PDA

View Full Version : கருவறை ..!



vasikaran.g
19-11-2011, 03:48 AM
இருவரின் கூட்டு முயற்சி .,
இரண்டு நிமிட இன்பம் .,
இரண்டு துளி வெண்மணி .,
பயணிப்பதோ பல மணி .,

இறுதியாய் உறைவது
சூரியன் புகா நிலவறை.,!
உண்டு உறங்க ஓர் அறை.!
சுவாசிக்க ஓர் உறை .!

சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!
ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!
அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்
இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!
எத்தனை சிறிய ஜான் இடம் ,
இதற்குள் உறைவது ,
எத்தனை பெரிய மானுடம் ..!!!

வசிகரன்.க

jaffer
19-11-2011, 05:35 AM
உண்மையான,உன்னதமான வரிகள் - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

matheen
20-11-2011, 09:49 AM
உயிரின் முதல் துயிலிடம்,
உன்னை நீ அறியாமல்
ஜீவித்த உன் தாயின்
புகழ் வீக்கிய புனிதவிடம்...

vasikaran.g
26-11-2011, 03:56 AM
உண்மையான,உன்னதமான வரிகள் - படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
நன்றி ஜாபர் .

வசிகரன்.க

vasikaran.g
26-11-2011, 03:57 AM
உயிரின் முதல் துயிலிடம்,
உன்னை நீ அறியாமல்
ஜீவித்த உன் தாயின்
புகழ் வீக்கிய புனிதவிடம்...
நன்றி matheen

வசிகரன்.க

கலாசுரன்
26-11-2011, 06:21 AM
வார்த்தை கோர்வைகள் மிகவும் அருமை ...:)

vasikaran.g
28-11-2011, 03:55 AM
வார்த்தை கோர்வைகள் மிகவும் அருமை ...:)
நன்றி கலாசுரன் ..

sarcharan
30-11-2011, 09:56 AM
அருமை வசீ

vasikaran.g
02-12-2011, 03:47 AM
நன்றி sarcharan ..