PDA

View Full Version : முள்வேலிக்குள்



இன்பக்கவி
10-12-2011, 12:42 AM
http://i1132.photobucket.com/albums/m577/iniya1/pic.png

வெட்ட வெளியில் கஞ்சிக்கு
கையேந்தும் பிஞ்சுகள்
சொந்த நாட்டில் அகதியோ??
தாய்முகம் காண துயரமோ??

நேற்று வரை ஓடி
திரிந்த கால்கள்
இன்று இரும்பு
முள்வேலிக்குள்

கஞ்சிக்கும் தண்ணிக்கும்
மணிகணக்கில் காத்திருப்பு
செல்லடித்து
தரைமட்டமானது
வாழிடம் மட்டுமா
வாழ்க்கையும் தானே??

நிலா சோறு
சாப்பிட வேண்டிய தளிர்கள்
இன்று ஒரு பிடி சோறுக்காக
வரிசையில்..

ஆலமர ஊஞ்சல்
குதித்து தாவி
குளித்த குளக்கரை
ஓடியாடிய பள்ளிக்கூடம்
பள்ளி சீருடை
பகல் நேர பகிரும் உணவு

அம்மாவின் ஆசை முத்தம்
அப்பாவின் கண்டிப்பு
அக்காவின் அரவணைப்பு
சகோதரனிடம் குறும்பு சண்டை

வீதி கடையில் மிட்டாய்
தோள் சாய தோழனின் தோள்
பண்டிகை கொண்டாட்டம்
மஞ்சள் பூசிய புது சட்டை

இனி ஒருமுறை காணும் வரம்
உனக்கு கிடைக்குமோ??

meera
14-12-2011, 08:21 AM
http://i1132.photobucket.com/albums/m577/iniya1/pic.png




நிலா சோறு
சாப்பிட வேண்டிய தளிர்கள்
இன்று ஒரு பிடி சோறுக்காக
வரிசையில்..




படமும் வரிகளும் வலிக்கிறது மனம்.

கவிதை பற்றி சொல்ல வார்த்தையில்லை.

கீதம்
18-12-2011, 10:32 AM
மீராவை வழிமொழிகிறேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.

வலிகள் வார்த்தையாக வார்த்தைகள் வலியாகின்றன.

தமிழராய்ப் பிறந்தது தவிர வேறென்ன பாவம் செய்தன இப்பிஞ்சுகள்?

இக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கவே வேதனை அப்புகிறது.

அக்னி
21-12-2011, 05:43 PM
உரிமைப்போர் இனி உயிர்க்காது...

உறுதிகூறப்பட்டது உலகிற்கு...

நம்பிக்கையுற்றது உலகம்...

தமிழன் என்றொரு இனம் இருந்தால்தானே,
இன்னுமொரு போராட்டம்...???

அழிக்கப்பட்ட தமிழர்கள் போக
மீதமான தமிழரிடமிருந்து
அழிக்கப்படுகின்றது தமிழர் என்பது...

பசிக்குக் கஞ்சி என்பதல்ல, பசிக்கவைத்து கஞ்சி...
அப்போதுதானே, பசி நீக்கி உயிர் காத்தவருக்கெதிராக உணர்வு எழா...

நாளை நம் நிலத்தில் நாமிருக்கத்தான் போகின்றோம்,
நம் நிலத்தில் நாம் என்றுணரா அடிமைகளாய்.., கஞ்சியை எதிர்பார்த்து...

Ravee
21-12-2011, 10:56 PM
வெட்ட வெளியில் கஞ்சிக்கு
கையேந்தும் பிஞ்சுகள்
சொந்த நாட்டில் அகதியோ??
தாய்முகம் காண துயரமோ??

நேற்று வரை ஓடி
திரிந்த கால்கள்
இன்று இரும்பு
முள்வேலிக்குள்

கஞ்சிக்கும் தண்ணிக்கும்
மணிகணக்கில் காத்திருப்பு
செல்லடித்து
தரைமட்டமானது
வாழிடம் மட்டுமா
வாழ்க்கையும் தானே??


பசிக்குக் கஞ்சி என்பதல்ல, பசிக்கவைத்து கஞ்சி...
அப்போதுதானே, பசி நீக்கி உயிர் காத்தவருக்கெதிராக உணர்வு எழா...

நாளை நம் நிலத்தில் நாமிருக்கத்தான் போகின்றோம்,
நம் நிலத்தில் நாம் என்றுணரா அடிமைகளாய்.., கஞ்சியை எதிர்பார்த்து...


விதியின் வலி சொன்ன கவிக்கு வீதியில் இருத்தி வைக்கப்படும் காரணம் சொன்ன அக்னி இருவரும் உள்வாங்கிய வலிகள் உங்கள் வரிகளில் ..... படித்தபின் கண்களில் வழிய முட்டி நிற்கும் என் கண்ணீர் உங்களுக்கு பரிசாக .....

vasikaran.g
23-12-2011, 02:58 AM
அருமை மீரா ..