PDA

View Full Version : தலையற்றக் கவிதைகீதம்
05-01-2012, 05:43 AM
அதீத வாஞ்சையுடனோ அல்லது
அளவு கடந்த உரிமையுடனோ
விடுக்கப்படும் அழைப்புகள் யாவும்
அறைகூவல்களெனவே அங்கீகரிக்கப்படுகின்றன,
விடுக்கப்படும் இடம் சமர்க்களமென்னும்போது.

அதிகபட்ச ஆவேசத்துடன்
களம் புகுந்த கவிதையொன்று
உயிர்ப்பதும் மரிப்பதுமாய் உயிர் தொக்கிநிற்கும்
உள்ளீடற்றக் கவிதையொன்றின் தலையினை
அதிவேகமாய்த் துண்டித்துச் சென்றதோடு,
செங்குருதி சொட்டுமதை, திருட்டிபொம்மை போலவே
தொங்கவிட்டுள்ளது தன் இல்லத்தின் முகப்பில்!

தலை(ப்பு)களை விரும்பாத கவிமனம் அது!
தலை கொய்து போன காரணம் எதுவோ?

தாமரை
05-01-2012, 06:23 AM
சமர் = சம+ ஹர் = சம + அறுத்தல் (ஹரன் என்றால் அறுப்பவன் - பிறவித் துன்பத்தை, கேட்டை அறுப்பவன் என்று அர்த்தம். .அழிப்பவன்)..

சமமான இருவர் ஒருவரை ஒருவர் அ(று)ழிக்கும் நோக்கில் போரிடுவது சமர் எனப்படும்.. (இனிமே இந்த வார்த்தையை என் கண்ணெதிரில் கீதம் உபயோகிப்பாங்களா?? :icon_ush:)

அக்னி ஒரு சின்ன கேள்விதானே கேட்டார்..

உயிர்ப்பதும் மரிப்பதும் - உயிர்ப்பதும் மரிப்பதுமாய்

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஆய் தானே என்று அலட்சியம் செய்ய முடியாது. ஏனென்றால் ஆய் மிகப் பெரிய வள்ளல் (கடையேழு (இந்த இடத்தில் கடியேழு) வள்ளல்களில் ஒருத்தர்.)

ஆய் என்பது தனியே வந்திருந்தால் ஆராய்ட்சி செய் என்று அர்த்தம் தொனித்து இருக்கும்.

அதுவே ஒரு சொல்லிற்கு பின் வந்திருந்தால் நானாய் நீ, அதுவாய் இது என பின்னதை முன்னதாக்கி விடும்

அதுவே முன் வார்த்தைக்கு உம் விகுதி பெற்று இரண்டாவது வார்த்தைக்கு பின் ஆய் வந்ததால் இது அது என மாறி மாறி என்று பொருளாகி விடுகிறது.

இப்படி மரிப்பதுமாய் என்று இணைந்ததினால்

அது உயிர்ப்பதையும் மரிப்பதையும் மறுபுறத்தில் இணைக்கிறது..

அதாவது

உயிர்த்தல் - மரித்தல் - உயிர்த்தல் - மரித்தல் என்ற சுழற்சியைக் குறிக்கிறது..

அக்னி அதையே சொல்லி இருக்கிறார்

இதுவரை அழகாய்த்தெரிந்த காட்சி மாற்றம்..,
முயற்சி > போராட்டம் > வெற்றி > கர்வம் > அலட்சியம் > தோல்வி > (மீண்டும்) முயற்சி...
இதுவரைக்கும் தெரியவில்லையே இந்தச் சுழற்சியாய்...

ஆனால் அடிப்படையில் கவிதை சொல்ல வந்த விஷயம் வேறு உண்மை விஷயம் வேறு..

இரவோ பகலோ அவை அவை அப்படி அப்படியேதான் இருக்கிறது. இரவு பகல் என்பது வெளிச்ச மாறுபாடு.. இரவு செத்து பகல் பிறப்பதில்லை.. பகல் செத்து இரவு பிறப்பதில்லை.. ஒரு கோணத்தில் கவிதையைக் கண்டால் ஒரு பொருள் தோன்றும்.. மறு கோணத்தில் அதே கவிதையைக் கண்டால் முதல் பொருள் மறைந்து மறு பொருள் தோன்றும். அதே போல் பகலில் தெரிவது இரவில் தெரிவதில்லை. இரவில் தெரிவது பகலில் தெரிவதில்லை..

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

ஆக மறைப்பதும் அருளுபதுமான இறைவனின் கடையிரண்டு காரிய மாயம் அது. மரிப்பதுமில்லை. உயிர்ப்பதுமில்லை.

பகலில் வெளிச்சத்தைக் கொடுப்பவையில் சூரியன் மட்டுமே தெரியும். மற்ற இடங்கள் தெரிவது அவ் வெளிச்சங்கள் மறைவதுதான்..

இரவில் வெளிச்சங்களைக் கொடுக்கும் நட்சத்திரங்கள், நிலா, விளக்குகள் ஆகியவை தெரிகின்றன.

நல்லவனிடம் இருக்கும் கெட்ட குணமும் கெட்டவனிடம் இருக்கும் நல்ல குணமும் போல..

பகலில் இரவு இருக்கிறது(ஒளி மறைவு) அதனால்தான் பொருட்கள் தெரிகின்றன. இரவில் பகல் இருக்கிறது. சின்ன ஒளி கூட பளீரெனத் தெரிகிறது.

எப்படி ஒரே குணத்திற்காக ஆண்டி ஹீரோ நல்லவன் ஆகிறானோஅதே போல் பகல் என்றால் வெளிச்சம் என்கீறோம். இரவு என்றால் கருப்பு என்கிறோம்..

ஆனால் உண்மை என்னவென்றால்

பகலில் இருளைப் பார்ப்பதால்தான் பொருள்கள் தெரிகின்றன.
இரவில் வெளிச்சம் மட்டுமே காண்கிறோம்..

(உங்களுக்கு நல்லா வேணும்.. :icon_ush:)சிவத்தல் என்பது காயப்பட்டு இரத்தத்தினாலா? மாயப்பட்டு நாணத்தினாலா என்பது அழகிய கேள்வி.. காயப்பட்ட இரத்தம் என்றால் அலறலோசையும்.. மாயப்பட்ட நாணத்தினால் என்றால் சிணுங்கலோசையும் வரும். அதிகாலையோ அந்திமாலையோ சிணுங்கலுடனே இருக்கிறது,, காரணம் பகல் இரவை அணைக்கிறது.. இரவு பகலை அணைக்கிறது.. இருவருக்கும் உண்டாகும் ஊடலால் பகலும் இரவும் விலகிச் சென்றும், விரகத்தினால் மீண்டும் கூடலில் ஈடுபட்டு நாணத்தினாலும் சிவக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் இந்தக் காதல் நாடகம் கண்டு களுக்கென்று சிரிக்கின்றன என்றே தெரிகின்றன. இரத்தம் வெளியே பாய்ந்தாலும் உள்ளே பாய்ந்தாலும் செவ்வண்ணம் தோன்றும்.

இரத்தம் வெளியில் பாய்ந்தால் சாதல்..
இரத்தம் உள்ளே பாய்ந்தால் காதல்..

அக்னி போட்ட பின்னூட்டம் தலையைக் (தலைப்பைக்) கொய்தது என்றால் இந்தப் பின்னூட்டம் எதைக் கொய்யப்போகுது என எனக்குப் புரியலை.. (ஹி ஹி)

இங்க கொய்த தலையை ஆதன் கொண்டு போகலை.. அது அது ஆதனின் தலை..

