PDA

View Full Version : இனிய உளவாக..!!பூமகள்
18-11-2011, 09:05 AM
இன்சொல் - இந்த வார்த்தையையே இக்காலத்தில் மறந்துவிட்டோமோ என்ற பயம் இந்த முறை இந்தியப் பயணத்தில் தோன்றியது.
வரவேற்பாளர்கள் முதல் செவிலியர் வரை அனைவரிடத்தும் கண்டதும் வருத்தமும் தோன்றியது. அழகாக, கனிவாக பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்..
எல்லாரும் ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்த உலகில் தன்னை சிக்க வைத்த மூச்சு முட்ட வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை எனக்கு எழுந்தது..

காரணங்களை ஆராய முற்பட்டேன்..

இக்கால பரபரப்பான சூழ்நிலை..
தன் மதிப்பை நிலை நாட்ட..
பொறுப்பற்ற மனநிலை..
அற்பணிப்பற்ற பணி..
மேலிடத்தின் நெருக்கடி..

இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும்.. விருந்தோம்பலுக்கும், மரியாதையும் அன்பும் கலந்த மொழியாளுமைக்கும் பெயர் பெற்ற நம் ஊரிலா இந்நிலை என்று
வருத்தமாக இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம்..

ஒரு வரவேற்பாளினியை முக்கியமான ஒரு சான்றிதழுக்காக தொடர்பு கொள்ள நேர்ந்தது.. சரியாக பதில் சொல்லாமல் பட்டும் படாமல் பதிலளித்தவாறு இருந்தார். எப்படியோ நான் வருவதற்கு இன்னும் இரு நாட்களில் தயாரித்துத் தருவதாகச் சொல்ல.. நானும் அவருக்கு பத்து நாட்கள் முன்பே நினைவூட்டினேன். தேதி முதற்கொண்டு அனைத்தையும் தெளிவாக சொன்ன நிலையிலும்.. அவர் இரு நாட்கள் முன்பு நினைவூட்டுங்கள் என்று பதிலளித்தார். சரி என்று சரியாக 2 நாட்கள் முன்பு நினைவூட்ட மறுபடி அலைபேச, அவரோ.. நீங்கள்
வரும் நாளுக்கு முந்தைய நாள் நினைவூட்டுங்கள் என்று சொன்னார். நான் மறுபடியும் அடுத்த நாள் காலை அலைபேசியில் நினைவூட்ட.. மதியத்துக்கு மேலும் நினைவூட்டுங்கள் என்று பதில்.. எரிச்சலும் கோபமும் வந்தாலும் எனது முக்கிய தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதால் மனதை அமைதியாக்கிக் கொண்டு மீண்டும் மதியம் அழைத்து நினைவூட்ட.. பின் அடுத்த நாள் காலையில், கண்டிப்பாக இது பற்றி மேலதிகாரிக்கு புகார் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சென்ற என்னிடம் நன்றாக பேசி கொடுத்து விட்டார்கள்.. ஒருவேளை நான் கோபத்தில் திட்டிவிடுவேனோ என்ற பயமோ என்னவோ தெரியவில்லை.. சொன்ன நேரத்துக்கு முன்பாகவே அங்கு சென்று விட்ட என்னைப் பார்த்து மகிழ்ந்துவிட்டார்கள் என்பது நேரத்துக்கு யாரும் வருவதே இல்லை என்ற புலம்பல் மூலம் எனக்கு பின் தான் தெரியவந்தது...

ஆனால் இதே இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் கட்டாயம் பெரிய தகராறு வந்திருக்கும்.. வயதில் மூத்தவர் என்ற மரியாதைக்காக ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே போல் பேசிய என்னிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை..

இது போலவே மருத்துவரைக் காணச் செல்கையிலும் எரிச்சலான பதிலை செவிலியரிடம் இருந்து பெற நேர்ந்தது.. எல்லாருக்கும் பிரச்சனை சகஜம் தான்.. ஆனால் இவ்வாறு எரிச்சலோடும் சிடுசிடுப்போடும் பதில் சொன்னால் அந்த இடத்தில் அமருவதற்கான தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்று தானே பொருள்..

