PDA

View Full Version : தமிழா விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...



sureshteen
19-12-2011, 06:14 AM
முல்லை பெரியாறு
எல்லைத் தகராறு - இனி
இல்லை ஆறு என
எள்ளி நகையாடி
தொல்லை தரலாம்
தமிழா...
விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

அண்டை அயலார்
ஆவியே போனாலும்
ஆவியாகப் போனாலும்
யாரும் பருகிட கூடாதென
காவிரி நீரை மறுக்கும்
பாவிகள் ஒரு புறம்
தமிழா...
துடித்திடு...கொதித்திடு...கொதித்தெழு...


பாலாறு தேனாறு
வாயாரக் கூறியது
பழங்கதையாய் ஆனது
காலாற நடக்கத்தான் முடியும்
கால் நனைக்க முடியாமல்
தமிழா...
ஒடுத்திடு...தடுத்திடு...நடத்திடு...

உறங்கும் சமயம்
மறந்தும் மரத்துவிடாதே
உன் கோவணம் கூட
உருவப்படலாம்...
தமிழா...
விரைந்திடு...வீழ்த்திடு...வென்றிடு...

அரசியல் விளையாட
சதுரங்கத் தளமல்ல...
சதிகாரர் நுழையும்
பழிவாங்கும் களமல்ல..

அப்பாவி மக்கள்
அன்றாடும் அல்லலுறும்
வாழ்க்கைத் தளம்....
அனுசரனையாய் நடந்தால்
அனைவருக்கும் நலம்...
நடுநிலைமை தவறினால்
ஆலாங்கால விஷம்...

பாரதத்தின் பெருமை
வேற்றுமையில் ஒற்றுமை...
தமிழனின் பெருமை
ஒற்றுமையில் வேற்றுமை...

தமிழா ஒன்றுபடு
ஒற்றுமை உணர்வுடன்
வேற்றுமையை மறப்போம்
மாற்றத்தை ஏற்படுத்துவோம்
ஒன்றிடுவோம்
வென்றிடுவோம்...

தமிழா...
விழித்திடு விழித்திரு விழித்தெழு
துடித்திடு கொதித்திடு கொதித்தெழு
ஒடுத்திடு தடுத்திடு நடத்திடு
விரைந்திடு வீழ்த்திடு வென்றிடு...

meera
19-12-2011, 06:47 AM
அழகான வரிகள். இன்றைய சூழலுக்கு ஏற்ற வரிகள்.
மூன்று பக்கமும் அண்டை மாநிலத்தாரின் அத்துமீறல் அவ்வப்போது நடந்து கொண்டு இருந்தாலும், கேரளத்தார் அதிகமாய் அத்துமீற நினைக்கிறார்கள்.

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் தமிழா தூங்காதே தூங்காதே என்று எச்சரிப்பதாய் இருக்கிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-02-2012, 12:38 PM
முல்லை பெரியாறு
எல்லைத் தகராறு - இனி
இல்லை ஆறு என
எள்ளி நகையாடி
தொல்லை தரலாம்
தமிழா...
விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

அண்டை அயலார்
ஆவியே போனாலும்
ஆவியாகப் போனாலும்
யாரும் பருகிட கூடாதென
காவிரி நீரை மறுக்கும்
பாவிகள் ஒரு புறம்
தமிழா...
துடித்திடு...கொதித்திடு...கொதித்தெழு...


பாலாறு தேனாறு
வாயாரக் கூறியது
பழங்கதையாய் ஆனது
காலாற நடக்கத்தான் முடியும்
கால் நனைக்க முடியாமல்
தமிழா...
ஒடுத்திடு...தடுத்திடு...நடத்திடு...

உறங்கும் சமயம்
மறந்தும் மரத்துவிடாதே
உன் கோவணம் கூட
உருவப்படலாம்...
தமிழா...
விரைந்திடு...வீழ்த்திடு...வென்றிடு...

அரசியல் விளையாட
சதுரங்கத் தளமல்ல...
சதிகாரர் நுழையும்
பழிவாங்கும் களமல்ல..

அப்பாவி மக்கள்
அன்றாடும் அல்லலுறும்
வாழ்க்கைத் தளம்....
அனுசரனையாய் நடந்தால்
அனைவருக்கும் நலம்...
நடுநிலைமை தவறினால்
ஆலாங்கால விஷம்...

பாரதத்தின் பெருமை
வேற்றுமையில் ஒற்றுமை...
தமிழனின் பெருமை
ஒற்றுமையில் வேற்றுமை...

தமிழா ஒன்றுபடு
ஒற்றுமை உணர்வுடன்
வேற்றுமையை மறப்போம்
மாற்றத்தை ஏற்படுத்துவோம்
ஒன்றிடுவோம்
வென்றிடுவோம்...

தமிழா...
விழித்திடு விழித்திரு விழித்தெழு
துடித்திடு கொதித்திடு கொதித்தெழு
ஒடுத்திடு தடுத்திடு நடத்திடு
விரைந்திடு வீழ்த்திடு வென்றிடு...

இன்னிசை சிந்தியல் வெண்பா
வெந்தவோர் புண்ணிலே வேல்பாய்ச்சும் மூன்றுமிகச்
சொந்தமாம் சோதரர்போல்ச் சொல்கின்ற மாநிலத்தார்
இந்தியரா நாமிடையில் இங்கு?

M.Jagadeesan
20-02-2012, 02:37 PM
அற்புதமான கவிதை!
காலத்திற்கேற்ற கவிதை!!
பாராட்டுக்கள்!!

vasikaran.g
25-02-2012, 02:41 AM
உணர்வை தூண்டிய வரிகள் ..நன்று