இரண்டு கவிதைகளுக்கும் பொதுவான தத்துவம் இருந்தாலும்.. ஆதனின் கவிதை ஃபோட்டோ.. உங்க கவிதை வீடியோ.. அது வித்தியாசம்..

இங்கே கொய்யப்பட்ட தலை அதுவல்ல. அது அதுவானால் நான் கூறு போட்டது எது??? :D:D:D:D:D:D

(ஆறு மாசம் தலை மறைவா போக வேண்டி இருக்கும் போல)

Nivas.T
05-01-2012, 10:37 AM
:eek::eek::eek::eek::eek:
:frown::frown::frown::frown::frown:
:redface::redface::redface::redface:

கீதம்
05-01-2012, 10:47 AM

எங்களுக்குதான் இங்கே சம்மர். மண்டை காய்ந்து போய் ச(ம்)மர், ச(ம்)மர் என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன். அங்கே இப்போது பனிக்காலம்தானே… :D

தலையற்றக் கவிதை படித்தவர்களுக்கு எதுவும் புரியாமல் தலை சுற்றலாம்.:mini023: உங்கள் பின்னூட்டம் பார்த்தபின் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம்.:confused: இல்லையெனில் இதையெல்லாம் படிக்கணும்னு நம்ம தலையில் எழுதியிருக்கு என்று தலையில் அடித்துக் கொண்டு போகலாம்.:traurig001: அல்லது உங்கள் பாணியில் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகலாம். :icon_p:

இதுவரை விளையாட்டு.:) இப்போது சிரத்தையுடன் சொல்கிறேன். கவிச்சமர்க்களத்தில் பதிந்த ஒரு கவிதை, உயிர்ப்பதும் மரிப்பதுமாய்… ஆகிய கவிதைகளின் தொடர்ச்சியாய் ஆதனின் மீமெய்மை கவிதையைக் கற்பனை செய்து விளையாட்டாய் ஆதனின் அனுமதியுடன் பதியப்பட்ட கவிதை இது. இப்போது தலையறுந்த கதை அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். :)

ஒரு கவிதையை என் கருத்தில் தோன்றியபடி எழுதிப் பதிவிட்டுவிடுகிறேன். அதை அழகாக விமர்சித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லும்போதுதான் அந்தப் படைப்பு முழுமை பெறுவதாக உணர்கிறேன். அந்தவகையில் இவ்விரண்டு கவிதைகளும் நல்ல விமர்சக வித்தகர்களின் பார்வையில் பட்டுப் புடம்போடப்பட்டிருப்பது எனக்குப் பெருமகிழ்வைத் தருகிறது. ஜானகி அம்மா, அக்னி மற்றும் தாமரை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. :icon_b:

பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும், என் தலை தாழ்த்திய வணக்கம். :icon_03:

ஆதவா
05-01-2012, 10:49 AM
தலையற்ற(க்) கவிதை!

உங்களது கவிதையைப் படித்தமாத்திரம் எனக்குத் தோன்றிய சம்பவம் ஒன்று,

தனது வீட்டிலோ அலுவலகத்திலோ சுவற்றில் மாட்டி அழகு பார்க்க இரண்டு ஓவிய விரும்பிகள் ஒரு ஓவியத்தை விரும்புகிறார்கள், இருவருக்குமுள்ள ரசனை வேறுபாட்டாலும், விலை விபர சமரசத்தாலும் முட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தடாலடியாக ஒரு வியாபாரி இடை நுழைந்து ஓவியத்தை வாங்கிவிடுகிறார். அதன் அர்த்தமோ அழகோ தெரியாமல்....

கேள்விப்பட்ட சம்பவம் தான் அது,
நிறைய பேருக்கு தன்னிடம் எல்லாமும் இருக்கவேண்டும் என்ற செருக்கு இருக்கவே செய்கிறது. தனது பலத்தை அதன் மூலம் நிரூபிக்கிறார்கள், சிலர் சுயபரிசோதனைக்காகவும் செய்வதுண்டு. மதயானை வயலில் புகுந்தது போல எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு தானும் புசிக்காமல் கபளீகரம் செய்வது. சில கவிதைகளும் அப்படித்தான் இருக்கின்றன!!!

