PDA

View Full Version : சுத்தம்!!!



தாமரை
08-01-2012, 12:55 AM
கை துடைக்க நேப்கின்
காஃபி குடிக்க பேப்பர் கப்
ஜீஸ் குடிக்க ஸ்டிரா
தட்டுகளும் பேனாக்களும்
யூஸ் அண்ட் த்ரோதான்

அமெரிக்கா சொல்லிக் கொடுத்த
சுத்தம்..

படு சுத்தம்
எங்களூர் காடுகளும் வளங்களும்
எங்கள் பணப்பையும்

ஜானகி
08-01-2012, 02:16 AM
சத்தமின்றிக் குத்தும் பேப்பர் கத்தி...!

கீதம்
09-01-2012, 12:09 AM
சுத்தம் சோறு போடுமாம். இப்படியொரு சுத்தம் சோற்றுக்கே வழியில்லாமல் செய்துவிடும்போல் உள்ளதே. சுத்தம் பற்றிய விழிப்புணர்வுக் கவிதைக்குப் பாராட்டுகள்.

ஜானகி அம்மாவின் காதிதக் கத்தியில் கூர் அதிகம்.

பிரேம்
09-01-2012, 01:14 AM
சார்..நெத்தியடி...செம கவிதை சார்...அருமை சார்..:)

தாமரை
09-01-2012, 04:20 AM
பன்னாட்டு நிறுவங்கள் இப்படி நம் வளத்தைச் சுரண்டி வருடா வருடம் எடுத்தும் செல்லும் பணம் 30 ஆயிரம் கோடிக்கு மேல்..

அன்புரசிகன்
09-01-2012, 09:35 PM
சீனர்களை வாழவைக்கும் மிகப்பெரிய தொழிலே இந்த தற்காலிக பாவனை பொருட்க்கள் தான். கோப்பை தட்டு கரண்டியிலிருந்து அனைத்தும்... மிக மலிவு. வீட்டை சுத்தம் செய்வதும் இலகு. ஆனால் சுற்றாடல் மாசு பற்றி எவரும் கவலைப்படுவதில்லை....

எல்லாம் சோம்பேறித்தனத்தின் விளைவு தான்... இல்லையா??? :lachen001:

தாமரை
10-01-2012, 06:19 AM
சுயநலம் + சோம்பேறித்தனம் + தொலைநோக்கின்மை

இவை அனைத்தும் சேர்ந்ததன் விளைவு..

அக்னி
10-01-2012, 12:16 PM
எனது சிறுவயதுகளில், பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணம் செல்லுவது என்றால்,
வாழையிலையில் சோற்றுப்பொதியும் பயணப்பொதிகளோடு சேர்ந்துகொள்ளும்.
அதன் சுவையே அலாதிதான்.

அதன்பின்னர் வாழையிலை, மெல்லிய பொலித்தின் ஆக மாறியது.

இப்போதோ எல்லாமே மாறிவிட்டது.

தவிர்க்க முடியாமல் நானும், நீங்களும் உடந்தையாக,
செயற்கை செயற்கை என்று இயற்கையை இல்லாமலழித்துக்கொண்டிருக்கின்றோம்.

'நறுக்' கவிதை அண்ணா...

கீதம்
10-01-2012, 10:41 PM
camping செல்பவர்கள் கட்டாயம் எவர்சில்வர் தட்டுகளையும் குவளைகளையும் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பது இங்கே பொதுவிதி. Disposable பொருட்களால் காடுகளும், மலைகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் மாசடைவதைத் தடுப்பதற்காகவும் அங்கிருக்கும் உயிரினங்களைப் பேணுவதற்காகவும் எடுக்கப்படும் முயற்சியாம். ஒருபக்கம் இயற்கையை அழித்துக்கொண்டே மறுபக்கம் அதைக் காப்பதற்கான நடவடிக்கைகள்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-03-2012, 01:45 PM
சரியான 'நச்' என்ற ஒரு கருத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர் தாமரை அவர்களே..நன்று:)