PDA

View Full Version : டாக்டர் சிரிப்ஸ்



gvchandran
19-11-2011, 05:35 AM
டாக்டர் சிரிப்ஸ்
கலா: டாக்டர்! எனக்கு வாந்தி வர்றதுக்கு ஒரு மாத்திரை கொடுங்க.
டாக்டர் : ஏன் அப்படி கேக்குறே?
கலா : தினம் மூன்று வேளை சாப்பிடச் சொல்லி ஒரு மாத்திரை
எழுதி இருக்கீங்க. ஒரு வேளை முழுங்கினதும் அடுத்த வேளைக்கு அதே
மாத்திரையை எனக்கு கிடைக்கணுமே, அதுக்கு தான்!

நோயாளி: எனக்கு நிறைய சொத்து இருக்கு .ஆனா கிட்னியிலே கல் இருக்குன்னு சொல்றான்ங்களே
டாக்டர் : கவலைப்படாதீங்க . ரெண்டையும் கரைச்சிடலாம்.

டாக்டர் : B.P குறைய மாத்திரை தந்தேனே. இப்ப எப்படி இருக்கு?
நோயாளி : B.B தான் குறைஞ்சிருக்கு. பாங்க் பாலன்ஸ் !

மாலா: ( காகிதத்தில் எழுதி காட்டுகிறாள்)
டாக்டர் ! 3 நாள் முன்னே சமையல் புக் பார்த்து ஒரு பாயசம் செய்து குடித்தேன். அதில் இருந்து எனக்கு பேசவே முடியலை.
டாக்டர்: எனக்கும் அந்த பாயசம் வேணும். என் மனைவி பேசறதை நிறுத்தவே மாட்டேங்கிறாள்.
5) கோபு: குருட்டு அதிர்ஷ்டம்னா என்னடா?
பாபு: இந்த கண் டாக்டர் ஆப்பரேஷன் பண்னியும் பார்வை போகாமல் இருந்தா அது தான் குருட்டு அதிர்ஷ்டம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~ஜீ.வி.சந்திரன்

jaffer
19-11-2011, 09:43 AM
நல்லா இருக்கு - பகிவுக்கு நன்றி :lachen001:

arun
19-11-2011, 12:59 PM
நன்றாக இருந்தது ரசித்து படித்தேன்

venkat8
07-01-2012, 03:56 PM
குருட்டு ஜோக் சூப்பரோ சூப்பர்