அடுத்தமுறை சமமான ஆளுடன் மட்டுமே போரிடவேண்டும்!! - ஒரு இளம் கவிதையின் வாள்!

------------------
அண்ணன் நிறைய சொன்னாலும் நல்லாச் சொன்னாரு!!

ஜானகி
05-01-2012, 12:30 PM
ஒன்றும் புரியாதபோது, பிய்த்துக்கொள்வதற்கு தலையாவது மிச்சம் வைக்கக்கூடாதா....இப்படி ஆளாளுக்கு கொய்து போடுகிறீர்களே...? நியாயமா...?

தாமரை
05-01-2012, 03:24 PM
எங்களுக்குதான் இங்கே சம்மர். மண்டை காய்ந்து போய் ச(ம்)மர், ச(ம்)மர் என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன். அங்கே இப்போது பனிக்காலம்தானே… :D

வெப்பம் எங்கெங்கே இருக்கு என்பதற்கு இந்த விளக்கம் இங்கே இருக்கிறது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=531659

கவிச்சமர்க்களத்தில் பதிந்த ஒரு கவிதை, உயிர்ப்பதும் மரிப்பதுமாய்… ஆகிய கவிதைகளின் தொடர்ச்சியாய் ஆதனின் மீமெய்மை கவிதையைக் கற்பனை செய்து விளையாட்டாய் ஆதனின் அனுமதியுடன் பதியப்பட்ட கவிதை இது. இப்போது தலையறுந்த கதை அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். :)

சமர் என்பதற்கு ஏன் அர்த்தம் சொன்னேன் என்றால் அது நிஜமாகவே கவிச்சமராக இல்லை என்பதால்தான்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=295844#post295844

சொற்சிலம்பம் திரியை சற்று பொறுமையாகப் படித்துப் பாருங்கள் அங்கிருக்கும் வகையான கவிதை வரிசையை கவிச் சமர் என்று சொல்லலாம்..

நம்ம கவிச்சமர் அப்படி இல்லையல்லவா.. அது அந்தாதிக் கதம்பம்

ஒரு கவிதையிலிர்ந்து பல கவிதைகள் பிறப்பது நம்ம மன்றத்தில் சகஜமான விஷயமாக இருந்தது..முழு திரியையும் படிக்கவும். பின்னூட்டங்களால் புகழ்பெற்ற பல திரிகள் மன்றத்தில் உண்டு.. ஒரு கவிதையோடு ஒரு திரி முடிந்து போனால் அது மன்றத்திற்கு அழகில்லை... அதற்கு அதை நோட்டீஸாக போட்டு விடலாமே..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6258
www.tamilmantram.com/vb/showthread.php?t=6503

இப்படிப் பல கவிதைகள் உண்டு...

விமர்சனங்களை அறிவுப் பகிர்வுகளாக காணும் வரை நாம் மேலும் மேலும் கற்கலாம்... அந்த வகையில் மனதில் தோன்றுவதை எழுத முடிவதில் மிகவும் மகிழ்ச்சியே!!!

அக்னி
05-01-2012, 04:06 PM
அம்பு கொய்தாலும் எய்தவனுக்குத்தானே பழியோ பாராட்டோ...
ஆக,
கவிதை கொய்தாலென்ன... கவிமனம் கொய்தாலென்ன...
இரண்டில் எதுவோ கொய்தது எத்தலையானாலும்,
செல்வர் கொய்தது எத்தலையோ இல்லை எத்தனையோ என்பதுதான் சந்தேகம்...

இத்தலை கத்தலை... :icon_ush: இத்தலை(க்குள்) பத்தலை... :spezial:

கீதம்
10-01-2012, 11:17 PM
தலையற்ற(க்) கவிதை!

