PDA

View Full Version : சிரித்துக் கொண்டே படித்தது :)



cchelladorai
27-12-2011, 01:29 PM
அரசியல்வாதி : மாணவச் செல்வங்களே, நீங்கள் யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்
மாணவர் : ஏன் ?????????
அரசியல்வாதி : நாங்கள் யாராவது படிப்பில் ஈடுபடுறோமா?????/
************************



நண்பன் 1 : என்னை எல்லோரும் இங்கீலிஸ்ல புலி ன்னு பாராட்டுவாங்க........
நண்பன் 2 : பொய் சொல்லாத, இங்கீலிஸ்ல டைகர் அப்படித்தான சொல்லனும்.....
************************

ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு
அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா????
ஆசிரியா் ; ???????????????.

************************

மாப்ள, ஏண்டா நமக்கு ஸ்கூல்ல புக்ஸ் தரமாட்டேங்கிறாங்க?

நம்மாள் : அதான் அடுத்த மாசம் ஆடு மாடு தாராங்கல்ல

************************

ஆசிரியர் :எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு "பாக்ட்டிரியா" படம் வரையுங்கள்..

நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா...

ஆசிரியர் :என்ன படம் வரைந்து விட்டாயா..... ஆனால் உன் நோட்டில் எதுவுமே இல்லையே....

நம்ம மாணவன் :ஐயா நீங்கள் தானே சொன்னீர்கள் பாக்ட்டிரியாவை வெறும் கண்களால் காண முடியாது........நுண்ணோக்கியால் மட்டுமே காண முடியும் என்று......அதனால் தான் உங்களால் அதை காண முடியவில்லை...

************************

"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"

************************

சான்டா - "டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்"

டாக்டர் - "எப்போ நடந்தது?"

சான்டா - "அது ஆச்சு மூணு மாசம்"

டாக்டர் கோபமாக - "இத்தனை நாள் என்ன செஞ்சீங்க?"

சான்டா - "டூப்ளிகேட் சாவி உபயோகபடுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு"

************************

ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

************************

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது.

யானை குளத்தில டைவ் அடிக்குது.

உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது.

அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அப்படித்தாண்டா மாப்ள, அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்குடா மாப்பிளே!!"
************************

"நா‎ன் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு எ‎ன்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"

************************

திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே!

************************

கடவுளுக்கும், டாக்டருக்கும் கோபம் வர மாதிரி நடந்துக்கக் கூடாது, ஏன் தெரியுமா?

கடவுளுக்கு கோபம் வந்தா
டாக்டர் கிட்ட அனுப்புவர்....!!!!!

டாக்டருக்கு கோபம் வந்தா
கடவுள் கிட்ட அனுப்புவர்....!!!!!

************************

meera
28-12-2011, 01:55 AM
ஆரம்பமே அழகான தமிழில் சிரிப்புகளை தொகுத்து அசத்திவிட்டீர்கள். ரசித்தேன். தொடருங்கள்.

arun
29-12-2011, 01:12 PM
சிரித்து சிரித்து ரசித்து படித்தேன் சிரிப்புகளின் தொகுப்பு அருமை பாராட்டுக்கள்

venkat8
07-01-2012, 04:18 PM
எல்லா நகைச்சுவையும் அருமை. வேறு எங்கும் படித்ததில்லை.

மஸாகி
23-01-2012, 04:13 AM
சூப்பர்..