நம் மொழி அழகானது.. அதனை முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், மக்களை நேரடியாக சந்தித்துப் பணியாற்றும் வகை வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணிக்கான தகுதியுடனும் பயன்படுத்த வேண்டும். நம் பேச்சு தான் நம் மரியாதைக்கான முதல் படி. அதனை தவறாகப் பயன்படுத்தினால்
மிஞ்சுவது அவமானமே.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று."


-கனிவுடன்,

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2011, 09:47 AM
விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு இன்று அந்த அந்த தமிழையே மறந்தவர்களிடம் எதிர்பார்த்தால் கிடைக்குமா என்ன? ..மற்றொன்று தற்போதிருக்கும் வேலைப்பளுவில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வது சாதரணமானதுதான் அதிலும் நம்நாட்டில் சர்வசாதாரணமான ஒரு நிகழ்வு ..உங்களுக்கு நிகழ்ந்த நிகழ்வு இங்கு இருப்பவர்களுக்கு நிகழ்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கிடைத்துவிட்ட ஒரு சந்தோசம் தான் இருக்கும் ...சீர்கெட்டு விட்ட நிர்வாகத்தினை கண்டு வருத்தபடாமல் தங்கள் பணியினை சிறப்புற செய்யுங்கள் பூமகள் அவர்களே ...

குறிப்பு : இதுக்குதான் இங்கே வரும் போது சொல்லிகிட்டு வரணுங்கிறது விருந்தோம்பல்ன்னா என்னனு அப்ப தெரிஞ்சிருக்கும் ...இனிமே இப்படி சொல்லாம திடுப்திடுப்புன்னு வந்து அவஸ்தை படாதிங்க....

இராஜேஸ்வரன்
13-02-2012, 08:27 AM
இந்த முறை இந்தியப் பயணத்தில் தோன்றியது.

இதிலிருந்து சகோதரி அயல்நாட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்த காலத்தில் நீங்கள் குறிப்பிடும் 'விருந்தோம்பலும், மரியாதையும், அன்பும்' சொந்த உறவினர் வீட்டில் கிடைப்பதே பெரியக்காரியமாக இருக்கும் போது, அரசாங்க ஆபிஸிலும், ஆஸ்பத்திரிகளிலும் எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்?

அரசாங்க ஆபிஸில் வேலை நடக்க வேண்டுமென்றால் நாம்தான் அவர்களை (பணியாளர்களை) விருந்தோம்ப வேண்டும். அதற்கென்று ஆட்கள், ஒவ்வொரு வேலைக்கும் ஃபிக்ஸட் ரேட்டோடு காத்திருக்கிறார்கள். கொடுக்கும் பணத்திற்கு (லஞ்சத்திற்கு) ஏற்ப பலனும் கிடைக்கும், உங்களுக்கும் நேரம் மிச்சமாகும்.

எங்களுக்கெல்லாம் இது ரொம்ப சகஜமப்பா!

தாமரை
13-02-2012, 09:03 AM
என்னவோ உங்களிடம் நிறைய பேசணும்னு ஆசைப்பட்டாங்க போல...உங்க குரல் அவ்வளவு இனிமையானது போல...

:D:D:D:D

அன்புரசிகன்
13-02-2012, 09:21 PM
என்னவோ உங்களிடம் நிறைய பேசணும்னு ஆசைப்பட்டாங்க போல...உங்க குரல் அவ்வளவு இனிமையானது போல...

:D:D:D:D

எனக்கும் இதைப்படித்தவுடன் ஏறத்தாள இதே நினைவு தான்...

அப்பரும் திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி கதவு திறந்து மூடுவது பற்றியதில் (யார் மூடியது யார் திறந்தது என்று தெரியவில்லை.) திருஞான சம்பந்தர் பாட உடனடியாக நடந்ததாம். ஆனால் அப்பருக்கு நீண்ட நேரத்தின் பின்னர் தான் நிகழ்ந்ததாம். இதனால் மனமுடைந்த அப்பருக்கு திருஞானசம்பந்தர் கொடுத்த பதில் ஏறத்தாள இது தான். உங்களது குரலினால் சொக்கிய இறைவன் மெய்மறந்துவிட்டான் என்றாராம்....

சரியோ பிழையோ.... நேர்வழி யோசனைகள் நன்மையையே பயக்கும்.

அக்னி
14-02-2012, 11:35 AM
பூமகள்...

என் மனதில் படுவது என்னவென்றால்,
மாறியது இவையல்ல.

நாடு மாறியதால் உங்களுக்குள் வந்த
மாற்றமே இது.

இங்கிருக்கும் போது இது வழக்கமாக நமக்கும் பழக்கமாகிப் போனது.
இடம் மாறிச்சென்றுவர மாறிய இடப் பழக்கம், வழக்க விரோதமாக இங்கும் எதிர்பார்க்க வைக்கின்றது.

உதாரணமாக,
நம் நாட்டில் காவல்துறையைக் கண்டால் பயம். இயலுமானவரை விலத்திச் செல்ல முற்படுவோம்.
இங்கெல்லாம் காவல்துறையோடு சர்ச்சைப்படுவோம்.
மீண்டும் நம் நாடு செல்கையில் காவல்துறையோடு சர்ச்சைப்படுவது உசிதமானதா...???

சிவா.ஜி
14-02-2012, 09:10 PM
அக்னி சொல்வது யோசிக்கக்கூடியதே பூம்மா. நம்மைப்போல வெளிநாட்டுவாசிகளுக்கு இவை வித்தியாசமாகத் தெரியும்....ஆனால்...தாய்நாட்டுக் கணக்கு வேறுமாதிரி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 03:06 PM
நீங்கள் இன்னும் நமது அரசாங்க பேருந்துகளில் பயணம் செய்ததில்லை போல் தெரிகிறது. நின்ற பேருந்தில் நீங்கள் ஏற முற்படும்போது உங்களை வாழ்த்தி வரவேற்பார் பேருந்தின் நடத்துனர். காலியாகவுள்ள இருக்கையில் நீங்கள் அமர்ந்தவுடன் உங்களிடம் அன்புடன் பேசி விசாரித்து பயணச்சீட்டை கொடுப்பதோடு மட்டுமல்லாது உரிய சில்லறையை முறையாகக் கொடுத்து புன்முறுவல் பூப்பார். நீங்கள் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் நடத்துனர் கதவு படிக்கட்டு வரை வந்து உங்களை பார்த்து நிதானமாக இறங்குங்கள் என்று சொல்லி நீங்கள் இறங்கியவுடன் 'ரைட் போகலாம்' என்று ஓட்டுனருக்கு விசில் அடித்து உங்களிடம் இருந்து விடை பெறுவார். அவ்வாறே பேருந்து ஓட்டுனரும். எல்லோரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகுவார். அலுங்காமல், குலுங்காமல் வண்டியை ஓட்டுவார். :D

பூமகள்
16-03-2012, 03:18 PM
அக்னி அண்ணா..

நீங்கள் சொல்வது புரிகிறது.. நான் அப்படியே நம் ஊரில் நடக்க வேண்டுமென்று ஆசைப்படவில்லை..

மரியாதைக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்ற தமிழினம்.. குறிப்பாக எங்கள் ஊர், கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது ஒவ்வொரு முறை செல்கையிலும் காண முடிகிறது..

அதையே குறிப்பிட நினைந்தேன்... மற்றபடி.. நம் ஊரில்.. அதுவும் அரசாங்க அலுவல் சம்பந்தமாக அனைத்தும் எவ்வாறு போகும் என்று நானறிவேன் அண்ணா..

சிவா அண்ணா சொல்ல வருவதும் புரிகிறது. :)

அமரன்
16-03-2012, 10:24 PM
என்னவோ உங்களிடம் நிறைய பேசணும்னு ஆசைப்பட்டாங்க போல...உங்க குரல் அவ்வளவு இனிமையானது போல...

:D:D:D:D

அதானே.. இந்தளவு பொறுமையாகப் பதில் சொல்லி இருக்காங்க..

அமரன்
16-03-2012, 10:27 PM
சிஸ்டமட்டிக்காக வேலை செய்ய, நம்நாட்டு எல்லா நிலையங்களும் மேம்படவில்லை.

பலருக்கு அவர் ஒருவர்..

அவருக்கு நீங்கள் பலருள் ஒருவர்..

நீங்கள் நினைவில் வைத்திருப்பதும், ஞாபகமூட்டுவதும் அவர் நினைவில் வைத்திருப்பதை விடவும், இலகுவானது இருவருக்கும்.