PDA

View Full Version : " தொடர்பு எல்லைக்கு அப்பால் "



M.Jagadeesan
07-01-2012, 11:52 AM
சிட்டுக்குருவி போல சேர்த்துவைத்த பணத்தை எல்லாம்
சீட்டுக் கம்பெனி ஒன்றிலே போட்டுவைத்தார் என் நண்பர்.
முதிர்வடைந்த பணத்தை எடுக்கச் சென்றவரை
எதிர்கொண்டு அழைத்தது தொங்கிய பூட்டு!
படபடப்பு மேலோங்க செல்லிலே பேசினார்
" தொடர்பு எல்லைக்கு அப்பால் " எனப்பதில் வந்தது.

பதினாறு வயது மங்கையாம் மகள்மீது கொண்ட
விடமுடியாத பாசத்தால் விரும்பியதை எல்லாம்
கடைகடையாய் ஏறி வாங்கிக் கொடுத்தார்.
செல்லமாக வளர்த்தார் " செல்லும்" கொடுத்தார்.
ஆனால் அவள் இப்போதோ
" தொடர்பு எல்லைக்கு அப்பால் "

இடிமேல் இடியாக இறங்கியதால் என்நண்பர்
பொடியாகச் சமைந்திட்டார் போகுமிடம் தெரியாமல்
விடிந்தும் விடியாத அதிகாலை வேளையிலே
விடைகொண்டார் உயிரைவிட மானமே பெரிதென்று.
அவரும் இப்போது
" தொடர்பு எல்லைக்கு அப்பால் "

பிரேம்
07-01-2012, 12:28 PM
சார்..கவிதை அருமை சார்..
கஷ்டப்பட வச்சிட்டீங்களே சார்..:)

sarcharan
10-01-2012, 12:31 PM
சன் தொலைகாட்சியில் சென்ற ஞாயிற்றுகிழமை அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் பார்த்தேன். இதை ஒரு அம்மா தமாஷாக சொன்னார்கள்.


"..செல்லம் கொடுத்து
செல்லும் கொடுத்து வளர்த்த மகள்
இப்பொழுது தொடர்பு எல்லைக்கு அப்பால்..."

நீங்களும் அதே பாணியில் கவிதை வனைந்து விட்டீர்கள். நல்ல கவிதை.

கீதம்
10-01-2012, 11:01 PM
ஏமாற்றம் தாங்கவியலா மனம் எளிதாய் மேற்கொண்ட முடிவு. கடைசி பத்தி மனம் வருத்துகிறது. உண்மையான வரிகள். அருமை.

ஜானகி
11-01-2012, 12:43 AM
உண்மையான, நிலையான தொடர்பை நோக்கிப் பறந்துவிட்டதோ எல்லை நோக்கி...? யாருக்கு யார் தொடர்பு....? யாரை நம்பி நாம் பிறந்தோம்...? ஏன் இந்தப் பரிதவிப்பு...? இதெல்லாம் புரியும் வரை அலைக்கழிப்புதான்....!

M.Jagadeesan
11-01-2012, 01:57 AM
நண்பர்கள் பிரேம், சர்சரண், கீதம், ஜானகி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.

அன்புரசிகன்
11-01-2012, 03:29 AM
அன்னையர் தினத்துக்கும் தந்தையர் தினத்துக்கும் மறக்காது வாழ்த்து அட்டை கொடுப்போருக்கு இந்த கவிதையை அர்ப்பணிக்க வேண்டும்....
---
போகுற போக்கில் கணவர் தினம் மனைவி தினம் வந்தாலும் வரும்.....

நெஞ்சு கனக்கும் வரிகள்.....

M.Jagadeesan
11-01-2012, 04:54 AM
அன்புரசிகனின் பாராட்டுக்கு நன்றி