உங்களது கவிதையைப் படித்தமாத்திரம் எனக்குத் தோன்றிய சம்பவம் ஒன்று,

தனது வீட்டிலோ அலுவலகத்திலோ சுவற்றில் மாட்டி அழகு பார்க்க இரண்டு ஓவிய விரும்பிகள் ஒரு ஓவியத்தை விரும்புகிறார்கள், இருவருக்குமுள்ள ரசனை வேறுபாட்டாலும், விலை விபர சமரசத்தாலும் முட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தடாலடியாக ஒரு வியாபாரி இடை நுழைந்து ஓவியத்தை வாங்கிவிடுகிறார். அதன் அர்த்தமோ அழகோ தெரியாமல்....

கேள்விப்பட்ட சம்பவம் தான் அது,
நிறைய பேருக்கு தன்னிடம் எல்லாமும் இருக்கவேண்டும் என்ற செருக்கு இருக்கவே செய்கிறது. தனது பலத்தை அதன் மூலம் நிரூபிக்கிறார்கள், சிலர் சுயபரிசோதனைக்காகவும் செய்வதுண்டு. மதயானை வயலில் புகுந்தது போல எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு தானும் புசிக்காமல் கபளீகரம் செய்வது. சில கவிதைகளும் அப்படித்தான் இருக்கின்றன!!!

------------------
அண்ணன் நிறைய சொன்னாலும் நல்லாச் சொன்னாரு!!

உங்கள் தலையற்ற கவிதைக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25198)நான் ஒரு கதை சொன்னேன். என் தலையற்றக் கவிதைக்கு நீங்கள் ஒரு கதை சொல்லிவிட்டீர்கள். கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது இப்போது. :D

அடுத்தமுறை சமமான ஆளுடன் மட்டுமே போரிடவேண்டும்!! - ஒரு இளம் கவிதையின் வாள்!

ஒருமுறையாவது போரிட்டால்தானே தெரியும் எதிராளியின் பலம் என்னவென்று? :)

கீதம்
10-01-2012, 11:23 PM
ஒன்றும் புரியாதபோது, பிய்த்துக்கொள்வதற்கு தலையாவது மிச்சம் வைக்கக்கூடாதா....இப்படி ஆளாளுக்கு கொய்து போடுகிறீர்களே...? நியாயமா...?

முடியிருந்தால் அதைப் பிய்த்துக்கொள்ள முடியும். :icon_rollout: ஆதனுடைய கவிதையிலிருப்பதோ மொட்டைத்தலை. :) அதனால்தான் தலையையே பிய்த்தாகிவிட்டது. நமக்கும் பித்தாகிவிட்டது. :D

கீதம்
12-01-2012, 08:21 PM
வெப்பம் எங்கெங்கே இருக்கு என்பதற்கு இந்த விளக்கம் இங்கே இருக்கிறது.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=531659

ஆஹா... அருமையான விளக்கம்தான். அதற்காக இங்கு இருப்பதெல்லாம் வெப்பமில்லையென்று ஆகிடுமா? வெய்யில் கொளுத்துகிறதே...

சமர் என்பதற்கு ஏன் அர்த்தம் சொன்னேன் என்றால் அது நிஜமாகவே கவிச்சமராக இல்லை என்பதால்தான்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=295844#post295844

சொற்சிலம்பம் திரியை சற்று பொறுமையாகப் படித்துப் பாருங்கள் அங்கிருக்கும் வகையான கவிதை வரிசையை கவிச் சமர் என்று சொல்லலாம்..

