PDA

View Full Version : பெண் வாழ்க்கை

இன்பக்கவி
22-11-2011, 02:32 AM
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/11.jpg
பற்றி எரியும் மலரைப் போல்
பாழாய் போனது பெண் வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமானமாம் வரிகளாய் மட்டுமே
இன்று வரை..

கைவிலங்கு பூட்டி
சுதந்திரம் தரம் உத்தமர்கள்
கல்யாண சந்தையில்
ஆணுக்கு ஒரு விலை..
வாங்க இயலாமல்
இளமைத் தொலைத்து
முதுமை நெருங்கிட
காத்திருக்கும் முதிர்கன்னிகள்

பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய்
மாமியார் உருவில் ஒரு எமன்..
மருமகள் பற்றவைத்தால்
பற்றாத அடுப்பும்
பற்றி எரிந்து வெடித்து
கருகும் மலர்களாய்
பெண்கள்..

பெண்ணை பூவோடு
ஒப்பிட்டீர்களே
வண்டுகளாய் வந்து
மது அருந்தி
மயக்கம் தீர்ந்து
வாட வைக்கவோ
பூஜை மலராய் வேண்டாம்
கருகிய மலராய் வீதியில்
உலாவரும் நிலை
இனியும் வேண்டாம்...

நிலவோடு ஒப்பிட்டு
இரவில் மட்டும் ரசித்து
இருளில் மூழ்கடித்தும்
தேய்ந்து மெலிந்து
வாழ்வை தொலைக்கவோ

இட ஒதுக்கீடு வேண்டாம்
உங்கள் இதயத்தில் இடம்
கொடுங்கள்..
பெற்றத்தாயை மதிக்கும்
உலகில் உற்றவளை
உயிர் பறித்து பார்க்கும்
அவலம் வேண்டாம் இனியும்..:icon_p:

M.Jagadeesan
22-11-2011, 05:49 AM
கவி நன்று.

sarcharan
22-11-2011, 10:36 AM
எத்தனை நாளைக்குத்தான் பொண்ணு பொண்ணுன்னு பெண் பஞ்சாங்கத்தையே பாடுவீங்க:lachen001::redface:... காலம் மாறிப்போச்சு மக்களே...:D:D:D:D

இன்றைக்கெல்லாம் இது போன்ற கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை:D:D

ஆனால் கவிதை நன்றாய் இருந்தது :)

இன்பக்கவி
22-11-2011, 04:23 PM

நன்றிகள்....எத்தனை காலம் மாறினாலும் சில ஆண்களின் மனபான்மை மாறாமல் இருக்கும் வரை இப்படி சில புலம்பல்கள் இருக்கத்தான் செய்யும்:icon_b::icon_b:

கீதம்
23-11-2011, 12:53 AM
நன்றிகள்....எத்தனை காலம் மாறினாலும் சில ஆண்களின் மனபான்மை மாறாமல் இருக்கும் வரை இப்படி சில புலம்பல்கள் இருக்கத்தான் செய்யும்:icon_b::icon_b:

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

கவிதை பற்றி பிறகு...:)

muthuvel
23-11-2011, 06:03 AM
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

கீதம்
24-11-2011, 11:19 PM
பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன (?) என்றாலும், வேதனைக்குரிய விஷயங்கள் எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்வதானாலும் அதுவும் கவனத்திற்கொள்ளத்தக்கதே! அந்த ஒன்றிரண்டு சம்பவங்களும் நிகழாதிருப்பின் இதுபோன்ற புலம்பல்கள் நிறுத்தப்படும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை.

கவிதையின் கருவுக்கேற்ற படம். படத்திற்காக கவிதை எழுதியது போல் உள்ளது. அத்தனைப் பொருத்தம். கவிதை வரிகளில் சாடல் இருந்த அளவுக்கு உணர்வுகள் சரிவர வெளிப்படாதது போல் உள்ளது. இன்னும் கொஞ்சம் செதுக்கினால் இன்னமும் மனம் தொடும் வகையில் அமையக்கூடும்.

எனினும் இதுபோன்ற சமூகச் சாடலை முன்வைத்தக் கவிதைக்காகவே உங்களைப் பாராட்டுகிறேன் இன்பக்கவி.

இன்பக்கவி
25-11-2011, 01:53 AM

அப்பாடா நன்றிகள் கீதம். :)
கவிதை பற்றி பிறகு என்று சொன்னதும் ஒரு கணம் பயந்துவிட்டேன் ...தேர்வு முடிவு போல உங்கள் பின்னோடதிற்காக பொறுத்திருந்தேன்...ம்ம் இன்னும் நல்ல விதமாக உணர்வுகளை வெளிபடுத்தும் கவிதைகள் படைக்க விரும்புகிறேன்.. மன்றத்தின் ஊக்கம் என்னோட ஆக்கமாக அமையும் :icon_b::icon_b: