவுதான்..

எச்சங்கட மற்றக் கலவினில் என்பதில் எச்சமாகிய வல்லெழுத்து மிகாததை சொன்னமாதிரி நீங்க நினைச்சிட்டீங்க. அது சாதாரண எழுத்துப் பிழை. ஆதன் என்பதால் நான் எப்பவுமே எழுத்துப் பிழையைக் கண்டு கொள்வதில்லை.

எச்+சங்+கட = தேமாங்கனி - வெண்பாவில் கனிச் சீர் வராது... எச்சங்கட என்ற வார்த்தையாக வெண்பாவில் உபயோகிக்கக் கூடாது...

எச்சங்கட என்ற வார்த்தையே தவறு ... என்று உட்பொருள் உண்டு..

எச்சங் கடவே களவு
எச்சங் கடமற வக்களவும்
எச்சங் கடந்தேக் கலவு

:D:D:D:D:D:D

:icon_p: இது புரியவில்லை.

மானுடமா? அவர் அதைப் பத்தியா எழுதி இருக்காரு?

ஆதன் எப்படி மனுஷங்களைப் பற்றி எழுதுவாரு?

நான் எழுதியதற்குப் பின்னால் மிகப் பெரியக் கதை விளக்கம் இருக்கு,.. பொறுமையாய் இருங்க. ஆதன் என்ன சொல்றாருன்னு பார்த்திட்டு விளக்கறேன்.

கீதம்
12-01-2012, 11:22 AM
பத்தினியவளோடு கூடியிருந்தானென்றான்.
பாவம் பாமரனென்றவனை சாடினேன்.
பாவரம் பெற்றவனதைப் பைரவனாக்கினான்.
பத்தினித்தனமது பைரவனிடத்திலேதென்றேன்.
பத்தினியவளென்று பறைந்ததாருனக்கு?
பத்து இனியவளென்றே பதம்பிரித்துப் பதிலுரைத்தான்.
இணைவதும் பிரிவதும் அவருக்கு சாத்தியமென்றால்
இணைப்பதும் பிரிப்பதும் இவருக்கும் சாத்தியமே.

கீதம்
12-01-2012, 11:26 AM
.

.

நீங்க நான் சொன்னதை நினைக்கலை.. நான் அதை மட்டும் சொன்னதா நினைச்சிகிட்டீங்க அவ்வளவுதான்..

எச்சங்கட மற்றக் கலவினில் என்பதில் எச்சமாகிய வல்லெழுத்து மிகாததை சொன்னமாதிரி நீங்க நினைச்சிட்டீங்க. அது சாதாரண எழுத்துப் பிழை. ஆதன் என்பதால் நான் எப்பவுமே எழுத்துப் பிழையைக் கண்டு கொள்வதில்லை.

எச்+சங்+கட = தேமாங்கனி - வெண்பாவில் கனிச் சீர் வராது... எச்சங்கட என்ற வார்த்தையாக வெண்பாவில் உபயோகிக்கக் கூடாது... .

கனிச்சீரை நானும் கவனித்தேன். அதைத்தான் குறிப்பிடுறீங்கன்னு புரிந்துகொண்டேன்.

.எச்சங்கட என்ற வார்த்தையே தவறு ... என்று உட்பொருள் உண்டு...

.மானுடமா? அவர் அதைப் பத்தியா எழுதி இருக்காரு?

ஆதன் எப்படி மனுஷங்களைப் பற்றி எழுதுவாரு?

நான் எழுதியதற்குப் பின்னால் மிகப் பெரியக் கதை விளக்கம் இருக்கு,.. பொறுமையாய் இருங்க. ஆதன் என்ன சொல்றாருன்னு பார்த்திட்டு விளக்கறேன்.

காத்திருக்கிறேன். :)

அக்னி
12-01-2012, 11:26 AM
நாய்க்கெதுக்குப் போர்த்தேங்காய் என்று பேசாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்..,
கலவையல்ல, கவிதையை... :rolleyes:

கவிதையை மட்டுமல்ல.., தொடரும் பின்னூட்டங்களையும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும்...

தமிழுக்குள் முத்தெடுக்க, இன்னும் இன்னும் மூழ்க வேண்டும் நான்...

ஆதி
12-01-2012, 11:59 AM
எச்சங்கட மற்றக் கலவினில்
எச்சங் கடவே களவு
எச்சங் கடமற வக்களவும்
எச்சங் கடந்தேக் கலவு

:D:D:D:D:D:D

எச்சங்கடமற அக்களவும் எச்சங் கடந்தேக் கலவு என்று படிக்கனுமா

எச்சம் கட மற அக்களவும் என்று படிக்கனுமா அண்ணா..

முடிச்சுவுடுங்க அண்ணா... மொத்தமா முடுச்சு விடுங்க... எது என்ன நமக்கு புதுசா...

ஸ்டார்ட் மியூஸ்கிக் :D :D

நிச்சலன மான கலவு என்று போட்டதை மற்றினதுதால் வந்த சங்கடம் எப்படி கடக்கபோறனோ !!!! :D :D

தாமரை
12-01-2012, 12:05 PM
போக்கிட மற்றுத் தெருவோரம் துஞ்சிடும்
சாக்கடை அள்ளும் சகமானுட னுச்சமதை
பாக்கிட மாக்கியும் பாரறிய வல்லெழுத்
தாக்கிடப் போகா துறவு.

கனிச்சீரை நானும் கவனித்தேன். அதைத்தான் குறிப்பிடுறீங்கன்னு புரிந்துகொண்டேன்.

புரிஞ்சிகிட்டீங்களா? அப்ப சக+மா+னுட எப்படி வந்தது? ஹி ஹி தொத்து வியாதி...

தாமரை
12-01-2012, 12:29 PM
எச்சங்கடமற அக்களவும் எச்சங் கடந்தேக் கலவு என்று படிக்கனுமா

எச்சம் கட மற அக்களவும் என்று படிக்கனுமா அண்ணா..

முடிச்சுவுடுங்க அண்ணா... மொத்தமா முடுச்சு விடுங்க... எது என்ன நமக்கு புதுசா...

ஸ்டார்ட் மியூஸ்கிக் :D :D

நிச்சலன மான கலவு என்று போட்டதை மற்றினதுதால் வந்த சங்கடம் எப்படி கடக்கபோறனோ !!!! :D :D

எச்சம் + கடம் = குப்பை + தொட்டி = குப்பைத் தொட்டி...

ஹா ஹா ஹா....

நாய்கள் சங்கடமின்றிக் கலவுகின்றன. காரணமென்ன யோசிக்கிறேன்..

அவைகள் தங்கள் உறவை வென்ற உரிமையில் பூரிப்பாய் கலவுகின்றன.. அவற்றிற்குச் சங்கடமில்லை.

ஆனால் மானிடர்கள் ஆகிய நாம் நமக்கு உரியவளைத் தேர்ந்தெடுத்தால் என்ன செய்கிறோம். பொய்களைச் சொல்லி, அவர்களை எப்படியாவது களவாடுகிறோம். அதனாலே நம் கலவி களவாகவே இருக்கிறது..

பொய்கள், புனையுரைகள், போலி முகஸ்துதிகள் என எச்சங்கள் இடப்பட்ட குப்பைத் தொட்டியே அந்த களவான உறவு..

அந்த எச்சம்+கடம் = குப்பைத் தொட்டியை அற - நீக்க - பொய்யுரைகளை நீக்கி உண்மையை ஒப்புக் கொண்டு அவள் மனதில் இடம் பிடித்து

எச்சங் கடந்தே - எந்த எச்சமும் ஏக்கமும் மிச்சம் வைக்காமல், மனக் குறைவு இல்லாமல்

கலவு- உறவு கொள்

அப்பொழுது கலவியில் உனக்கு எச்சங்கடமும் இராது என்று மறைபொருள்..

பெண்ணை மயக்கி ஆள பொய்,புனைவு எனச் சொல்லித் திருட்டுத்தனம் செய்தால் கூடினால் சங்கடமாய் இருக்கலாம்.

ஆனால் உண்மை தெளிவித்து அவள் காதலைப் பெற்று உரிமையுடன் கலந்தால் கலவி சங்கடமில்லாது இருக்கும்.

இதைப் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றினால் அதுக்கு பொறுப்பு நானில்லை.

ஆதவா
12-01-2012, 02:45 PM
தமிழுக்குள் முத்தெடுக்க, இன்னும் இன்னும் மூழ்க வேண்டும் நான்...

நாமல்லாம் முக்கினா ஜல்பை புடிச்சுக்கும், அதான் மூழ்கறதேயில்ல,

@ தாமரை, ஆதி, கீதம்...

கலக்குங்க,... :icon_b:
All is well

தாமரை
12-01-2012, 03:11 PM
All is well

தவளை இங்கிலீஸு பேசினா என்ன பேசும்..?

ஆல் ஈஸ் வெல்...

ஏன்னா அது கிணத்துத் தவளையாச்சே!!! அதுக்கு எல்லாமே கிணறுதானே?

தாமரை
12-01-2012, 03:28 PM
பத்தினியவளோடு கூடியிருந்தானென்றான்.
பாவம் பாமரனென்றவனை சாடினேன்.
பாவரம் பெற்றவனதைப் பைரவனாக்கினான்.
பத்தினித்தனமது பைரவனிடத்திலேதென்றேன்.
பத்தினியவளென்று பறைந்ததாருனக்கு?
பத்து இனியவளென்றே பதம்பிரித்துப் பதிலுரைத்தான்.
இணைவதும் பிரிவதும் அவருக்கு சாத்தியமென்றால்
இணைப்பதும் பிரிப்பதும் இவருக்கும் சாத்தியமே.

அத்தினி பத்தினி சித்தினி சங்கினி எனப் பெண்களை சாமுத்ரிகா இலட்சணம் நான்கு வகையாகப் பிரிப்பதை அறியவில்லை போலும்.

(பொருள்) காணச் சொன்னால் (பொருள்) கற்பிக்கிறீர்களே... :lachen001::lachen001::lachen001:

தாமரை
12-01-2012, 03:34 PM
நாய்க்கெதுக்குப் போர்த்தேங்காய் என்று பேசாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்..,
கலவையல்ல, கவிதையை... :rolleyes:

கவிதையை மட்டுமல்ல.., தொடரும் பின்னூட்டங்களையும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும்...

தமிழுக்குள் முத்தெடுக்க, இன்னும் இன்னும் மூழ்க வேண்டும் நான்...
உங்க பின்னூட்டத்துக்கே நீங்களே பின்னூட்டமா?

அப்படிச் செய்தால் தப்பிச்சிடலாமா?

கீதம்
12-01-2012, 08:14 PM
புரிஞ்சிகிட்டீங்களா? அப்ப சக+மா+னுட எப்படி வந்தது? ஹி ஹி தொத்து வியாதி...

பேப்பரில் சகமனித என்றுதான் எழுதியிருக்கேன். தட்டச்சும்போது மனித என்பதைவிட மானுட என்றிருந்தால் நன்றாக இருக்குமேன்னு தோண அப்படியே எழுதிட்டேன். (முதல் வெண்பா - எனவே பொறுத்தருள்க) :)

திருத்திவிடுகிறேன். குறிப்பிட்டதற்கு நன்றி.

அக்னி
13-01-2012, 09:50 AM
உங்க பின்னூட்டத்துக்கே நீங்களே பின்னூட்டமா?

அப்படிச் செய்தால் தப்பிச்சிடலாமா?
அண்ணா..,
தப்பித்தேயாக வேண்டிய நிலையில் நான்...
பின்னே, கனிச்சீர் என்பதைக் கேள்விப்பட்டேனோ, கேள்விப்பட்டு மறந்தேனோ... தெரியவில்லை.
அப்படியிருக்க, இன்னும் எத்தனை இலக்கணப் பொறிகளுக்குள் சிக்கவேண்டி வருமோ என்ற பயம்தான்...
பின்னூட்டங்களிலிருந்தேனும் கற்றுக்கொள்ள விளைகின்றேன்...

நாமல்லாம் முக்கினா ஜல்பை புடிச்சுக்கும், அதான் மூழ்கறதேயில்ல,

முக்குவதா... முக்குவதா... எது சரி...