நம்ம கவிச்சமர் அப்படி இல்லையல்லவா.. அது அந்தாதிக் கதம்பம்

என்ன செய்வது? ஆரோக்கியம் என்ற பெயருள்ளவன் நோஞ்சானாய் இருக்கிறான் என்பதற்காக பெயர் மாற்றி அழைக்க முடியுமா? காரணப்பெயரோ, இடுகுறிப்பெயரோ, ஆகுபெயரோ, அடையாளப்பெயரோ... அழைக்கப்படும் பெயர் என்னவோ அதால்தானே அழைக்கமுடியும்?:)

சொற்திறம் மிக்கவர்கள் சுழற்றும் சிலம்பம் சொக்கவைக்கிறது. நாங்களோ கற்றுக்குட்டிகள். :icon_rollout: கற்றுக்கொள்கிறோம் கவிதைகளை! சொல்லிக்கொள்கிறோம், எங்களுக்கு சவால் விடும் களத்தை சமர்க்களமென்று ! போனால்போகிறோம், விட்டுத்தள்ளுங்களேன் வியாக்கியானத்தை! :frown:

ஒரு கவிதையிலிர்ந்து பல கவிதைகள் பிறப்பது நம்ம மன்றத்தில் சகஜமான விஷயமாக இருந்தது..முழு திரியையும் படிக்கவும். பின்னூட்டங்களால் புகழ்பெற்ற பல திரிகள் மன்றத்தில் உண்டு.. ஒரு கவிதையோடு ஒரு திரி முடிந்து போனால் அது மன்றத்திற்கு அழகில்லை... அதற்கு அதை நோட்டீஸாக போட்டு விடலாமே..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6258
www.tamilmantram.com/vb/showthread.php?t=6503

இப்படிப் பல கவிதைகள் உண்டு...

ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிஞர்களின் கவித்திறனும் சொல்லாட்சியும் வியக்கவைக்கிறது. சுட்டி தந்ததற்கு மிகவும் நன்றி தாமரை அவர்களே.

விமர்சனங்களை அறிவுப் பகிர்வுகளாக காணும் வரை நாம் மேலும் மேலும் கற்கலாம்... அந்த வகையில் மனதில் தோன்றுவதை எழுத முடிவதில் மிகவும் மகிழ்ச்சியே!!!

தமிழ் மன்றத்தின் சிறப்பே இதுதானே.... நானும் என் மனதில் தோன்றியதை இங்கு பதிய முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. இந்தக் கருத்தைத்தான் அது ஒரு பொற்காலம் கவிதையில் சொல்லியிருந்தேன். விமர்சனங்களை ஏற்கத் துணியாத எந்தக் கவிதையும் அடுத்தப் படிக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அழகான அசத்தலான பின்னூட்டத்துக்கு நன்றி தாமரை அவர்களே.

கீதம்
12-01-2012, 08:25 PM
:eek::eek::eek::eek::eek:
:frown::frown::frown::frown::frown:
:redface::redface::redface::redface:

விழித்தும் சுழித்தும் பழித்தும் போனதற்கு

களித்தும் இளித்தும் அளித்தும் மகிழ்கிறேன் நன்றி.

நன்றி நிவாஸ். :) :D :icon_b:

கீதம்
12-01-2012, 08:50 PM
அம்பு கொய்தாலும் எய்தவனுக்குத்தானே பழியோ பாராட்டோ...
ஆக,
கவிதை கொய்தாலென்ன... கவிமனம் கொய்தாலென்ன...
இரண்டில் எதுவோ கொய்தது எத்தலையானாலும்,
செல்வர் கொய்தது எத்தலையோ இல்லை எத்தனையோ என்பதுதான் சந்தேகம்...

இத்தலை கத்தலை... :icon_ush: இத்தலை(க்குள்) பத்தலை... :spezial:

பத்தினால் பரவும் எரித்தலை, பத்தினால் பரப்பும் எரிதலை.

அ(க்னி)த்தலைக்குள் பத்தலையெனில் இத்தலை பத்திப் பயனென்ன?

பத்தும் எத்தலையும் பத்தாது அத்தலைக்கு.

பித்தாக்கும் எத்தலையும் முத்தாக்கும் முடிவினிலே. :icon_b: