PDA

View Full Version : இன்று விடுமுறை...



இன்பக்கவி
26-11-2011, 09:23 AM
அழகாய் மழை
குளிராய்க் காற்று
வாகன சத்தமில்லா
முழுஅமைதி
குயில்களின் கூவல்
எங்கோ அழும்
குழந்தையின் அழுகை

குளிரில் நடுங்கி
சன்னலருகே
கொஞ்சும் புறாக் கூட்டம்
அங்கங்கே ஒலிக்கும்
கைபேசியின் இசை ஒலி
நடுநடுவே இடியின் ஆதிக்கம்
மின்னலின் ஒளிப்படம்
எல்லாமே அழகாய் இன்று

கண்ணாடிக் கூட்டுகள்
கைகள் கணினியில்
தட்டிக் கொண்டு இருக்க
அலுவல் அவசரத்தில்
ரசிக்க மறந்தேனோ

இயந்திரத்தை இயக்கும்
இயந்திரமாய்
இயந்திர வாழ்க்கையில்
சில யதார்த்தங்களை
ரசிக்க மறந்தேனோ

அலுவல் தரும் அலுப்பில்
இரைச்சலாய் தோன்றிய
அத்தனை சத்தமும்
இன்று ரீங்காரமாய் ஒலிக்க
அமைதியாய் மனம்
நிம்மதியான சூழல்
வேண்டும் தினமும்
ஏக்கத்தோடு மீண்டும்
இயந்திர வாழ்க்கை தொடர
அலுவலத்திலிருந்து அழைப்பு :icon_p::traurig001:

கீதம்
30-11-2011, 11:54 PM
தினந்தோறும் விருந்துணவு அசுவாரசியம்!
அஜீரணமும் கூட!
எண்ணிலா நாட்களில்
என்றேனும் ஓர்நாள் என்றால்....
எண்ணவும் இன்பம்!
உண்ணவும் இன்பம்!

பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது
இயந்திரமாயொரு வாழ்க்கை!
உயிராதாரத்தை வாழ்விக்கிறது
ரசனைமிகு இயற்கை!

விடுமுறையின் ஆசுவாசத்தையும்
அலுவலகத்தின் ஆயாசத்தையும்
அழகாய் வெளிப்படுத்துகிறது கவிதை.
பாராட்டுகள் இன்பக்கவி.

கலாசுரன்
03-12-2011, 05:27 AM
இயந்திர வாழ்க்கையில் நாம் மறந்து விடுவதோ அல்லது அவசரத்தில் தவிர்த்து விடுவதோ எவ்வளவு அழகு மிகுந்தவை...!!!!

இதை வாசித்தபோது ஒரு விடுமுறை நாளை இப்படி மாற்றி அமைத்தாலென்ன என்று யோசனை எழுகிறது .. :)

குளிரில் நடுங்கி
சன்னலருகே
கொஞ்சும் புறாக் கூட்டம்

இந்த வரிகள் சிறப்பு .. !!!!

வாழ்த்துக்கள் :)

இன்பக்கவி
04-12-2011, 03:22 AM
இயந்திர வாழ்க்கையில் நாம் மறந்து விடுவதோ அல்லது அவசரத்தில் தவிர்த்து விடுவதோ எவ்வளவு அழகு மிகுந்தவை...!!!!

இதை வாசித்தபோது ஒரு விடுமுறை நாளை இப்படி மாற்றி அமைத்தாலென்ன என்று யோசனை எழுகிறது .. :)

குளிரில் நடுங்கி
சன்னலருகே
கொஞ்சும் புறாக் கூட்டம்

இந்த வரிகள் சிறப்பு .. !!!!

வாழ்த்துக்கள் :)


தினந்தோறும் விருந்துணவு அசுவாரசியம்!
அஜீரணமும் கூட!
எண்ணிலா நாட்களில்
என்றேனும் ஓர்நாள் என்றால்....
எண்ணவும் இன்பம்!
உண்ணவும் இன்பம்!

பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது
இயந்திரமாயொரு வாழ்க்கை!
உயிராதாரத்தை வாழ்விக்கிறது
ரசனைமிகு இயற்கை!

விடுமுறையின் ஆசுவாசத்தையும்
அலுவலகத்தின் ஆயாசத்தையும்
அழகாய் வெளிப்படுத்துகிறது கவிதை.
பாராட்டுகள் இன்பக்கவி.

நன்றிகள் கீதம் , கலாசுரன்:icon_b: