PDA

View Full Version : தேச உடமைகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-11-2011, 12:24 PM
கண நேரக் கோபத்தில் வெளிக்கடாசிய

நிறைவுறா என் பிந்தைய கனவுகளை

அவன் எடுத்து ஓடிக் கொண்டிருந்தான்

என் மனமும் பொட்டை நாயை பின்னிடும்

ஆளுமைக்கார ஆண் நாயாய்

அவன் பின்னங்கால் பற்றிச் சென்றது

காடுகளையும் மலைகளையும்

கடந்து சென்றான் அவன்

பாலைவன மணற் பரப்புகளினூடே

தன்னை ஒளிக்கவிழைந்தான்

ஊதாச் சமுத்திர அலைகளில்

கலந்தோட எத்தனித்தான்

அவன் தரப்பிலான ஒவ்வொரு ஏய்ப்பு முயல்தல்களும்

என்னால் இனம் கண்டு கொள்ளப்பட்டன

இறுதியாய் என்னைச் சரணடைந்தான்

என் கனவுகள் வேண்டுமென்றான்

அதற்காய் எதையுமிழக்கத் துணிவிருப்பதாய்

என் கால் பற்றிக் கிடந்தான்

வெளியெங்கும் நிறைந்த

அவன் இழப்பு ஓலங்களுக்கிடையே

எனதெண்ணங்கள் பறித்தெடுக்கப்பட்டன

கூட்டித் துடைத்து சந்திக் கழிவுகளிலிடப்பட்டாலும்

பிறார்க்கு அனுமதிக்கப்படுவதில்லை

அவரவர்களின் உரிமைகளும் உணர்வுகளும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

கௌதமன்
23-11-2011, 01:24 PM
பலிக்கின்ற பாத்தியதை

இருக்குமானால்

கனவுகளும் சிறிது களவாடப்படட்டுமே!

கலாசுரன்
26-11-2011, 05:33 AM
எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று ...!!!!

மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட உருவகங்கள் :)

பத்திகளாக பிரித்திருந்தால் வாசிப்பிற்கு எளிதாக இருந்திருக்கும் .. :)

ஒவ்வொரு வார்த்தை பிரயோகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவை ...!!!!

அதிலும்

அவன் இழப்பு ஓலங்களுக்கிடையே

எனதெண்ணங்கள் பறித்தெடுக்கப்பட்டன

இந்த வரிகளின் தாக்கம் தீவிரமானது .. :)

வாழ்த்துக்கள் :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-11-2011, 12:53 PM
கௌதமன் அவர்களுக்கு: கூற வந்ததை நேர்த்தியாக புரிந்துள்ளீர்கள். சும்மா கெடப்பதுதானே என்று விட்டுக் கொடுப்பதைத்தான் முழுச் சமாதானமாய் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். கூற வந்ததை அப்படியே சொல்லியுள்ளீர்கள். ஆனால் அந்த பெருந்தன்மைதான் அசலுக்கே வேட்டாய் வெடிக்கிறது. மிக்க நன்றி கௌதமன் அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-11-2011, 01:00 PM
மிக்க நன்றி கலாசுரன் அவர்களே. எவ்வ்ளவு நாளைக்குத்தான் பிற கலாச்சாரத்திற்கு ஒத்தூதிக் கொண்டிருப்போம். நம் கலாச்சாரம் ஒன்றும் அவ்வளவு குறைந்து விடவில்லை பிறத்தியாருக்கு முன். வார்த்தைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி கலாசுரா.