PDA

View Full Version : அபயக்குரல்



ஆதி
19-11-2011, 04:52 AM
இந்த தெருவில் வசிப்போர் யாவரும்
என் கூக்குரலுக்கு செவிமடித்தாரில்லை

என் அலறலையும் கூச்சலையும்
பொருட்படுத்தினாரில்லை

உரத்து கத்தி
ஓங்கி அறைந்தும்
இந்த வீட்டின் கதவை திறந்திட
யாரும் முன்வந்தாரில்லை

தாளமுடியாததாக இருக்கிறது இந்த தனிமை
அச்சமுறுத்துவதாக இருக்கிறது இந்த வெறுமை
என் குரலுக்கு செவிமடித்து
தயைகூறுங்கள்

யாரேனும் வாருங்கள்
இதை வாசிங்க்கிற
நீங்களேனும் என் மன உணர்வை புரிந்து கொள்ளுங்கள்
அந்த வீட்டின் கதவுக்குள்
என்னை அடைக்காதீர்கள்..

என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
என்னோடு கைகுலுக்குங்கள்
எதனை பற்றியாவது கொஞ்ச நேரம் உரையாடலாம்
உங்கள் குழந்தைகளை என்னுடன் விளையாடவிடுங்கள்
ஒதுக்காதீர்கள்..
உங்கள் காஃபி மேஜயில் அமர்த்தி
உபசரிக்காவிடினும்
ஒரு முறுவல் பூத்திடுங்கள்
எனக்கு போதும்
நம்புங்கள்
உங்களுக்கு நான் உபத்திரம் தரமாட்டேன்

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
யாருக்கும் கேட்பதில்லை இறந்த*வர்களின் குரல்களென..
இதை வாசிக்கிற நீங்களேனும் இரங்குங்கள்...

jaffer
19-11-2011, 09:46 AM
சபாஸ் வித்தியாசமான சிந்தனை கவி - இறந்தவர்களின் குரல் கேட்டால்/புரிந்தால் தானே கேட்பதற்கு?!

படைப்பாளிக்கும் பகிர்ந்தமைக்கும் பாராட்டுக்கள்

matheen
20-11-2011, 08:22 AM
தனிமையை அவர்களுக்கு ரசிக்க தெரியவில்லை:smilie_abcfra:

கீதம்
20-11-2011, 10:14 PM
வாசிக்கும்போதே நம்மை அறியாமல் அபயக்குரலின் தொணியிலேயே படபடப்புடனும், கெஞ்சலோடும், ஏக்கத்தோடும் வாசிக்க நேர்கிறது. இது கவிதையின் முதல் வெற்றி. பாராட்டுகள் ஆதன்.

அழுது புலம்பிப் பார்த்தவனின்
அடுத்த நடவடிக்கையாய்
அழகாயொரு விண்ணப்பம்.
சரி, நான் வருகிறேன் உங்கள் உதவிக்கு.
என்னோடு பேசலாம்,
உங்களைப் பற்றி நான் கேட்கிறேன்.
என் இல்லத்துக்கு வாருங்கள்,
என் குழந்தைகளோடு விளையாடுங்கள்.
கதவை நான் திறக்கிறேன். ஆனால் ....



உரத்து கத்தி
ஓங்கி அறைந்தும்
இந்த வீட்டின் கதவை திறந்திட
யாரும் முன்வந்தாரில்லை



இதை வாசிங்க்கிற
நீங்களேனும் என் மன உணர்வை புரிந்து கொள்ளுங்கள்
அந்த வீட்டின் கதவுக்குள்
என்னை அடைக்காதீர்கள்..


இந்த வீடு அந்த வீடு என்கிறீர்கள். எந்த வீடு என்பதை எழுத மறந்துவிட்டீர்களே.... :)

கலாசுரன்
03-12-2011, 01:00 PM
ஒரு கவிதை தன் வேலையை சரியாக செய்வது என்பது வாசித்த பின் உணர்சிகளின் உருமாற்றத்தில் அடங்கியுள்ளது..

இக்கவிதை அதை மிகவும் நன்றாகவே செய்கிறது ...!

வாழ்த்துக்கள் .. :)