PDA

View Full Version : இது யார் குற்றம்?



sree sree
21-12-2011, 05:58 AM
இது வரை நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாக ஒரு நல்ல சகோதரனாக இருந்தாய்.ஆனால் இன்று அப்படி இல்லை.இன்று நீ யாரோ நான் யாரோ.யார் குற்றம் இது?நான் உன்னை நண்பணாக பார்காமல் அண்ணனாகவும் பார்ததுதான் நான் செய்த தவறா?உன்னை அண்ணனாக நினைத்ததால் உன்னை சுற்றி உள்ளவர்களையும் என் சொந்தம் என்று நினைத்து விட்டேன்.அது நான் செய்த தவறோ?

இதயம் கணக்கிறது.உன்னை சந்திக்காமல் இருந்திருக்க வேண்டும்.விதியால் சந்தித்திருந்தாலும் வெறும் நட்புடன் நிறுத்திருக்க வேண்டும்.நிஜமான நட்பும் பாசமும் வைத்தது தவறோ என்று நினைக்க தோன்றுகிறது.உனக்கும் எனக்கும் காரணமே இல்லாமல் பல கருத்து வேறுபாடுகள்.எந்த சூழ்நிலையிலும் என் தரப்பு நியாயத்தை விளக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.நீ எனக்கு வாய்ப்பளிக்கவும் இல்லை.உன் உடன் பிறந்த சகோதரியாக இருந்திருந்தால், நீ என்னை காயப்படுத்திருக்க மாட்டாய்.மற்றவர்கள் என்னை பற்றி தவறாக பேச விட்டிருக்க மாட்டாய்.நான் உனக்கு யாரோ.நான் என்றுமே உன் சொந்தம் கிடையாது.உன் தோழியாக கூட நீ என்னை பாவிக்க வில்லை.மனது வலிக்கிறது.இது வரை இருந்தது நட்பா? பாசமா? இல்லை வெறும் கற்பனையா?

எனக்குள் பல கேள்விகள்.பதில் சொல்ல யாருமே இல்லை.நான் சொல்வது எல்லாம் உனக்கு பொய்யாக தோன்றுகிறது.நான் சொல்வது அனைத்தும் நிஜம்,உண்மை,சத்தியம்.என்னால் உனக்கு நிரூபிக்க முடியும்.ஆனால் எதையும் கேட்க நீ தயாராக இல்லை.தூக்கு தண்டனை கைதிக்கு கூட தன் தரப்பு நியாயம் சொல்ல அனுமதி கொடுக்கப்படும்.என் விஷயத்தில் அது நடக்கவில்லை.கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது போல் இன்று நம் நட்பு உடைந்து போனது.நட்பில் பிரிவு மிகவும் கொடுமை என்று தெரியும்.நேரில் இன்று உணர்கிறேன் நீயும் என் தோழி,நீயும் என் சகோதரி என்ற நீ இன்று என்னை தூர தூக்கி எறிந்து விட்டாய்.உன்னை சுற்றி உள்ளவர்கள் என்னை எதிரியாக பார்க்கிறார்கள்.எந்த தவறும் செய்யாத போது குற்றவாளி என்று சொல்லும் போது மனது படும் வேதனையை சொல்ல வார்த்தை இல்லை.நல்லவள் என்று சொல்லியவர்கள் கெட்டவள் என்று சொல்லும் போது கண்ணீர் வருகிறது.கேலி பேச்சும் கிண்டலும் ஏதோ செய்கிறது.ஒருவர் மாறி ஒருவர் பேசும் வார்த்தைகளை நிஜமாக ஏற்க முடியவில்லை.எதிர்த்து வாதம் செய்தால் அப்பொழுதும் என் மீது தவறு என்றே சொல்கின்றாய்.இது விதியா இல்லை சதியா?....

உன்னை போல் என்னால் உடனே ஒரு நட்பை தூக்கி எறிய முடியவில்லை.நான் உன் மீது உண்மையான நட்பு கொண்டேன்.கடைசி வரை நல்ல நட்புடன் இருக்க வேண்டும் என்றெ ஆசை கொண்டேன்.நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்தினால் என் மீது விழுந்த பழிகளை நான் ஏற்று கொண்டேன்.ஆனால் நான் உனக்கு தேவை இல்லை என்று நீ இன்று முடிவு எடுத்து விட்டாய்.நடந்த விஷயஙகள் எதும் உனக்கு முழுவதும் தெரியாது.விதி ஒரு நாள் உனக்கு அனைத்தையும் தெரியப்படுத்தும்.அன்று யார் மீது குற்றம் என்று உனக்கு தெரிய வரும்.அன்று நீ என்னை நீ புரிந்து கொள்வாய்.உன் நட்பு மீண்டும் வேண்டும் என்று நான் நினைக்கவிலை.என்னை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்.நல்ல நண்பனாக,நல்ல சகோதரனாக உன்னை நினைத்த என்னை நீ வாழ் நாள் முழுவதும் கெட்டவள் என்று நினைத்து விட கூடாது.

இது நாள் வரை இருந்த நட்பு நிஜம்.அது பொய் என்று ஆகி விடக் கூடாது.எனக்கு உன் மீதோ இல்லை உன்னை சுற்றி உள்ளவர்கள் மீதோ வெறுப்போ கோபமோ கிடையாது.இன்றும் நீ எனக்கு ஒரு நல்ல நண்பன் தான்.எது நிஜம் எது பொய் என்று கடவுளுக்கு தெரியும்.அது உனக்கும் தெரிய வேண்டும்.கடவுளாவது சொல்லட்டும்.இது யார் குற்றம்?

sarcharan
21-12-2011, 07:51 AM
ஸ்ரீ ஸ்ரீ,
நீங்கள் எழுதியது தான் குற்றமே தவிர வேறு யார் குற்றமும் அல்ல.;)

பரீட்சைக்கு பாரக்ராஃப் எழுதுவது போல எழுதியுள்ளீர்கள். :p

இடையிடையில் இடம் விட்டு திரும்பவும் பதியுங்கள். படிப்பதற்கு எளிதாக இருக்கும்.