PDA

View Full Version : மீமெய்மை - 3ஆதி
03-01-2012, 01:44 PM
ரத்தம் சிதற கொய்து தொங்கவிடப்பட்ட
மொட்டைத்தலையொடு
மின்னும் பற்தெரிய
கோரமாய் இளிக்கும் வானம்

தாமரை
04-01-2012, 12:24 AM
மொதல்ல மீமெய்மை அப்படின்னா என்ன?

உங்கள் கையெழுத்தில் உள்ளது தானா?

அப்ப இந்தக் கவிதையை நாங்க எப்படி விமர்சனம் செய்யறது..?

வானம் இளிப்பது மின்னல் என்றால்

மொட்டைத் தலை வானம் (தெளிந்த வானம்) எப்படி இளிக்கும்னு யோசிக்கறேன்..

கருகருன்னு சுருள் முடியோடு கூடிய வானம் தானே மின்னலிட்டு இளிக்கும்னு தோணுது..

அப்ப இரத்தம் எங்கிருந்து வந்ததுன்னு யோசிக்கிறேன்.. வானம் கரு கருன்னு இருந்தா சிவக்காது.. மொட்டைத்தலையோடு இருந்தால்தான் சிவக்கும்..

அப்ப மின்னும் பல் தெரியும் சிரிப்பு என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்..

ஒளிரும் என்பதற்கும் மின்னும் என்பதற்கும் உள்ள வித்தியாசம்..

ஒளிரும் என்பது இருந்துகிட்டே இருக்கிற வெளிச்சம்.. மின்னும் என்பது அணைந்து அணைந்து ஒளிரும் வெளிச்சம்.

ஆக வானம் என்பது வானமா? என்ற கேள்வி இப்போது தொங்கல்ல நிக்குது...

வர்ட்டா?

M.Jagadeesan
04-01-2012, 02:26 PM
" மீ மெய்மை " என்றால் " அதீத உண்மை " என்று பொருளாகும். ஒளவையாரும் , " மீதூண் விரும்பேல்" என்று பாடியுள்ளார்.
மின்னலுக்கு உவமை பற்கள் என்றால் மொட்டைத் தலையை எதற்கு ஒப்பிடுகிறீர்கள்?

ஜானகி
05-01-2012, 12:02 AM
ஏன் இந்த கொலைவெறி....? அந்த செவ்வானமும், மின்னல் சிரிப்புமே சாந்தியளிக்கட்டும்...!

தாமரை
05-01-2012, 01:56 AM
ஆதன் என்ன சொல்ல வர்ரார் என்பதைச் சொல்லி விடுகிறேன்..

அது ஒரு முழுநிலா இரவு...

மொட்டைத்தலையாய் பிரகாசித்தது முழுநிலா..

தலை கீழாக தொங்குபவரின் கழுத்தை யாரோ கரகரவென அறுத்ததால் இரத்தம் பீய்ச்சியடித்து தலை முழுதும் குருதி வடிகிற மாதிரி

அந்த நிலா சிவக்கிறது..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425883&postcount=24


அண்ட வெளியில் உள்ள கருந்துளைகள் நட்சத்திர மண்டலங்களையே விழுங்கி விடும் அகோரப் பசி கொண்டவை. அது போல் கருப்பாய் இருப்பதால் இரவு நேரக் கருநிற வானமும் அகோரப் பசி கொண்டதாகவே தோன்றுகிறது...

அந்த கறுத்த பசியுடைய வானம் அந்த இரத்தத்தைக் கண்டு அகோர பசி கொண்ட தன் கோரமான நட்சத்திரப்பற்கள் (கிரஹணத்தால் ஏற்பட்ட வெளிச்சக் குறைவால் நட்சத்திரங்கள் திடீரென பிரஹாசம் அதிகரித்தது போல் காணப்படும்) மின்ன வெறிச் சிரிப்புடன் அந்த இரத்தம் தோய்ந்த நிலவுத் தலையை சுவைக்க எண்ணுவது போலத் தோன்றுகிறது..

இந்தக் கவிதையில் ஆதன் விட்ட ஒரு சின்னப் பிழை கவிதையைக் குழப்பி விட்டது.. கவிதையை அதன் பொருள் தென்படுமாறு சிறிதே மாற்றம் செய்கிறேன்..

ரத்தம் சிதறக் கொய்து தொங்கவிடப்பட்ட
மொட்டைத் தலை
மின்னும் பற்தெரிய
கோரமாய் இளிக்கும் வானம்

இது மீள்-மெய்ம்மை - அதாவது மீண்ட உண்மை.. ஹி ஹி ஹி :lachen001::lachen001::lachen001:

ஆதவா
05-01-2012, 11:01 AM
Me மெய்மை அப்படிங்கறாருங்கறேன்...
அதாவது ”கொலவெறி” பாஷையில்!!

I am மெய்மை!!!??

தொங்கவிடப்பட்ட வானம், எனில் தொங்கவிடப்பட்ட இடம் எது?
சிரிக்கும் போதே கொய்தாச்சா இல்லை கொய்தபின் இளிப்பா?
கேள்வி கேக்கிறது ஈஸி, ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம், இப்படி கேள்வியுமில்லாம பதிலுமில்லாம ”மொட்டையா” அதுவும் வெறும் தலையோட கேட்டா என்னன்னு சொல்றது?

அதனால....

மெய்யுக்கு மையிட்டா டாட்டு
மையில மெய்யிட்டா வேட்டு!
அதனால இப்போதைக்கு அப்பீட்டு!
பை!

மீமெய்மை 1... அப்படின்னா இன்னமும் இருக்குன்னு அர்த்தம், பார்ட் டூவுக்காக வெயிட்டிங்..

தாமரை
05-01-2012, 02:43 PM
Me,me- I - My

இதைத்தானே சொன்னீங்க ஆதவா?

ஆதவா
05-01-2012, 04:41 PM
Me,me- I - My

இதைத்தானே சொன்னீங்க ஆதவா?

:):icon_b::icon_b:

சூப்பர்!!

ஆதி
06-01-2012, 09:22 AM
அடுச்சு தொவச்சு தும்சம் பண்ணியாச்சா :D

பின்னூட்ட*மிட்ட* அனைவ*ருக்கும் ந*ன்றி, க*விதையை மீட்டு கொடுத்த* அண்ணாவுக்கு ந*ன்றியோ ந*ன்றி :D

@ ஆதவா..

//I am மெய்மை!!!??//

நீங்க* மெய் மையா? பொய் மையா? நு உங்க*ளுக்கு க*ல்யாண*ம் ஆன*தும் தெரிஞ்சுடும்... சோ ச*ண்ட*யெல்லாம் வ*ந்தா "பீக் கேர் ஃபுல்" (ஃபுல்லா த*ண்ணிய*டுச்சுட்டு கேரோட* தூங்கிடுங்க*னு சொல்ல*ல*)

அக்னி
06-01-2012, 12:00 PM
@ ஆதவா..

//I am மெய்மை!!!??//

நீங்க* மெய் மையா? பொய் மையா? நு உங்க*ளுக்கு க*ல்யாண*ம் ஆன*து தெரிஞ்சுடும்... சோ ச*ண்ட*யெல்லாம் வ*ந்தா "பீக் கேர் ஃபுல்" (ஃபுல்லா த*ண்ணிய*டுச்சுட்டு கேரோட* தூங்கிடுங்க*னு சொல்ல*ல*)

:sprachlos020: :eek: :sprachlos020: :eek:
என்னது... ஆதவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...

ஆதி
06-01-2012, 01:21 PM
உன் ஞாபக பூனைக்குட்டிகள்
அழுகிய என் காதலின் காயத்தை
வாஞ்சையோடு உறுஞ்சி
தணிக்க முயல்கின்றன தம் வேட்கையை..
அதன் நுண்ணிய நகங்கள் ரணத்தை
நிதமும் கீறி நடத்துக்கின்றது
ரத்த வேட்டையை..
பூனையின் வாயும்
என் ரணமும் பிளந்தவாறே இருக்கிறது
இன்னும் ஆறாமலே...

ஆதவா
06-01-2012, 02:01 PM
:sprachlos020: :eek: :sprachlos020: :eek:
என்னது... ஆதவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...

எனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்தது..
என்னது... இந்திரா காந்தி செத்துட்டாங்களா..... ???உன் ஞாபக பூனைக்குட்டிகள்
அழுகிய என் காதலின் காயத்தை
வாஞ்சையோடு உறுஞ்சி
தணிக்க முயல்கின்றன தம் வேட்கையை..
அதன் நுண்ணிய நகங்கள் ரணத்தை
நிதமும் கீறி நடத்துக்கின்றது
ரத்த வேட்டையை..
பூனையின் வாயும்
என் ரணமும் பிளந்தவாறே இருக்கிறது
இன்னும் ஆறாமலே...

மருந்து போடுங்க ஆதன், இல்லாட்டி பூனையை கொன்னுடுங்க, வேறவழியே இல்ல,

அக்னி
06-01-2012, 02:29 PM
எனக்கு இந்த டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்தது..
என்னது... இந்திரா காந்தி செத்துட்டாங்களா..... ???
என்னது... இந்திரா காந்தி செத்துட்டாங்களா... :cool:


மருந்து போடுங்க ஆதன், இல்லாட்டி பூனையை கொன்னுடுங்க, வேறவழியே இல்ல,
எப்பிடிக் கொல்வது ஆதவா...
வேணுமானா ஒரு கஜினி, ஒரு சேது ஆகலாம். இல்லேன்னா தற்கொலையாயிடாது...???

வலி கொடுக்கும் வரை காதல் காயத்தைக் ஆற்றச் சிந்தனையில்லாமல் இருந்தது யார் தவறு...

ஞாபகப் பூனை என்ன செய்யும்...
வாய் வைத்தும் கால் வைத்தும் காயத்தைப் புதுப்பிக்கத்தானே அதற்குத் தெரியும்...

ஆதி
06-01-2012, 03:00 PM
மருந்து போடுங்க ஆதன், இல்லாட்டி பூனையை கொன்னுடுங்க, வேறவழியே இல்ல,

சுயகழிவிரக்கமில்லை ஆதவா..

தெரிந்த ஒருவர் ஒரு கவிதை எழுதி இது சர்ரியலிசமா என்று கேட்டார்..

அந்த கவிதையின் கருவை உள்வாங்கி இதை இப்படி எழுதினா சர்ரியலிசம் என்று சொன்னேன்..

ஒருவரிடம் வெளியில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளுக்குள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதுதான் சர்ரியலிச உணர்வு..

எது கோரமான நிஜமோ அதுவே சர்ரியலிசம்..

காதலின் தோல்வி தர கூடிய வலி அலாதியானது, சுகமானது என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் இல்லையா, அது எப்படி இருக்கும் மேலுள்ல கவிதை மாதிரி தானே...

ஆதவா
07-01-2012, 07:37 AM
என்னது... இந்திரா காந்தி செத்துட்டாங்களா... :cool:


எப்பிடிக் கொல்வது ஆதவா...
வேணுமானா ஒரு கஜினி, ஒரு சேது ஆகலாம். இல்லேன்னா தற்கொலையாயிடாது...???

வலி கொடுக்கும் வரை காதல் காயத்தைக் ஆற்றச் சிந்தனையில்லாமல் இருந்தது யார் தவறு...

ஞாபகப் பூனை என்ன செய்யும்...
வாய் வைத்தும் கால் வைத்தும் காயத்தைப் புதுப்பிக்கத்தானே அதற்குத் தெரியும்...

மருந்து போடுங்க..... அல்லது கொன்னுடுங்க... இரண்டுக்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான்

காதல் என்ற வஸ்து, உலகில் எங்குமே கிடையாது என்று சுஜாதா சொன்னார்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பது போல பூனைகளைக் கொல்வது யானைகளாக இருந்துவிட்டு போகட்டும். பிறகு ஒருசமயத்தில் அதே ஞாபகப் பூனை தன் நாவால் நக்கிவிடவும் வாய்ப்புண்டு!

அப்படியெல்லாம் இருக்க முடியுமா என்றெல்லாம் கேட்காதீர்கள்,
நானும் பூனை வளர்த்து கொலை செய்திருக்கிறேன்.

ஆதி
03-04-2012, 10:46 AM
மடியில் புதைந்து குழைந்து புரளும்
ஒரு நாயென*
என்னிதழ் மௌனம்
உனை சுற்றி வருவது
உன் இதழ்களின் தலை வருடலுக்காக*
வெறும் ரொட்டி துண்டோ
கொஞ்சம் பழைய சோறோ போட்டு விடாதே
அழுகியதாகினும் படை மாமிசமே..