PDA

View Full Version : ஓடிப்போக ஒத்திகை.......Nanban
20-12-2003, 08:53 AM
தேடுகிறான் -
நின்று,
நடந்து,
ஓடி,
சுற்றி,
சுழன்று.

எங்குமே கிட்டவில்லை
அவன் தேடியது.

இன்று அல்லது நாளை
கிடைக்கலாம் -
நம்பிக்கைகள் தான்
தேடுதல்.

சுற்று, முற்றும்
எட்டுப்பட்டியும்
தேடி விட்டான்.
பக்கத்து
பட்டணத்திலும் தான்

பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன்,
தெருவோரம்,
ஆலமரம், அரசமரம்
ஆலய வாசல்கள்...

இனி தேட இடம்
பாக்கி இல்லை.

விரும்பி தன்னைத்
தேடியலைய
ஒராளும் இல்லாத
உலகம்.

புரிதலின் வலியில்
மனதிற்குள்
அழுது கொண்டே
தேடுதலைக் கை விட்டு,
வீடு திரும்ப
முடிவு செய்தான் -

ஓடிப் போக
ஒத்திகை பார்த்தவன்......

பாரதி
20-12-2003, 12:51 PM
ஓடிப் போக
ஒத்திகை பார்த்தவன்....
ஒத்திப் போட்டக் கதையோ அல்லது
ஒதுக்கி வைத்தக் கதையோ
அடிக்கடி உங்கள் கவிதைகளை மனதில்
ஒதுக்கி வைக்கிறேன்.

Nanban
20-12-2003, 12:55 PM
ஓடிப் போக
ஒத்திகை பார்த்தவன்....
ஒத்திப் போட்டக் கதையோ அல்லது
ஒதுக்கி வைத்தக் கதையோ
அடிக்கடி உங்கள் கவிதைகளை மனதில்
ஒதுக்கி வைக்கிறேன்.

அய்யோ, நண்பா, ஒதுக்கி வைக்காதீர்கள். இடம் கொடுங்கள்......

பாரதி
20-12-2003, 12:58 PM
அன்பு நண்பா... பெரும்பகுதியை உங்கள் கவிதைகளுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்..(இதான் ... எதுகை மோனை..ன்னு சும்மா எதுவும் கிறுக்கக்கூடாது... நான் எழுதியதைப் பற்றி இப்படி சொல்கிறது என் மனசாட்சி.)

Nanban
20-12-2003, 01:04 PM
அன்பு நண்பா... பெரும்பகுதியை உங்கள் கவிதைகளுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்..(இதான் ... எதுகை மோனை..ன்னு சும்மா எதுவும் கிறுக்கக்கூடது... நான் எழுதியதைப் பற்றி இப்படி சொல்கிறது என் மனசாட்சி.)

தெரியும்......

என்றாலும் நிறைய நண்பர்கள் சிலேடையாக இதைப் பார்க்க வேண்டும் என்று தான் அப்படி கூறினேன்......

ஒதுக்கி - புறந்தள்ளி......
ஒதுக்கி - தனியிடம்......

பாரதி
20-12-2003, 01:06 PM
அப்பாடா... உங்களுக்கு முன்பே புரிந்திருந்தாலும் ஏன் அப்படிக் கேட்டீர்கள் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். நிம்மதி.

இளசு
20-12-2003, 11:10 PM
வாழ்க்கையே நாடக ஒத்திகை..
தனியே ஏன் இன்னொரு ஒத்திகை..
காலம் வரும்
நிஜ நாடகம் தொடங்கும்..

நண்பனும், பாரதியும் சிந்திக்கவைத்தனர்.
பாராட்டுகள்.நன்றி..

இக்பால்
21-12-2003, 06:22 PM
எல்லாம் ஒன்றுதான்.

Nanban
22-12-2003, 04:38 AM
கவிதைகளைப் படித்து கருத்து சொன்ன பாரதி, இளசு, இக்பால் நன்றி.......


வாழ்க்கையே நாடக ஒத்திகை தான் அதை விளங்க வைக்க சின்ன, சின்ன ஒத்திகைகள் மேலும் மேலும் நடக்க வேண்டியதிருக்கிறது...

இந்தக் கவிதையை, வாழ்க்கை, ஒத்திகை, நாடகம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு எழுதவில்லை. நான் எழுதியது ஒரு சின்ன விஷயத்தைத் தான்.

ஒரு சின்ன விடுப்பும், அதைத் தொடர்ந்து கொஞ்ச நாள் எழுதாததும் தான்......

பிறகு மன்றம் வந்த பொழுது, யாரும் அதைக் கவனித்தார்களா என்று தேடிப் பார்த்த பொழுது யாரும் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தினம் தினம் மன்றம் வந்து வாசித்துப் போய்க் கொண்டிருந்தேன். எல்லாம் அதனதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருந்தது. யாரும், யாரையும் தேடுவதாகத் தெரியவில்லை. சரி, இன்னும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணிக் கொண்டு இருந்த சமயத்தில், நிலா நண்பனைக் காணவில்லை என்று அறிவித்தார். அத்துடன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்தி விட்டு, நுழைந்து விட்டேன்.

அதைத் தான் கவிதையாக எழுதினேன்.....

