PDA

View Full Version : இந்த இனம் எம் தமிழினம்...Nivas.T
02-01-2012, 03:53 PM
காலப் பெருவெளியில்
பாதச்சுவடுகளை மட்டும் விட்டுச்சென்ற
இனங்களின் மத்தியில்
காலூன்றி நின்று போராடும்
என் தமிழினம்

கயவர்கள் பலரால்
காட்டிக் கொடுக்கப்பட்டபின்னும்
கண்டவர்கள் ஆண்டுவிட்டு
சுரண்டி எடுத்த பின்னும்
சுயமாய் வாழத் துடிக்கும்
இனம் என் தமிழினம்

சதிகளின் மூலம் அழித்தெடுத்தது போக
நரிகளின் வேளையில் துடைத்தெடுத்தது போக
மீதம் இருக்கும் தன்மானம் தளராமல்
தழைக்க வழிதேடும் இனம் என் தமிழினமே

நாகரீகம் சொல்லிக்கொடுத்த எமக்கு
மோகம் பல பிறந்தாலும்
தமிழ் தாகம் தணியாமல்
தரணியில் இருக்கும் இந்த இனம்
என் தமிழினமே

உயிரை விட மானம் பெரிது
என்று மறம் கொண்டு வாழ்ந்த இனம்
மரபு கொஞ்சம் மாறியிருந்தாலும்
இன்னும் மறிக்கவில்லை இனம்
எம் தமிழினம்

ஒற்றுமைக்கு வழியில்லாமல் போக
வேற்றுமை தலைவிரித்தாட
சாதியம், மதம் என்னும்
அடிமை வாழ்வை தகர்த்து
தன் நிலைமையில் மீட்சி காண்கிறது
இந்த இனம் எம் தமிழினம்

மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்
என்னும் குரல் ஒலிக்கிறது ஓயாமல்
கணவாய் இருக்கும் அந்தக் குரல் இப்பொழுது
நிஜமாய் மாறுகிறது, மாற்றுகிறது
இந்த இனம் எம் தமிழினம்

காலச் சுழற்ச்சியில் நாம் மேலேறும் தருணம் இது
என்று தனைத்தானே உணர்ந்து
உயர்த்திக் கொள்கிறது இந்த இனம்
எம் தமிழினம்

கீதம்
02-01-2012, 08:20 PM
உள்ளத்தின் எழுச்சி மொத்தத்தையும் எழுத்துக்களின் வழியே கொண்டுவருவதில் சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனாலும் புரிந்துகொள்ளமுடிகிறது சீறி வரும் இனமானத்தின் உணர்வுதனை. இவ்வேட்கை எல்லாத் தமிழ் மனங்களிலும் உருவாகும் நாளொன்று உருவாகும். தமிழின மனங்களைத் தட்டியெழுப்பும் வரிகளுக்குப் பாராட்டுகள், நிவாஸ்.

Nivas.T
03-01-2012, 05:15 AM
உள்ளத்தின் எழுச்சி மொத்தத்தையும் எழுத்துக்களின் வழியே கொண்டுவருவதில் சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனாலும் புரிந்துகொள்ளமுடிகிறது சீறி வரும் இனமானத்தின் உணர்வுதனை. இவ்வேட்கை எல்லாத் தமிழ் மனங்களிலும் உருவாகும் நாளொன்று உருவாகும். தமிழின மனங்களைத் தட்டியெழுப்பும் வரிகளுக்குப் பாராட்டுகள், நிவாஸ்.

உண்மைதாங்க நான் எண்ணியதனைத்தையும் என்னால் எழுத இயலவில்லை, இயன்றவரை எழுதினேன்.

அந்த ஓர்நாள் நிச்சயம் வரும் என்ற அதே நம்பிக்கையில்தான் நானும் இருக்கிறேன்

பாராட்டுகளுக்கு மிக்க நன்றீங்க

நாஞ்சில் த.க.ஜெய்
03-01-2012, 12:01 PM
உள்ளத்தில் உருவான உணர்ச்சிகளின் கொந்தளிப்பினை வெளிக்கொணர செய்த முயற்சிகள் ஒருசேர கவிதையை மெருகேற செய்கிறது ...

Nivas.T
03-01-2012, 03:21 PM
உள்ளத்தில் உருவான உணர்ச்சிகளின் கொந்தளிப்பினை வெளிக்கொணர செய்த முயற்சிகள் ஒருசேர கவிதையை மெருகேற செய்கிறது ...

ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெய்

அக்னி
13-01-2012, 10:05 AM
நமக்கென உரித்தாக ஒரு தேசம் இல்லாமல்,
பண்டைய பெருமை பேசியே
தொண்டை வற்றுகின்றோம்...

நமக்குள்ளிருந்தே காட்டியும் கூட்டியும் கொடுப்பதால்,
இனம் கண்டு கொள்ளாமல்,
இனம் மாண்டு போகின்றோம்...

செம்மொழியை நாம் பேசினால்
இழிந்து பார்க்கும் நம் தமிழரிடையே
செத்துக்கொண்டே உயிர் வாழ்கின்றது..,
தமிழ்...

இத்தனைக்காய்,
தமிழனாய்ப் பிறந்ததற்காய் வெட்கப்படுகின்றேன்...
இத்தனையும் தாங்கி நிற்பதற்காய்,
தமிழனாய்ப் பிறந்ததற்காய் பெருமைகொள்கின்றேன்...

Nivas.T
14-01-2012, 03:45 PM
நமக்கென உரித்தாக ஒரு தேசம் இல்லாமல்,
பண்டைய பெருமை பேசியே
தொண்டை வற்றுகின்றோம்...

நமக்குள்ளிருந்தே காட்டியும் கூட்டியும் கொடுப்பதால்,
இனம் கண்டு கொள்ளாமல்,
இனம் மாண்டு போகின்றோம்...

செம்மொழியை நாம் பேசினால்
இழிந்து பார்க்கும் நம் தமிழரிடையே
செத்துக்கொண்டே உயிர் வாழ்கின்றது..,
தமிழ்...

இத்தனைக்காய்,
தமிழனாய்ப் பிறந்ததற்காய் வெட்க்ப்படுகின்றேன்...
இத்தனையும் தாங்கி நிற்பதற்காய்,
தமிழனாய்ப் பிறந்ததற்காய் பெருமைகொள்கின்றேன்...

தமிழை இழிவாய் நினைப்போரும்
தன்மானம் தன்னம்பிக்கை இல்லாமல் இறந்து வாழ்வோரும்
இருக்கும் வரை
இந்நிலை தொடர்ந்தே இருக்கும் என்பது நியதி

M.Jagadeesan
15-01-2012, 04:48 AM
மெல்லத் தமிழ் இனிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்ற பாரதியின் வரிகள் தமிழ்நாட்டில் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் எழத்தான் செய்கிறது.அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் ஆங்கிலப் பள்ளிகள் பெருகிவிட்டன.

எழுச்சிமிக்க கவிதை தந்த அக்னிக்கு வாழ்த்துக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 06:35 AM
அருமையான கவிதை நிவாஸ் அவர்களே. எழுச்சியான கவிதை தந்த அக்னி அவர்களுக்கும் நன்றி:)