PDA

View Full Version : பஸ், பால் கட்டண உயர்வு.



M.Jagadeesan
03-12-2011, 01:25 PM
பஸ்சில்தான் பயணம்தான் செய்யத்தான்
பகவன்தான் பணத்தைத்தான் கொடுத்துத்தான்
உதவினானா?
அல்லது
உடம்பில்தான் இறக்கைதான் முளைக்கத்தான்
வைத்துத்தான் பறக்கத்தான் கற்றுத்தான்
கொடுத்துத்தான் இரடசித்தானா?

பாலைத்தான் வாங்கித்தான் குடிக்கத்தான்
பணத்தைத்தான் கொடுத்துத்தான் உதவினானா?
அல்லது
ஆட்டைத்தான் மாட்டைததான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் பாலைத்தான் குடிக்கத்தான்
இரடசித்தானா?

உதயசூரியன்
03-12-2011, 03:49 PM
பணத்துக்கு... அலைந்தாலும்.. பகவான் காதில் கேட்காது...!!

நடப்பு சோகத்தை கவிதையில் கோடிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

meera
05-12-2011, 04:58 AM
அடடா, ஒட்டு மொத்த தமிழக மக்களின் புலம்பல் அல்லவா இது.

எத்தனை புலம்பினாலும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இது தான் தண்டனை.

அழகான வ(லி)ரிகள் ஐயா.

sarcharan
05-12-2011, 07:51 AM
ஏக்கமா? சோகமா? கேள்வியா?புலம்பலா? மொத்தத்தில் நல்ல கவிதை!

எனக்கு உங்களது கவிதையை படித்தவுடன் "அத்திக்காய் காய் காய் ஆலங்காய்..." பாடல் நினைவுக்கு வந்துவிட்டது.

M.Jagadeesan
05-12-2011, 08:03 AM
உதயசூரியன், மீரா,சர்சரண் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி.

jaffer
05-12-2011, 09:02 AM
நாட்டு நடப்பு கவிதை - கஷ்டமாக இருக்குது அட என்ன பண்ண இப்படி எல்லாம் கவிதை எழத வாய்ப்பு கொடுத்தார்களே என்று வேணா சந்தோசிக்கலாம்.

M.Jagadeesan
05-12-2011, 10:09 AM
ஜாபரின் பின்னூட்டத்திற்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 09:08 AM
ஏக்கமா? சோகமா? கேள்வியா?புலம்பலா? மொத்தத்தில் நல்ல கவிதை!

எனக்கு உங்களது கவிதையை படித்தவுடன் "அத்திக்காய் காய் காய் ஆலங்காய்..." பாடல் நினைவுக்கு வந்துவிட்டது.

"அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" பாடலுக்கும் இப்பாடலு க்கும் சம்பந்தம் இல்லை.
போன நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞரின் வருத்தமான ஒரு விருத்தப்பாடலைப் பின்பற்றி அய்யா ஜெகதீசன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார்கள். அந்தக் கவிஞரின் பெயர், இராமசந்திர கவிராயர் என்று ஞாபகம். ஒரு வேலை தவறாகவும் இருக்கலாம். சிறு வயதில் படித்தது.

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
-------------- குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொண்ணைத்தான் எனக்குத்தான்
-------------- கொடுத்துத்தான் இரச்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான்
--------------- நோவத்தான் அய்யோஎங்கும்
பல்லைத்தான் காட்டத்தான் பதுமத்தான்
--------------- புவியில்த்தான் பண்ணினானே

இதுதான் அந்தப் பாடல்.
:)