PDA

View Full Version : உருகிக்கொண்டிருக்கிறேன்...கீதம்
25-12-2011, 06:17 AM
இறுகிக்கிடக்கிறேன் என்பதாலேயே
உணர்வற்றுக்கிடப்பதாய் உள்ளர்த்தம் கொள்கிறாய்!
முகமெதிர்கொள்ள விரும்பாது,
முன்னிலையில் நில்லாக்காரணத்தால்
முதுகெலும்பில்லாதவன் என்றே
ஏறி மிதித்தென்னை ஏளனம் செய்கிறாய்!

நினைவில் வைத்துக்கொள்,
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
நீரைப் போன்றவனே நானும்!.
பனியாய் உறைந்திருக்கிறேன் இன்று!
பாறையாய் அன்று!

உமிழும் சுடுசொற்களால்
பெரும் உக்கிரம் பெற்று
உருகிக்கொண்டிருக்கிறேன் உள்ளே!
வலிந்து உதைக்கும் பாதங்களை
வெடுக்கென்று பற்றியிழுத்து
உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே…

தாக்குதல் விடுத்து
தற்காத்துக்கொண்டு ஓடிவிடு!

M.Jagadeesan
25-12-2011, 12:29 PM
கவிதையின் கருவும், வார்த்தைப் பயன்பாடுகளும் மிகவும் அருமை.

ஜானகி
26-12-2011, 12:44 AM
சாது மிரண்டால்.... காடு கொள்ளாது ....என்பது இதுதானோ....?

கீதம்
26-12-2011, 04:25 AM
கவிதையின் கருவும், வார்த்தைப் பயன்பாடுகளும் மிகவும் அருமை.

பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா.

சாது மிரண்டால்.... காடு கொள்ளாது ....என்பது இதுதானோ....?

பணிகளுக்கு இடையிலும் வந்து படித்துப் பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி ஜானகி அம்மா.

நாஞ்சில் த.க.ஜெய்
26-12-2011, 11:02 AM
வெளியில் உணர இயலாத உறைந்த அமைதியை கூறும் கவிதை வரிகள் ....

ஆதவா
26-12-2011, 04:14 PM
நிறைய நிலைகளில் பொருந்திப் பார்க்கலாம்,

அமைதியில் சலனம், தூங்கின எரிமலையின் விழிப்பு, இயற்கையின் கோபம், பெண்மையின் இன்னொரு பக்கம் என்றெல்லாம் கூட பார்க்க முடிகிறது. ஒரு மனைவி, கணவனைப் பற்றி எழுதியதாகக் கூட இருக்கலாம்.
இவற்றெல்லாவற்றிலும் விட
இப்பொழுது நானிருக்கும் சூழ்நிலைக்கு மிக கனக்கச்சிதமாகவே பொருந்துகிறது என்று தோணுகிறது.
அமைதிக்கும் சப்தத்திற்கும் நூலிழை இடமுண்டு, நிறைய பேர் அப்படித்தான் வாழுவதாக நினைக்கிறேன். நானும் அப்படித்தானென்பது நம்பிக்கை, ஒருநாள்... அந்த ஒருநாளுக்குத்தானே காத்திருக்கிறோம்.

கவிதை முழுவதும் பேசுவது உறைந்த நீரைப் பற்றியது. உறைந்த நீரை சூடேற்றினால் மட்டுமே உருகச் செய்யமுடியும். இருப்பினும் கவிதையில் ”பாறையாய் அன்று!” எனும் வார்த்தை எதற்கென்று தெரியவில்லை, நீரானது நீராக இருந்து நீராகவே இருக்கும், அது பாறையாக மாறிவிடுவதில்லை அன்றி பனி என்பது பாறையல்ல!

உறைந்த நீருக்கு கரம் முளைப்பது போல பற்றியிழுப்பது உருகி வழியும் நீராலானது. வார்த்தைகள் சரியாக உபயோகம் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். நீரின் உள்வாங்குதல் எளிது, பனி நீரில் மிக கடினம்.

அண்டார்ட்டிகாவில் பனிப்பாறையொன்றில் ட்ரில்லிங் மெஷின் வைத்து குடைந்து கொண்டிருக்கும் ஒருவனைப்பற்றியது இந்த கவிதை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் என்று சொல்வீர்களென எதிர்பார்க்கிறேன்.!

அன்புடன்
ஆதவா

Ravee
27-12-2011, 06:46 AM
கடைசி இருவரிகளை தவிர்த்தால் எனக்கும் இது பொருந்தும் ஆதவா .... :'(

அக்காவின் நினைவலைகள் தம்பிகளை தேடுகிறதோ என்னவோ அதுதான் சூழ்நிலையை சரியாக கொடுத்து இருக்கிறீர்கள் .... :frown: :traurig001: :mad:

Nivas.T
27-12-2011, 07:12 AM
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று மறைமுகமாக அல்ல நேரடியகவே எச்சரிக்கிறது கவிதை கரு.

பொறுத்துக்கொண்டு இருப்போரெல்லாம் கோழைகள் என்று எண்ணவேண்டாம், பொங்கி எழுந்துவிட்டால் தாங்காது இந்த தரணி என்பது எத்தனை பேருக்கு எத்தனை முறை காட்டினாலும் புரிவதில்லை.

இத்துனை வருடங்களுக்கு ஒருமுறை இந்த எரிமலைகள் வெடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன். சீண்டிப் பார்ப்பவர்கள் அதிகம் இருப்பதால் இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

மிக அருமையான கவிதை

கீதம்
05-01-2012, 05:20 AM
வெளியில் உணர இயலாத உறைந்த அமைதியை கூறும் கவிதை வரிகள் ....

பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
05-01-2012, 05:28 AM
நிறைய நிலைகளில் பொருந்திப் பார்க்கலாம்,

அமைதியில் சலனம், தூங்கின எரிமலையின் விழிப்பு, இயற்கையின் கோபம், பெண்மையின் இன்னொரு பக்கம் என்றெல்லாம் கூட பார்க்க முடிகிறது. ஒரு மனைவி, கணவனைப் பற்றி எழுதியதாகக் கூட இருக்கலாம்.
இவற்றெல்லாவற்றிலும் விட
இப்பொழுது நானிருக்கும் சூழ்நிலைக்கு மிக கனக்கச்சிதமாகவே பொருந்துகிறது என்று தோணுகிறது.
அமைதிக்கும் சப்தத்திற்கும் நூலிழை இடமுண்டு, நிறைய பேர் அப்படித்தான் வாழுவதாக நினைக்கிறேன். நானும் அப்படித்தானென்பது நம்பிக்கை, ஒருநாள்... அந்த ஒருநாளுக்குத்தானே காத்திருக்கிறோம்.

உங்களிடமிருந்து வந்த இந்த விமர்சனம் எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது ஆதவா. என் கவிக்குழந்தைக்குப் பல நிறங்களில் ஆடை அணிவித்துப் பார்ப்பதை நானும் வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறேன்.

கவிதை முழுவதும் பேசுவது உறைந்த நீரைப் பற்றியது. உறைந்த நீரை சூடேற்றினால் மட்டுமே உருகச் செய்யமுடியும். இருப்பினும் கவிதையில் ”பாறையாய் அன்று!” எனும் வார்த்தை எதற்கென்று தெரியவில்லை, நீரானது நீராக இருந்து நீராகவே இருக்கும், அது பாறையாக மாறிவிடுவதில்லை அன்றி பனி என்பது பாறையல்ல!

நீங்கள் சொல்லியிருப்பதை தான் நானும் சொல்லியிருக்கிறேன். பாறையாய் அன்று என்பது நான் பாறையாக இல்லை என்ற பொருளில்தான்.

உறைந்த நீருக்கு கரம் முளைப்பது போல பற்றியிழுப்பது உருகி வழியும் நீராலானது. வார்த்தைகள் சரியாக உபயோகம் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். நீரின் உள்வாங்குதல் எளிது, பனி நீரில் மிக கடினம்.

நீங்கள் கவிதையை உள்வாங்கிய விதத்தை ரசித்து மகிழ்கிறேன்.

அண்டார்ட்டிகாவில் பனிப்பாறையொன்றில் ட்ரில்லிங் மெஷின் வைத்து குடைந்து கொண்டிருக்கும் ஒருவனைப்பற்றியது இந்த கவிதை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் என்று சொல்வீர்களென எதிர்பார்க்கிறேன்.!

அன்புடன்
ஆதவா

அண்டார்ட்டிகாவில் பனிப்பாறையொன்றில் ட்ரில்லிங் மெஷின் வைத்து குடைந்து கொண்டிருக்கும் ஒருவனைப்பற்றியது இந்த கவிதை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?:)

பின்னூட்டத்துக்கும் அலசலுக்கும் மிகவும் நன்றி ஆதவா.

கீதம்
05-01-2012, 05:32 AM
கடைசி இருவரிகளை தவிர்த்தால் எனக்கும் இது பொருந்தும் ஆதவா .... :'(

அன்புடன் ஆதவாவுக்கு பதில் அன்புடன் ரவி என்பதா? :confused:

அக்காவின் நினைவலைகள் தம்பிகளை தேடுகிறதோ என்னவோ அதுதான் சூழ்நிலையை சரியாக கொடுத்து இருக்கிறீர்கள் .... :frown: :traurig001: :mad:

அடுத்தத் தொடர்கதைக்கு படம் போடுகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தீர்களே, நினைவிருக்கிறதா ரவி? நான் படம் காட்ட ஆரம்பித்துவிட்டேன். உங்களைத்தான் காணும். வேலைப்பளுவோ?

கீதம்
05-01-2012, 05:35 AM
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று மறைமுகமாக அல்ல நேரடியகவே எச்சரிக்கிறது கவிதை கரு.

பொறுத்துக்கொண்டு இருப்போரெல்லாம் கோழைகள் என்று எண்ணவேண்டாம், பொங்கி எழுந்துவிட்டால் தாங்காது இந்த தரணி என்பது எத்தனை பேருக்கு எத்தனை முறை காட்டினாலும் புரிவதில்லை.

இத்துனை வருடங்களுக்கு ஒருமுறை இந்த எரிமலைகள் வெடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன். சீண்டிப் பார்ப்பவர்கள் அதிகம் இருப்பதால் இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

மிக அருமையான கவிதை

பொறுத்தது போதும், பொங்கி எழு! நான் இத்தனை வரிகளில் சொல்லவந்ததும் இதுதான். அதை அழகாகச் சுட்டிக்காட்டிப் பின்னூட்டமிட்டு உற்சாகமளிப்பதற்கு நன்றி நிவாஸ்.

அக்னி
05-01-2012, 04:25 PM
எப்போதாவது யாரோவொருவரால் என்றால்
பொறுமையாய் இருந்திடலாம்...

ஆனால், என் பார்வையில் கவிதையிற் தெரிவது..,
எப்போதும் ஒருவரால் என்பதே...

குட்டக் குட்டக் குனிபவனும், குட்டுபவனுமே மடையர் என்பர்...

ஆக, எதற்கு நானும் நீயும் மடையராக இருக்க வேண்டும்..?
நிறுத்து நீயாக
அல்லாவிட்டால்
நிறுத்துகின்றேன் நானாக...

கீதம்
07-01-2012, 12:26 AM

அதே... அதே...

சரியானப் புரிதலுக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி அக்னி.

matheen
07-01-2012, 12:52 PM
என்ன வடிவேல் ஸ்டைல்ல புதுசா இருக்கே