PDA

View Full Version : அறிமுகம் இல்லாத நபர்களிடம் நம்பர் கொடுக்காதீங்க !arun
29-12-2011, 01:25 PM
பெரம்பூர் ரயில் நிலைய வாசலில் நண்பனுக்காக காத்து கொண்டிருந்தேன்

எனக்கு அருகே நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மணி யாரையோ திட்டி கொண்டிருந்தார் திட்டி கொண்டிருக்கும்போதே லைன் கட்டாகி விட்டது என்னை நோக்கி வந்த அவர்கள் தம்பி என்னுடைய செல்லில் பேலன்ஸ் இல்லை ஒரே ஒரு கால் செய்து விட்டு தருகிறேன் என்று சொன்னார்கள் சரி ஒரு கால் தானே என நினைத்து எனது போனை கொடுத்தேன் அது தான் நான் செய்த முதல் தவறு

பேசி முடித்ததும் அந்த அம்மா என்னிடம் ஒரே புலம்பல் அவரது கணவர் ரொம்ப தொல்லை செய்வதாகவும் அடித்து உதைப்பதாகவும் சொல்லி அழுதார்கள்

சில நிமிட இடைவெளியில் எனக்காக மகளிர் காவல் நிலைய நம்பரை பெற்று தருமாறும் அவரது கணவரின் மேல் புகார் கொடுக்க இருப்பதாகவும் சொல்லி விட்டு என்னுடைய நம்பரை வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டார்கள் நானும் பாவமாக இருக்கவே கொடுத்து விட்டேன்

அது தான் நான் இன்னொரு முறை செய்த இமாயல தவறு அந்த நம்பரையும் நான் எப்படியோ அவர்களுக்கு வாங்கி கொடுத்து விட்டேன்

ஆனால் இப்போது அந்த அம்மா ஒரு நாளைக்கு இருபதில் இருந்து முப்பது தடவை போன் செய்து அவரது கணவரை மிரட்ட சொல்கிறார் (இதில் மிஸ்ட் கால் வேறு)

இது தான் எனக்கு நானே ஆப்பு அடித்து கொண்டது என்பதா !

என்ன கொடுமை சார் இது ? ...

நாஞ்சில் த.க.ஜெய்
01-01-2012, 05:49 AM
இதுதான் வேலியில போற ஓணானை பிடிச்சி காதுக்குள் விடுறதோ...

sarcharan
03-01-2012, 07:34 AM
இது தான் எனக்கு நானே ஆப்பு அடித்து கொண்டது என்பதா !

என்ன கொடுமை சார் இது ? ...

இதுதான் வேலியில போற ஓணானை பிடிச்சி காதுக்குள் விடுறதோ...

தாமரை அண்ணன் பாணியில் சொன்னால்...

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது :aetsch013::lachen001:

தாமரை
03-01-2012, 07:57 AM
அவங்க கம்ப்ளெயிண்ட் செய்ய நம்பர் வாங்கிக் கொடுத்த உங்களுக்கு...

அவங்க மேல கம்ப்ளெயிண்ட் செய்யத் தோணலை பாருங்க...

பார்த்துங்க... அடிக்கடி ஃபோன்ல பேசிக்கறீங்க...

நீங்கள் சொல்லுகிற வரிசையைப் பார்த்தால் சதிவலை போலத் தெரியுது. நீங்கள் அவர் எத்தனை மிஸ்டு கால் கொடுத்தாலும் சரி.. அழைக்க வேண்டாம்.

அவர் அழைத்து நீங்கள் எடுத்தால் அந்த உரையாடலைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாலியல் தொல்லை இல்லை வேறு எதாவது மிரட்டல் அது இதுன்னு அவங்க கம்ப்ளெயிண்ட் செய்யறதுக்கு முன்னால...

நீங்க உஷாராகி கம்ப்ளெயிண்ட் செய்திடுங்க...

மனசில் தோணுனதைச் சொன்னேன்...

முடிஞ்சா அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்தும் கொடுத்து விடுங்கள்...

aren
03-01-2012, 07:59 AM
இது ஒரு மாதிரி ஏமாற்றுவேலை என்றே எனக்குத் தோன்றுகிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். தாமரை அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும்

govindh
03-01-2012, 09:58 AM
அறிமுகம் இல்லாத நபர்களிடம்
அவர்கள் பேசுவதற்காக,
நம் கைபேசியை கொடுக்க வேண்டாம்...!

ஓவியன்
03-01-2012, 10:44 AM
அருண், தாமரை அண்ணா சொல்வதே சரியாகப் படுகிறது, எதற்கும் ஒரு கம்ளைண்ட் பண்ணி வைத்திருப்பதே நலமாகத் தெரிகிறது.

arun
07-01-2012, 11:04 AM
அவங்க கம்ப்ளெயிண்ட் செய்ய நம்பர் வாங்கிக் கொடுத்த உங்களுக்கு...

அவங்க மேல கம்ப்ளெயிண்ட் செய்யத் தோணலை பாருங்க...

பார்த்துங்க... அடிக்கடி ஃபோன்ல பேசிக்கறீங்க...

நீங்கள் சொல்லுகிற வரிசையைப் பார்த்தால் சதிவலை போலத் தெரியுது. நீங்கள் அவர் எத்தனை மிஸ்டு கால் கொடுத்தாலும் சரி.. அழைக்க வேண்டாம்.

அவர் அழைத்து நீங்கள் எடுத்தால் அந்த உரையாடலைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாலியல் தொல்லை இல்லை வேறு எதாவது மிரட்டல் அது இதுன்னு அவங்க கம்ப்ளெயிண்ட் செய்யறதுக்கு முன்னால...

நீங்க உஷாராகி கம்ப்ளெயிண்ட் செய்திடுங்க...

மனசில் தோணுனதைச் சொன்னேன்...

முடிஞ்சா அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்தும் கொடுத்து விடுங்கள்...

இப்போதெல்லாம் திரும்ப திரும்ப போன் செய்தாலும் நான் அவர்களின் போனை சுத்தமாக எடுப்பதில்லை அதன் விளைவு இப்போது போன் வருவதே இல்லை !

புது நம்பரில் இருந்து கால் வந்தால் கூட கவனமாக தான் பேசுகிறேன்

என்னத்த செய்ய சொந்த காசுல சூனியம் வச்சி கிட்டேங்கோ

பிரேம்
07-01-2012, 12:30 PM
சார் 'A CAREFULL'

பாலகன்
07-01-2012, 03:44 PM
யாருக்கும் இந்த காலத்துல உதவக்கூடாது என்ற முடிவுக்கு நாடு மக்களை தள்ளிவிடுகிறது பாருங்கள் :(

arun
28-01-2012, 07:45 PM
சார் 'A CAREFULL'

என்ன சொல்ல வரீங்க சார் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

xavier_raja
01-02-2012, 12:43 PM
இதுபோன்று ஒருசிலரின் தவறான செயல்களால் உண்மையான சிலபேரின் இக்கட்டான சூழ்நிலைக்கு நம்மால் உதவ முடியாமல் போய்விடுகிறது..

arun
22-02-2012, 04:23 PM
இதுபோன்று ஒருசிலரின் தவறான செயல்களால் உண்மையான சிலபேரின் இக்கட்டான சூழ்நிலைக்கு நம்மால் உதவ முடியாமல் போய்விடுகிறது..

சரியாக சொன்னீர்கள்

vrajaram
27-02-2012, 10:34 AM
நண்ட்ரண்டு அன்றே மறப்பது நன்று
ராஜாராம்

உதயா
27-02-2012, 11:13 AM
நீங்க உஷாராகி கம்ப்ளெயிண்ட் செய்திடுங்க...

மனசில் தோணுனதைச் சொன்னேன்...

முடிஞ்சா அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்தும் கொடுத்து விடுங்கள்...
இது தான் பெஸ்ட். இதில் நாம் முந்திக்கொள்ளவேண்டும். காவல் துறையை கண்டு பயப்படவேண்டியது இல்லை. உங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு செல்லுங்கள். நடந்த விஷயத்தை எடுத்துச்சொல்லுங்கள். அந்த பெண்மணியையும் நேரில் அழைத்துப்பேசி, முற்றுப்புள்ளி வைப்பதே பெஸ்ட்.

தங்கவேல்
01-03-2012, 03:58 AM
கொடுமை !

leomohan
01-03-2012, 04:09 AM
பெரம்பூர் ரயில் நிலைய வாசலில் நண்பனுக்காக காத்து கொண்டிருந்தேன்

எனக்கு அருகே நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மணி யாரையோ திட்டி கொண்டிருந்தார் திட்டி கொண்டிருக்கும்போதே லைன் கட்டாகி விட்டது என்னை நோக்கி வந்த அவர்கள் தம்பி என்னுடைய செல்லில் பேலன்ஸ் இல்லை ஒரே ஒரு கால் செய்து விட்டு தருகிறேன் என்று சொன்னார்கள் சரி ஒரு கால் தானே என நினைத்து எனது போனை கொடுத்தேன் அது தான் நான் செய்த முதல் தவறு

பேசி முடித்ததும் அந்த அம்மா என்னிடம் ஒரே புலம்பல் அவரது கணவர் ரொம்ப தொல்லை செய்வதாகவும் அடித்து உதைப்பதாகவும் சொல்லி அழுதார்கள்

சில நிமிட இடைவெளியில் எனக்காக மகளிர் காவல் நிலைய நம்பரை பெற்று தருமாறும் அவரது கணவரின் மேல் புகார் கொடுக்க இருப்பதாகவும் சொல்லி விட்டு என்னுடைய நம்பரை வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டார்கள் நானும் பாவமாக இருக்கவே கொடுத்து விட்டேன்

அது தான் நான் இன்னொரு முறை செய்த இமாயல தவறு அந்த நம்பரையும் நான் எப்படியோ அவர்களுக்கு வாங்கி கொடுத்து விட்டேன்

ஆனால் இப்போது அந்த அம்மா ஒரு நாளைக்கு இருபதில் இருந்து முப்பது தடவை போன் செய்து அவரது கணவரை மிரட்ட சொல்கிறார் (இதில் மிஸ்ட் கால் வேறு)

இது தான் எனக்கு நானே ஆப்பு அடித்து கொண்டது என்பதா !

என்ன கொடுமை சார் இது ? ...

இது போல சிலரால் நிஜமாகவே உதவி தேவைபடுபவரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். நம்ம நல்ல எண்ணத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வதால் நாமும் நம்மை சுற்றி சுவர் அமைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.

நல்ல பாடம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 02:47 PM
உங்களின் அனுபவத்தை படித்ததில் இருந்து நல்ல பாடம் கற்றோம். யாரிடமும் எமது அலைபேசி எண்ணைக் கொடுக்கமாட்டேன். :sprachlos020::sprachlos020:

சிவா.ஜி
16-03-2012, 03:23 PM
அதுக்காக நான் கேட்டு கொடுக்காம இருக்காதீங்க ஐயா.....அலைபேசி என் ப்ளீஸ்....

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 03:32 PM
அதுக்காக நான் கேட்டு கொடுக்காம இருக்காதீங்க ஐயா.....அலைபேசி என் ப்ளீஸ்....

அறிமுகம் இல்லாத நபர்களுக்குத்தானே அது. உங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா. தனி மடலை பாருங்கள் சிவா.ஜி அவர்களே:)

arun
21-10-2012, 11:44 AM
ஒரு ஷாக் ! ..

அந்த அம்மணி சொல்வதெல்லாம் நிஜமில் புலம்பி கொண்டிருந்தார் ..

அப்போது தான் தோன்றியது இந்த அம்மாவுக்கு கணவனை சந்தேகப்படுவது தான் வேலை போலும் !

சுகந்தப்ரீதன்
21-10-2012, 03:33 PM
அண்ணே... நீங்க பத்தாவது மாசம் ‘ஷாக்’ ஆகறதுதான் இப்ப ‘ஷாக்’கா இருக்கு..!!:)

arun
22-10-2012, 02:59 PM
அண்ணே... நீங்க பத்தாவது மாசம் ‘ஷாக்’ ஆகறதுதான் இப்ப ‘ஷாக்’கா இருக்கு..!!:)

ஆம் என்ன செய்ய ! அந்த அம்மாவை டிவியில் பார்த்ததும் மறந்து போன நிகழ்வுகள் தானாக கண் முன் தோன்றி வார்த்தையாக மன்றத்துக்குள் விழுந்து விட்டது ..

கலைவேந்தன்
24-10-2012, 11:46 AM
பாவம்ங்க நீங்க அருண்..

இதுக்குதான் நான் என் மொபைலை யாருக்கும் தருவதும் இல்ல.. 09990257698 அப்படிங்குற என் நம்பரை யாருக்கும் தருவதும் இல்ல.. :)

என் முன் ஜாக்கிரதை சரிதானுங்களே..? :)

M.Jagadeesan
24-10-2012, 12:44 PM
நண்ட்ரண்டு அன்றே மறப்பது நன்று
ராஜாராம்

"நண்டு இரண்டு அன்றே மறப்பது நன்று "......எனக்கு எதுவும் புரியவில்லை.

கோபாலன்
24-10-2012, 01:25 PM
நன்றன்று அன்றே மறப்பது நன்று என்பதைத்தான் சொல்லவருகிறார் என்று நினைக்கிறேன் :)

arun
25-10-2012, 05:20 PM
பாவம்ங்க நீங்க அருண்..

இதுக்குதான் நான் என் மொபைலை யாருக்கும் தருவதும் இல்ல.. 09990257698 அப்படிங்குற என் நம்பரை யாருக்கும் தருவதும் இல்ல.. :)

என் முன் ஜாக்கிரதை சரிதானுங்களே..? :)

ரொம்ப ரொம்ப சரி ! .. :)