PDA

View Full Version : பரோட்டா : வெள்ளை மரணம்



cchelladorai
27-12-2011, 01:38 PM
நண்பர்களே,

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை :

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக பரோட்டா கடை காணப்படுகிறது. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு! கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, என சொல்லும் போதே நாவில் நீர் ஊருமே

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா?
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில்தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டும் அல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கபடுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்ஸைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.
இந்த மைதா கலவையை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தடை செய்துள்ளன. பென்சாயில் பெராக்ஸைடு நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயினம். இந்த ராசாயினம் மாவில் உள்ள சத்துடன் சேர்ந்து நீரிழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது. இது தவிர அலாக்ஸன்(Alloxan) என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் செயற்கை நிறமிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சர்க்கரை, சாக்கரின், அஜினமோட்டோ போன்ற உப பொருட்களும் சேர்க்கப்பட்டு மைதா மேலும் அபாயகரமாக்கப்படுகின்றது.
இதில் அலாக்ஸன் சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆக பரோட்டாவில் உள்ள அலாக்ஸன் மனிதனுக்கும் நீரிழிவு வர துணைபுரிகிறது.
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார்ச் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு மைதாவினால் செய்த பேக்கரி பண்டங்களை வாங்கித் தருவதை தவிர்பது நல்லது. மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இது பற்றிய முழு கட்டுரையும் 13.11.2011 சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R இருக்கிறது.

அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.
(நன்றி:இணையம்)


வணக்கங்களுடன்
செல்வம்

meera
28-12-2011, 01:57 AM
நானும் இதை முகப்புத்தகத்தில் படித்தேன். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

பகிர்வுக்கு நன்றி.

தங்கவேல்
28-12-2011, 02:45 AM
பரோட்டா பற்றிய எனது பதிவு

http://thangavelmanickadevar.blogspot.com/2011/11/blog-post_14.html

cchelladorai
29-12-2011, 05:04 PM
வணக்கம் மதிப்பிற்குரிய தங்கவேல் அவர்களே,

தங்களை இந்த மன்றத்தின் வாயிலாக சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை.

முதலில் தங்களுக்கு நன்றி.

இந்த தகவல் உங்கள் தளத்திலிருந்து நான் இணையத்தில் தேடுகையில் எடுக்கப்பட்டதாகும்.

உங்கள் தளத்திலிருந்து எடுத்த இந்த தகவல் என் நண்பர்கள் மற்றும் நூலக வட்டார நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். மிகவும் பயனுடையதாக இருந்தது.

மிக்க நன்றி.
வணக்கங்களுடன்,
செல்வம்

நாஞ்சில் த.க.ஜெய்
01-01-2012, 05:34 AM
அவசியமான பதிவு....

venkat8
07-01-2012, 04:37 PM
இனி கம்பங்களியே போதும் போல இருக்கு

பிரேம்
09-01-2012, 01:17 AM
நல்ல தகவல்..வாங்களேன் ரெண்டு பரோட்டா சாப்பிட்டுகிட்டே பேசுவோம்..:cool:

Muzzammill
28-03-2012, 09:16 AM
parotta mattum semiyavum............... paayaasam utpada..... arumaiyaana katturai.. vaazhthukkal.
Muzzammill.....