PDA

View Full Version : என் முத்தம்



lavanya
07-04-2003, 12:13 PM
அணைக்கட்டு இல்லாமலேயே
என்னைத் தேக்கி விடுகிறது
உன் வெட்கம்......
பசித்து கிடக்கும் வயல் வெளிகளில்
பரிதவித்து நிற்கிறது
என் முத்தம்....


எழுதியவர்க்கு சமர்ப்பணம்.

..

karikaalan
07-04-2003, 01:53 PM
மேட்டூர் அணைக்கட்டு இருந்தும் வரவில்லை;
அதனால்தானோ பரிதவிக்கிறது முத்தம்?

rambal
07-04-2003, 03:23 PM
அருமையான கவிதை..
தொடருங்கள்..

poo
07-04-2003, 03:45 PM
பாராட்டுக்களுடன் நன்றி லாவண்யா.

இளசு
07-04-2003, 05:09 PM
அழகான வெளிப்பாடு,
ஏக்கம் கூட காதல் நதி குளித்து வந்தால்
எவ்வளவு குளிர்ச்சியாய் வெளிப்படுகிறது......

மடை திறந்து புது நதி பாய வாழ்த்தச் சொல்லும் வசீகரக்கவிதை....

இங்கே தந்த தோழிக்கு நன்றிகள்.

Hayath
08-04-2003, 03:49 PM
உங்கள் கவிதை அருமை.பாராட்டுக்கள் லாவண்யா

மன்மதன்
24-11-2004, 09:33 AM
கவிதை பகுதியில் இருக்கும் முத்தச்சுரங்கங்களில் ஒன்று. நல்ல ஒன்று.
அன்புடன்
மன்மதன்

அமரன்
28-10-2007, 09:42 PM
வெட்க அணைக்கட்டால்
தேக்கத்தில் முத்தம்
ஏக்கத்தில் "வயல்கள்"...