PDA

View Full Version : என் காதல்



lavanya
07-04-2003, 12:12 PM
படைத்தவர்க்கே சமர்ப்பணம்

என் காதல்

முற்றத்து கோழிக்கு
குறுணையை போல
நீ வீசிவிட்டு போகும்
பார்வைகளை
என்றேனும் பிடித்து
கழுத்தறுத்து சமைப்பாயோ
என்ற பயத்தோடு
கொறித்து கொண்டிருக்கிறது
என் காதல்......

rambal
07-04-2003, 03:21 PM
அன்பே!
நீ அவ்வப்பொழுது
வீசிச் சென்ற பார்வை விதைகள்
என் இதய நிலத்தில் வளர்ந்து
இன்று அறுவடைக்காகக் காத்திருக்கின்றன!

நீ வந்து
அறுக்காவிட்டால்,
உனக்கொன்றும் நட்டமில்லை!
என்
உயிர்தான் மடிந்துவிடும்

poo
07-04-2003, 04:31 PM
அன்பே..
நீ அன்பு நீர் ஊற்றி வளர்த்த
காதல்.. ஆலமரமாய்..
அதில் ஊஞ்சல் கட்டியாடும்
கல்யாண நாள்- நாளை!!!

இளசு
07-04-2003, 05:00 PM
முக்கனி தந்த முக்கவி அணிக்கு
பாராட்டுகள்....