PDA

View Full Version : விடியலின் தேடல்...



matheen
23-11-2011, 11:34 AM
நண்பனே!

ஒரு புதிய பாதயை தேடி...
மனதுக்குள்
எத்தனையோ எண்ணங்களோடு...
ஏதேதோ கனவுகளோடு
தேடிச்கொண்டிருக்கிறேன்,

விடியலின் தேடலுக்கான
அவசியம்
விடியலாய்
வலை விரித்த
அவளின் எழிலில் வீழ்ந்ததுதான்..

பொய்யாய்
பூத்ததோர் பெண்ணின்
புன்னகையை நம்பிப்போன
இழவு காத்த இளைஞர்கள் பட்டியலில்
இன்று நானுமோர் அங்கத்தவன்...

மழை தரும் மேகமென
அவளை எண்ணி
போனேன்...
அதுவோ என் வாழ்கயில் வந்த
கிரகணமாகிப் போனது....

இனி என்ன செய்வேன்,

அவளோ அவள்
இல்லறத்தில்...

நானோ என்
கல்லறையில்,,,

பூமகள்
27-11-2011, 02:58 AM
கல்லறையில் இருந்து கொண்டு விடியலைத் தேடும் தேடலுக்கோர் பாராட்டுகள்..

கண் ஜாடை காட்டுவார்..
கற்பனை பல ஏற்றுவார்..
காதலாகி கசிந்தபின்
கல்மனமும் காட்டுவார்..

நதியுனூடான பயணம்..
இவ்வகை இடர்கள் சகஜம்..

கலங்கி நின்றால்
தேங்குவோம்..
நதியோட்டம் சென்றபின்
கலங்குவோம்..

நின்றால் விருட்சம்..
நடந்தால் நதி..
அமர்ந்தால் வயல்..
தேங்கினால் சகதி..

தடையில்லாப் பயணமே..
வாழ்க்கையின் வெற்றி..

எல்லாம் கடந்து போகும்..

மனம்,குணம் நலமாகட்டும்..

பாராட்டுகள் மதீன். :)

ஆதவா
06-12-2011, 07:04 AM
கவிதையோட முதல் வரிகளைப் பார்த்ததுமே ஏதோ தேடறாரேன்னு பார்த்தா சைட் அடிச்சுட்டு இருக்கேங்கறத விடியலின் தேடல்னு மாத்திப்புட்டீங்க சார்.. :D, கவிதையைப் படிச்சுட்டு சில கேள்விகள் கேட்கத் தோணுது, இது உங்களை நேரடியா கேட்கிறதில்ல, கவிதை நாயகனைப் பத்தியது...

1. உண்மையிலேயே விடிஞ்சுதா இல்லை பெட்ரமாஸ் லைட்டா?
2. இப்ப நீங்க எங்க இருக்கீங்க?
3. அவள் உங்கல் வாழ்கையில் வந்த கிரகணம் அப்படின்னா ஒருவேளை ஒய்ப்பா கூட இருக்கலாம், அதுக்காக.....??
4. கவிதைப் படி அந்த பொண்ணு மேல தப்பில்ல,... அப்படின்னா?
5. கவிதையோட முதல் வரிப்படி, தேடிட்டு இருக்கீங்க.... ஆனா கல்லறையில இருக்கிறதா சொல்றீங்க, லாஜிக் ஒதைக்குதே...

சரி சீரியஸுக்கு வருவோம்.

எப்பவுமே விடியல் யாரையும் தேடாதாம், அதனால நாம காத்திருந்தா விடியல் கிடைக்கும் அப்படின்னு கண்ணதாசனே சொல்லியிருக்காரு (அது கண்ணதாசா? ஜேசுதாஸா?), அதுமட்டுமில்லாம வாழ்க்கையில ஒண்ணு மட்டும்தான் நமக்குன்னு இல்ல, அவ போய்ட்டான்னா இவ... இவ போய்ட்டான்னா இன்னொருத்தி. ஆகமொத்தம் நாம செய்யப்போறது சந்ததி விருத்தம் மட்டும்தான், காதலே கிடையாதுன்னு நிறைய பேர் நம்பறாங்க.

வாழ்க்கையை அனுபவிக்கணுமாம்....
கவிதையை இன்னும் சீர்படுத்தி கருவை மாத்தி எழுத முயற்சி செஞ்சா அருமையா இருக்கும்ங்க, அடுத்த கவிதையில சந்திப்போம். Dot

Ravee
06-12-2011, 10:33 AM
அதுமட்டுமில்லாம வாழ்க்கையில ஒண்ணு மட்டும்தான் நமக்குன்னு இல்ல, அவ போய்ட்டான்னா இவ... இவ போய்ட்டான்னா இன்னொருத்தி. ஆகமொத்தம் நாம செய்யப்போறது சந்ததி விருத்தம் மட்டும்தான், காதலே கிடையாதுன்னு நிறைய பேர் நம்பறாங்க.


:eek:இதுதான் ஆதவாவின் டச் :lachen001: தகஸ் எங்கப்பா ஆளை காணோம் :lachen001::lachen001:

அக்னி
06-12-2011, 10:51 AM
பொய்யாய்
பூத்ததோர் பெண்ணின்
புன்னகையை நம்பிப்போன
இழவு காத்த இளைஞர்கள் பட்டியலில்
இன்று நானுமோர் அங்கத்தவன்...


புன்னகைப் பூத்தாலே,
எனக்காகப் பூத்தாளோ என்று
love கொண்டு
இலவு காத்த இளைஞர்களின்
தப்புக்கணக்குக்கு,
அவள் இழவாகிப் போனாளோ...

பாமகள், ஆதவா (ஆதவாவா ஆதியா) ஆகியோரின் பின்னூட்டங்கள் :icon_b:

ஆதவா
07-12-2011, 02:02 PM
அதுமட்டுமில்லாம வாழ்க்கையில ஒண்ணு மட்டும்தான் நமக்குன்னு இல்ல, அவ போய்ட்டான்னா இவ... இவ போய்ட்டான்னா இன்னொருத்தி. ஆகமொத்தம் நாம செய்யப்போறது சந்ததி விருத்தம் மட்டும்தான், காதலே கிடையாதுன்னு நிறைய பேர் நம்பறாங்க.


:eek:இதுதான் ஆதவாவின் டச் :lachen001: தகஸ் எங்கப்பா ஆளை காணோம் :lachen001::lachen001:


ஏங்ணா... உங்க அப்பாவை காணோம்னா தக்ஸை ஏன் கூப்பிடறீங்க? :lachen001: