PDA

View Full Version : அது மட்டுமே...



Nivas.T
14-12-2011, 08:43 AM
http://www.adroie.com/gogreen/blog/wp-content/uploads/2010/06/mother_nature.jpg

அது
அதுவாய் இருக்கிறது
அனைத்தும் அதற்க்குள்ளே
அனைத்தும் அதனாலே
அனைத்தும் அதற்கே
அதுவே அனைத்தும்
அதுவே ஆக்கம்
அதுவே ஆக்கும்
அதுவே அழிக்கும்
அதுவே மாறும்
அதுவே மாற்றும்
அதுவே நிலைக்கும்
அது நமக்கு நன்மை
அதுவே நமக்கு தீமை
அதுவே நமக்கு நேர்மறை
அதுவே நமக்கு எதிர்மறை
அதற்கு அல்ல நன்மை தீமை
அதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை
நாமும் அதாலே
நாமும் அதனுள்ளே
நாமும் அதுவாய்
அதுவாய் நாமும்
அது மட்டுமே உண்மை

rasan
14-12-2011, 09:03 AM
உண்மையை உண்மையாய் சொன்னீர்கள் நிவாஸ் அவர்களே. ஆனா அரசியல்வாதி போன்றோர் தான் வாழ தன் மாநில மக்களையே தூண்டி விட்டு பிரச்சினை செய்கின்றார்கள். ஆனால் உண்மை நிச்சயம் ஜெயிக்கும்.

Nivas.T
15-12-2011, 05:14 AM
உண்மையை உண்மையாய் சொன்னீர்கள் நிவாஸ் அவர்களே. ஆனா அரசியல்வாதி போன்றோர் தான் வாழ தன் மாநில மக்களையே தூண்டி விட்டு பிரச்சினை செய்கின்றார்கள். ஆனால் உண்மை நிச்சயம் ஜெயிக்கும்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராசன்

meera
15-12-2011, 07:15 AM
:mini023::mini023::mini023::mini023::mini023:

கீதம்
15-12-2011, 10:40 AM
அதன் தரப்பிலிருந்து பார்த்து அழகாய் நியாயம் உரைக்கும் கவிதை. கொஞ்சம் ஆதனின் வாடையும் வீசுகிறது.

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
15-12-2011, 10:53 AM
:mini023::mini023::mini023::mini023::mini023:

:eek:ஐயயோ!!!!!!!

Nivas.T
15-12-2011, 10:55 AM
அதன் தரப்பிலிருந்து பார்த்து அழகாய் நியாயம் உரைக்கும் கவிதை. கொஞ்சம் ஆதனின் வாடையும் வீசுகிறது.

பாராட்டுகள் நிவாஸ்.

நாம் அடிக்கடி படிக்கும் எழுத்துக்களின் பாதிப்பு இருக்கத்தானே செய்யும், அந்தவகையில் மிக மகிழ்ச்சியே

பாராட்டிற்கு மிக்க நன்றீங்க

நாஞ்சில் த.க.ஜெய்
19-12-2011, 11:23 AM
அருமையான வரிகள் ....

Nivas.T
19-12-2011, 11:35 AM
பாராட்டிற்கு மிக்க நன்றி ஜெய்

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-03-2012, 01:22 PM
அதுவே அம்மா
அதுவே அப்பா
அதுவே அன்பு
அதுவே உண்மை
......நன்று நிவாஸ் அவர்களே:)