PDA

View Full Version : எடுபடா இரகசியங்கள்.



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-12-2011, 07:35 AM
அவன் கூற விழைந்திருந்தான்
இதயமிடறிய இடர்பாடொன்றை
உட்புகுந்து உடலறுக்கும்
உள்ளங்கள் ஒவ்வாததை
பார்த்ததும் பளிச்சென்பதைப்போல்
எவருமெளிதில் கண்டுகொள்ளவியலாததை
தலையிலமர்ந்து தன் புத்திக்குப் பதிலாய்
தானாய் தனித்தியங்குமதை
முற்றிலுமாய் கூறிவிடுவதென்று
பிரணாயாமும் ஏற்றான்
அவன் அறிந்திருந்தான்
அவ்வார்த்தையின் செயல்பாடுகளை
இன்னும் உணர்ந்திருந்தான்
அதன் மூலத்திய விளைவுகளை
கூறியும் முடித்திருந்தான்
எப்பொழுதுமாய் இயங்கியது உலகம்
நேற்றையைப் போலும்
அதற்கு முந்தைய நாட்களைப் போலும்
இன்னும் பிரகாசமாய்..


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

கௌதமன்
03-12-2011, 04:23 PM
சத்தியம் ஏதும் விடமாலேயே
ஒரு சத்தியப் பிராமாணம்!
இதய மூட்டையின் முடிச்சுகள்
அவிழ அவிழ மனம் இலேசாகும்!!
கண்களை மறைத்து வைக்க
அவசியப்படாததால் உலகத்தின்
பிரகாசம் அகப்பட்டது போலும்!!!

நன்று ஜுனைத் ஹஸனி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
04-12-2011, 07:33 PM
நன்றி கௌதமன் அவர்களே சுட்டிக்காட்டலுக்கும் சிறியதொரு கவிதைக்கும்.

கீதம்
07-12-2011, 04:48 AM
வெத்துவேட்டுகளின் பம்மாத்துகளுக்கே மதிப்பளிக்கும் இந்த உலகம் அவனுடைய பிரமாணங்களை பித்தனின் பிதற்றலென்றே புறந்தள்ளிப் போவதில் வியப்பென்ன?

கவிதை சொல்லும் யதார்த்தம் யோசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.