PDA

View Full Version : பாரதியினைத் தலை வணங்குவோம்!



ஆளுங்க
11-12-2011, 02:47 PM
11 டிசம்பர் 2011

சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை நினைவு கூறுவோம்!!


http://4.bp.blogspot.com/-BKq5r9sLKIo/TuSygKqbDzI/AAAAAAAABWA/tsBY7n_C-Wc/s320/bharathi.jpg (http://4.bp.blogspot.com/-BKq5r9sLKIo/TuSygKqbDzI/AAAAAAAABWA/tsBY7n_C-Wc/s1600/bharathi.jpg)


பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்....

//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்//

மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???

ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)

5. சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)

8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)

9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)

11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)

12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)

meera
12-12-2011, 06:43 AM
பாரதி என்றாலே வீரமும் கவிதையும் போட்டி போட்டுக்கொண்டு வருவதாய் தோன்றுகிறது.

எனக்கு பிடித்த வரிகள்.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி!-எனைச்
சுடர்முகு மறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ-இந்த
மானிலம் பயனுறவாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும்- சிவ
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன். - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

.

Nivas.T
12-12-2011, 08:27 AM
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- மகாகவி சுப்ரமணிய பாரதி

Nivas.T
12-12-2011, 08:37 AM
தேடிச்சோறு நிதந் தின்று – பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக வுழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடி கிழப்பருவமெய்தி – கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரை போலே – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

ஆதி
12-12-2011, 08:41 AM
//காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
//

//ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்//

//குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்//

//தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?//

வாழ்க பாரதி

M.Jagadeesan
12-12-2011, 11:48 AM
பாட்டுக்கொரு புலவன் பாரதியைப் போலே
வீட்டுக்கொரு புலவன் நம்மூரில் இருந்தால்
மெல்லத் தமிழினிச் சாகும் என்கின்ற
சொல்லுக்கு இங்கே இடமுண்டோ சொல்வீர்.

ஆதவா
12-12-2011, 11:55 AM
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- மகாகவி சுப்ரமணிய பாரதி

இந்த வரிகளுக்காகவே இவர் நோபல் பெற்றிருக்கவேண்டியவர்..
இதில் புதைந்து கிடக்கும் வீரம் ஒவ்வொரு முறையும் பாடும் பொழுது (அதுவும் இளையராஜா இசையில்) சிலிர்ப்பதை யார் உணர்கிறார்களோ இல்லையோ நான் உணருகிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
13-12-2011, 04:20 AM
பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் பூணூலை அகற்றியதோடு பார்ப்பனர்களையே தாக்கி எழுதவும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அந்தக் காலத்திலேயே துணிவு பெற்றிருந்த பாரதியார் மாபெரும் புரட்சிக் கவிஞர் . தமிழகத்தையும் பாரத நாட்டையும் ஒரு சேரப் புகழ்ந்து பாடிய மகத்தான கவி. அவரை நாட்டு மக்களனைவரும் போற்றவும் அவருடைய பாடல்களை அடிக்கடி படிக்கவும் வேண்டும் .

mgandhi
13-12-2011, 11:06 AM
http://desmond.imageshack.us/Himg213/scaled.php?server=213&filename=71610412.jpg&res=medium

Dr.சுந்தரராஜ் தயாளன்
13-03-2012, 01:59 PM
வணங்குகிறேன்...இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை பதிவுக்கு நன்றி :)

சிவா.ஜி
13-03-2012, 08:09 PM
ஆஹா....அவனையல்லாது வேறந்த கவிஞனை வணங்குவது. தமிழுள்ளவரை தலைப்பாகைக் கவிஞனிருப்பான்....அவனுக்கு தலை வணங்குதலிருக்கும்.

jayanth
15-03-2012, 06:18 AM
ஆஹா....அவனையல்லாது வேறந்த கவிஞனை வணங்குவது. தமிழுள்ளவரை தலைப்பாகைக் கவிஞனிருப்பான்....அவனுக்கு தலை வணங்குதலிருக்கும்.

ஒளவை கிழவியை மறந்திடாதீங்க...!