PDA

View Full Version : மனவளர்ச்சியற்றவனின் கவிதை



ஆதி
10-01-2012, 02:33 PM
பறவைகளை பற்றி எழுதலாமென்று இருக்கிறேன் இக்கட்டுரையில். சிங்கங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆண் சிங்கம் என்றால் இன்னும் அதிக விருப்பம், கம்பீரமான அதன் கர்ஜனை, இறுமாந்த அதன் நடை, கர்வமான அதன் பார்வை, பஞ்சு போன்ற அதன் பிடறி என ஆண் சிங்கத்தின் அழகை ரசிப்பதில் அலாதியான பிரியம் எனக்கு..

அந்த யானை அவனுக்குள்
நுழைந்த பிறகு
மிக ஆக்ரோசமாய் அவன் மாறி போனான்,
அத்தனை பொருட்களையும்
மிக வெறியோடு கெடாசினான்
குலை நடுங்குகிற அளவிற்கு பிளிறி
பெரும் சத்தமெழுப்பி எல்லோரையும்
அச்சரமாய் ஆக்கினான்,
அவன் சுற்றமே மிரண்டலறி
பயத்தில் பதுங்கி இருந்தது,
திடீரென பூத்த ஒரு பூவென்றின்
மடியில் படுத்து அந்த யானை தன்
மதத்தை நீக்கி கொண்ட போது
அவன் சுற்றும்
நிலா வெளிச்சத்தில் அடர்த்தி இழந்த
இருளில் மின்னும் நட்சத்திரங்களை
ஏந்தி கொள்ளவதை போல் விரிந்திருக்கும்
மரங்களின் பரப்பை போல
ரம்மியமான பிராந்தியமாக மாறி இருந்தது

இக்கதையில் மதயானையையும் பூவையும் பயன் படுத்திக் கொள்ள அனுமதி கேட்ட தருணத்தில், யானை ஏற்கனவே என் கதைக்கு இடம்பெயர்ந்திருந்தது, புலியின் பாதங்களும், மலைப்பாம்பை போன்ற துதிக் கையும், ஓநாயின் தலையும், நரியின் பார்வையும் கொண்ட அதனை யானை என்று என்னால் சொல்லயிலவில்லை, பூவிற்கும் அந்த யானைக்கும் உள்ள பிணைப்பை பற்றி எழுதவே இக்கதையை ஆரம்பிக்கிறேன் நான், இல்லை ஆரம்பிக்கிறான் அவன் இல்லை இல்லை ஆரம்பிக்கிறீர்கள் நீங்கள்.

ம்உம்ம்ம்....
சரி சொல்லுங்கள்
எப்படி இந்த கதையை முடிக்க போகுறீர்கள்

பைத்தியம் பைத்தியம்

இது கதையல்ல கவிதை

நீ தான் பைத்தியம்

இது கட்டுரை

பைத்தியம்........................................... பைத்தியம்......................................... பைத்தியம்...................................................... பைத்தியம்......................................................... பைத்தியம்...................... பைத்தியம்.................................................. பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் எல்லாரும் பைத்தியம்

ஆதவா
10-01-2012, 05:50 PM
மனசுல இருந்ததை எல்லாம் ”சாரு” பிழிஞ்சிட்டீங்க போல.... :cool:

கீதம்
10-01-2012, 10:52 PM
ம்...ம்... ஒரு முடிவோடதான் இருக்கீங்க... பைத்தியம் விரைவில் தெளிய வாழ்த்துக்கள்.

ஆதி
11-01-2012, 08:29 AM
மனசுல இருந்ததை எல்லாம் ”சாரு” பிழிஞ்சிட்டீங்க போல.... :cool:

கியூப்ஹிசம் என்று ஒரு இசம் உண்டு..

ஒரு பெட்டிக்குள் பெட்டி, பெட்டிக்குள் பெட்டி வைத்து கொண்டு போவது போல

ஒரு இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களை ஒன்றின்னுள் ஒன்றாக அடுக்குதல்..

இதனை கவிதைக்குள் கொண்டு வருதலின் சாத்தியத்தை யோசித்த போது ஒரு மனவளர்ச்சியற்றவனின் கவிதையாக எழுதலாம் என்று தோன்றியது..

நம் வாழ்க்கையும் இப்படித்தான் ஒரு குறிக்கோளோடு துவங்கி திசை மாறி வேறு வடிவம் கொண்டு அங்கும் நிலை கொள்ளாமல் மீண்டும் வேறு அதன்பின் வேறு வேறு என மாறி எது வேரு என தெரியாமல் நம்மை ஒரு பைத்திய நிமிடத்தில் தத்தளிக்க வைத்துவிடும்..

அந்த பைத்திய நிமிடம் வெற்றியின் கொண்டாட்டமாக இருந்தால் பிரச்சனையில்லை, தோல்விக்கான துக்கமாக இருந்தால் நிச்சயமாய் ஒரு மனம்பிறழ்ந்தவனை போலத்தான் நடந்து கொள்வோம்..

தாமரை
11-01-2012, 09:04 AM
ஆதன் ஐயா ஆதன் ஐயா?

மன வளர்ச்சி அற்றவனின் கவிதைக்கும் மன நிலை பிறழ்ந்தவனின் கவிதைக்கும் மத்தியில ஒரு நூலிழை உண்டு..

அதில போயி யாராவது தூக்கு போட்டுக்குவாங்களா?