ஆனால், அது நான் அறியாமலே, ஒரு பெரிய விஷயத்தை விளக்கி நிற்கிறது. நான் விட்டால் கூட, அந்தக் கவிதையுனுள் தோண்டித் துருவி, ஒரு அர்த்தத்தைக் கண்டு பிடிக்க முயல்கிறீர்கள்.

இப்படி யோசிக்க வைப்பது தான் கவிதையின் முதல் பணி. ஆனால், அதை யாரும் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்.....

முன்பு, ராம்பால், இறுதியாக எழுதிய கவிதைகளுள் ஒன்றில் இதைப் பற்றி ஒரு சிறிய விவாதம் துவங்கியது - ஒரு ஆடுகளத்தை மையப்படுத்தி. சரி, தனி தலைப்பில் விவாதிப்போம் என்று நினைத்தோம். ஆனால், அதை அப்படியே மறந்து விட்டோம்.

மீண்டும் விவாதிக்கலாம்.....

கவிஞனின் மனப்போக்கை, வாசிப்பவர்கள் அடைகிறார்களா அல்லது அதையும் தாண்டி சிந்திக்கிறார்களா, அல்லது அதில் எதுவுமே காணாமல் குழம்பிப் போய் விட்டு விடுகிறார்களா என்று.......

இளசு
22-12-2003, 06:11 AM
நண்பன்

அடிக்கடி படிக்க விடுப்பு விடுவது என்பது நாங்கள் அறிந்தது
கூடுதலாய் தம்பி குடும்பம் அண்மையில் வந்தது..
இதனால் சும்மா இருந்தால்
என்ன இது கண்ணாமூச்சி, ஒத்திகை என்று...?
கவிஞர்களின் தனித்துவ விளையாட்டு இது!!

உங்கள் படைப்புகள் தொடரவே என் முதல் ஆசை நண்பன்...
அலசல், ரசனை - இது இயல்பாய் தன்னால் பின்னால் வரட்டும்.

தாமரை என்ற கம்பனின் ஒரு சொல்லுக்கு மூன்று விளக்கம் கண்டு மகிழ்ந்தது
அன்று - (பிஜிகே)

கண்மை தீட்டல் பற்றி வள்ளுவன் சொன்ன ஒண்ணேமுக்கால் வரியை வைத்து
பல கோண அலசலில் சுகித்து மகிழ்ந்தது நேற்று - (கவிக்கோ)

நிலாவின் ஆடையற்ற நிலை என்று பப்பி சொல்ல
மாறி மாறி ஆடை தந்து அழகு பார்த்தது இன்று ( நண்பன்)

சொல்ல வந்தது புரிந்து, அதற்கு மேலும் சிறந்து
நுகர்வோரின் சுவை நரம்புகளைத் தூண்டி
அடுத்த கட்டமாய் பயனாளியும் ஜொள் மீறி
படைப்பாளியாய் மாறிவரும் இணைய யுகம் இது..

எப்படி உண்கிறோம் என்பதை நுகர்வோர் பார்த்துக்கொள்ளட்டுமே..
நீங்கள் படைத்துக்கொண்டே இருங்கள்..
பதில் பதிவுகள், படைப்புகளால் அச்சில் கிட்டாத
தொடர்புச்சங்கிலி கிடைக்கும் இவ்வூடகத்தில்
இன்னும் இன்னும் பயனாளி/ படைப்பாளிகளை
உருவாக்கிக்கொண்டே இருங்கள்..

Nanban
12-01-2004, 07:22 AM
சொல்ல வந்தது புரிந்து, அதற்கு மேலும் சிறந்து
நுகர்வோரின் சுவை நரம்புகளைத் தூண்டி
அடுத்த கட்டமாய் பயனாளியும் ஜொள் மீறி
படைப்பாளியாய் மாறிவரும் இணைய யுகம் இது..

எப்படி உண்கிறோம் என்பதை நுகர்வோர் பார்த்துக்கொள்ளட்டுமே..
நீங்கள் படைத்துக்கொண்டே இருங்கள்..
பதில் பதிவுகள், படைப்புகளால் அச்சில் கிட்டாத
தொடர்புச்சங்கிலி கிடைக்கும் இவ்வூடகத்தில்
இன்னும் இன்னும் பயனாளி/ படைப்பாளிகளை
உருவாக்கிக்கொண்டே இருங்கள்..

உண்மை தான் இளசு நீங்கள் கூறியது. இந்த வலைத்தள உலகில், படைத்துக்கொண்டே இருப்பது தான் முக்கியம். ஒரு கால கட்டத்தில், பயனாளிகளும் பங்கேற்க, சங்கிலித் தொடராக, இது விரிவடையும் - அதுதான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அளவுகோலாக இருக்கும் - முச்சங்கம் என்று போற்றிப் புகழப்படும் பராம்பரியம் மிக்க மொழி நமது. நடுவே அரங்கேற்ற சங்கமில்லாது, கைக்காசு செலவிட்டு, புத்தகம் தந்து, பலன் பெறாமல், நலிவுற்ற பலருண்டு. ஆனால், இன்றோ, அரங்கேற்றம் நிகழ்த்த பல தளங்கள் இணையத்தில். ஒருவேளை இனி இணையதளம் - நான்காவது சங்கம் என்ற பெருமை பெறலாம்..........