PDA

View Full Version : ஏனோ அவளுக்கு



inban
25-12-2011, 03:43 PM
ஏனோ அவளுக்கு


எவளின் கண்களில்
என் கண்கள் சிக்கிக் கொண்டதோ

எவளின் அங்க அசைவுகளில்
நான் மூர்சையாகிறேனோ

எவள் வனப்பில்
என்வாலிபம் மண்டிஇட்டதோ

எவளின் திருமுகம்
என் இரவுகளை திருடிக்கொள்கிறதோ

எவளைக் கண்டால்
இதயத்தில்
எரிமலை வெடிக்கிறதோ

எவளின் திரு உதட்டில்
உயிரானது
ஒட்டி ஊசலாடுகிறதோ

எவளின் அருகாமை
ரத்தத்திலே
ரயிலோட வைக்கிறதோ

எவள் இறந்தால்
அண்ட சராசரங்கள் யாவும்
பொடியாகிப்போகிடும்
எனப்படுகிறதோ

அவளுக்கு
என்னைப்பற்றி ஏதும் புரிவதில்லை

அவள் விழிகளில் தொலைத்த
என் எதிர்காலம் போலவே..

பிரேம்
09-01-2012, 12:20 PM
அருமையான...கவிதை தல..
"எவளின் அருகாமை
ரத்தத்திலே
ரயிலோட வைக்கிறதோ"- அனுபவித்த வரிகள்...வாழ்த்துகள் தல..

inban
20-01-2012, 11:56 AM
பாராட்டுக்கு நன்றி தல :icon_b:

அருள்
20-01-2012, 11:31 PM
அருமை .......

கீதம்
21-01-2012, 12:49 AM
அவளுக்குப் புரியவில்லையென்பது அவள் தவறல்லவே...

புரியும் வகையில் புரியவைக்காததோ... அல்லது புரியவைக்கத் தெரியாததோ... புலம்பும் மனத்தின் தவறாகவுமிருக்கலாம்.

திரு முகம், திரு உதடு என்று மரியாதையிலேயேத் தெரிகிறது, மனந்தொட நெருங்கும் துணிவில்லையென்பது. :)

காதல் படுத்தும் பாடு அருமை. கவிதை அழகு. பாராட்டுகள்.

inban
28-01-2012, 09:35 AM
*காதலை சொல்வது என்பது
அத்துணை எளிதானது இல்லை கீதம்.
அது மாபெரும் தவம்.
அதை நாம் எந்திர கதியில் பார்க்க முடியாது.

காதலை சொல்லும் ஒரு காதலன் இங்கே கதறுகிறான்......
முதலில் முரடன் என்றாள்
பிறகு கோழை என்றாள்
இப்போதோ பயித்தியம் என்கிறாள்...

*திரு என்பதற்கு அழகு என்ற ஒரு பொருளும் உண்டு.
நன்றி....

arun
28-01-2012, 07:35 PM
அருமையான கவிதை! உணர்வுகளை வெளி காட்டி அற்புதமாக வடித்துள்ளீர்கள் நன்று

inban
02-02-2012, 10:56 AM
நன்றி அருண்